...

12 views

நண்பனின் தங்கை
இந்த கொரோனா சூழலில் பக்கத்து ஊரில் என் உறவினர் வீட்டில் ஒரு திருமண விழா நடந்தது.💃🕺🏼மணமகன் ஊர் மிக தொலைவில் இருந்தது. 🛣️
மறுநாள் காலை அங்கு திருமணம் நடக்கவிருந்தது. 💐
அவர்கள் செய்த மொய் பணத்தை திரும்ப செய்ய வேண்டும். 💰💰💰
மணமகன் ஊர் மிக தொலைவு ஆகையால் இரவு பெண் அழைப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கு மொய் எழுதிவிட்டு வர நண்பர்களுடன் அங்கு புறப்பட்டோம்.🏍️🛵🏍️🛵🏍️
வழக்கமான இதுபோன்ற விழாக்களுக்கு முந்திக்கொண்டு செல்வதே அங்கு ஏதாவது உறவுக்காரப் பெண் வரும்.💁 அதை சைட்" அடிக்கலாம் என்றுதான்...🙋‍♂️
அவ்வாறு சென்றிருக்கயில் ஒருவன் சொன்னான்"இங்க உள்ள எல்லாரும் ஒனக்கு தங்கச்சி மொறை" என்று...🤦🏻‍♂️
வந்ததுக்கு வேலை இல்லை என நினைத்து மொய் எழுதிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். 🍛🍲அதிஷ்டவசமாக என் நண்பர்கள் இருவருடன் எனக்கு இடம் கிடைத்தது. 🍻சாப்பிட்டு சோர்வாக தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்த பொழுது ஒரு அழகிய பெண் அங்கும் இங்கும் உலாவினாள். 👩 சற்றே தடுமாற்றம் இவளும் நமக்கு சகோதரி முறையோ என்று...🙍🏻‍♂️
அங்கு நின்ற உறவுக்கார மைத்துனரிடம் அந்த பெண்ணைப் பற்றி கேட்டேன். 🗣️"மாப்ளே அந்த பொண்ணு உங்களுக்கு மொறதான் மாப்ள. பாருங்க" என்றார். சற்றே மகிழ்ச்சி 😇
பின்னர் சைட் பண்ண ஆரம்பித்தேன்.🧑 அவளுடன் நின்ற ஒருத்தி என்னைக் காண்பித்து அவளிடம் ஏதோ கூறினாள்.🙇🏻‍♀️ சற்றே அவள் என்னைப் பார்க்க அந்த ஆனந்ததிற்கு அளவில்லை...🙆🏻‍♂️
அதன் பின்னர் அவள் என்னைப் பார்க்கவே இல்லை என்பது வேறு விடயம். 😜
ஆனால் நான் அவளைப் பார்க்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்து விட்டது... ☺️
அது போதும் என்றது மனம்...🤗
பின்னர் எவ்வளவோ நோட்டம் விட்டும் அவள் என்னைப் பார்க்காதது சிறிது வருத்தத்தை அளித்தது.🙃
ஏதோ அறை குறை மனதுடன் வீட்டிற்கு கிளம்பினேன்.😌
அதற்கு முன் மைத்துனர் ஒருவர் அவள் சொந்த ஊர் இது இல்லை என்றும் அவள் உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் அவள் பெயர் கூட தெரியாது என்றும் கூறினார். 🤗அவர் கூறியதில் உண்மை இருந்தது. அவளின் சொந்த ஊர் எனக்கு பக்கத்து ஊர் தான். அங்கு எனக்கு பள்ளி நண்பர்கள் இருந்தனர். 😍அவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். 🤔
அன்று உறங்க சென்றபோது அவளின் சில நினைவுகள் வந்து போக களைப்பாக இருந்த எனக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் விரைவாக தூக்கம் வந்தது. 😴
அடுத்த நாள் அவள் ஊர் நண்பன் ஒருவன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்ஸ் வைக்க அவளின் ஞாபகம் வந்து அவளைப் பற்றி விசாரித்தேன்..... ☁️
"மச்சான் உங்க ஊரு பொண்ணு ஒன்ன மஞ்சுவிடுதில பாத்தேன் மச்சான்,நல்லாத்தான் இருந்துச்சு"என நான் கேட்க "ஆமா மச்சான் நல்லாத்தான் இருக்கும்" என்றான் அவன். அந்த ஊரில் இருக்கும் உறவுகளை அறிந்திருப்பான் போல... அங்கு அந்தப் பெண் தான் சென்றிருக்க வேண்டும் என்று அவ்வாறு கூறினான். மேலும் "அவள் பேர் என்ன என்று கேட்டேன்" அதற்கு அவன்"அஜித்தா" என்று சொல்லி "எனக்கு சிஸ்டர்" அப்டின்னு சொன்னான். அதற்கு "அதுனாலதான் மச்சான் கேட்டேன்" என்றேன். பின்னர் அவளின் வீட்டைச் பற்றி விசாரித்தேன். "அந்தப் பொண்ணு வீடு எங்க மச்சான் இருக்கு" என்றேன். அதற்கு அவன் "எங்க ஊரு ஸ்ட்ராட்டிங்.லயே இருக்கு மச்சான் என்றான்" "ஓ மாரி வீட்டுக்கு பக்கமா" என்றேன். மாரிமுத்து, என்னோட ஸ்கூல் ஜூனியர். நல்ல பையன். காமெடி பீஸ். அதற்கு அவன் "அவனோட தங்கச்சி தான் மச்சான் அது" என்றான் சிரித்துக் கொண்டே...
எனக்கு ஒன்றும் பெரிதாக வருத்தம் இல்லை. ஒரு நல்ல வேலக்கி மட்டும் தான் போகணும். அதுக்கு மட்டும் போய்டா அவன் அவன் வான்டட்ஆ வந்து பொண்ணு குடுப்பான்னு தோணுச்சு...
நடக்கும் கண்டிப்பா...

#story #quarantine #corona #pudukkottai #tamilnadu #puthukkottai #kottaikkadu
Thanjavur #india #tamil #தமிழ்