...

20 views

மானின் வீரம்
ஓர் காட்டில் ஒரு மான் சுதந்திரமாக சுற்றி திரிந்தது. தன் கூட்டத்துடன் சேர்ந்து நமது காட்டில் தான் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து கொண்டது. ஒரு முறை அதன் கூட்டத்துடன் சேர்ந்து அருகே உள்ள நீர்நிலையில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கொடிய மிருகம் கூட்டத்திலிருந்த ஒரு மானை பாய்ந்து பிடித்து இழுத்து சென்றது. மற்ற மான்கள் அனைத்தும் அதை பார்த்ததும் பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. தன்னுடைய சக மான் ஒரு கொடிய மிருகம் தாக்கி கொன்று இழுத்து செல்லப்படுவதை பார்த்து தம் கூட்டத்தில் இந்த காட்டில் நமக்கு பாதுகாப்பு இல்லை என அதுக்கு புரிந்தது. ஏன், தன் சக மானை இழந்தோம் என்று நினைத்து வருந்தியது. சில நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு நீர் நிலையில் அனைத்து மான்களும் அமைதியான அந்த இடத்தில் தண்ணீர் குடித்தன. அப்போது அங்கு பதுங்கியிருந்த அந்த கொடிய மிருகம் இந்த மான் மீது பாய்ந்தது. வழக்கம் போல் எல்லா மான்களும் ஓடி விட்டன. இந்த கொடிய மிருகத்திடம் மாட்டி கொண்டோமே இது நம்மை கொல்லாமல் விடாது என்று உணர்ந்தது. அமைதியாக கண்களை மூடியது. அந்த மிருகம் மானை மெல்ல இழுத்து கொண்டு சென்றது. அந்த தருணத்தில் அந்த மான் நினைத்தது எப்படியும் இந்த மிருகம் கொல்ல தான் போகிறது. ஏன் இதற்கு அடிபணிந்து பயந்து சாக வேண்டும் முடிந்த வரை மோதி பார்ப்போம் என்று இறைவனை வேண்டி கொண்டது அந்த கொடிய மிருகத்தின் முகத்தில் இறைவனாகிய இயற்கை கொடுத்த தன் கூரிய கொம்புகளால் முட்டி வேகமாக தாக்கியது. மானின் அந்த தாக்குதலை பொறுக்க முடியாத அந்த மிருகம் மானை அதன் பிடியிலிருந்து விடுவித்தது. மான் விடாமல் அந்த மிருகத்தை தொடர்ந்து முட்டி அதன் பலத்தை, வேகத்தை காட்டியது. அந்த கொடிய மிருகம் முகத்திலிருந்து ரத்தம் வடிந்தது வலி தாங்க முடியாத அந்த மிருகம் காட்டிற்குள் ஓட்டம் பிடித்தது. தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த மான் கூட்டம் அந்த மிருகத்தை சுற்றி வளைத்து எல்லாம் சேர்ந்து தாக்கி முட்டியே கொன்றன. அந்த சிறிய மானின் வீரத்தை நினைத்து அனைத்தும் மகிழ்ந்தன.

தினகரத்தேவன்
© thinakaradevan