...

11 views

முதல் காதல்....
நம்ம முதல் கதையோட முதல் ஹீரோயின் பெயர் ப்ரியா .ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது ஆனா ஒரு தடவ பார்த்தா மறுபடியும் பாக்கணும்னு தோணும்.வீட்டுக்கு ஒரே பொண்ணு.அப்பா செல்லம்.அம்மா அப்பாவ விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்தது இல்ல.முதல் தடவ காலேஜ் அண்ட் ஹாஸ்டல் லைப் 4 வர்ஷம் கோவை போறா.

இன்னும் ஒரு வாரத்துல காலேஜ்.முதல் முறையா அம்மா அப்பாவ விட்டு தனியா ஹாஸ்டல்ல போய் படிக்க போறேன் கொஞ்சம் பயமா இருக்குடி சுபா.(சுபா ப்ரியா ஓட ஸ்கூல் பிரென்ட்).பயப்படாதடி அங்க பிரென்ட்ஸ் கெடச்சுட்டாங்கன்னா ஜாலியா இருக்கும் பாரு.ஹாஸ்டல் லைப் என்ஜாய் பண்ணுடி.செறி ஓகே டி சுபா அம்மா கூப்படறாங்க நான் அப்பறமா கால் பண்றேன்.

ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரில காலேஜ்க்கு வந்தாச்சு முதல் நாள் அம்மா அப்பா ஹாஸ்டல்ல விட்டுட்டு கிளம்பிட்டாங்க அழுகையா வருது சமாளிச்சுட்டு ரூம்க்கு போனேன் ரூம் மேட்ஸ் 2 பேர். உமா , வர்ஷா .முதல் நாளே பயங்கரமா கிளோஸ் ஆயிட்டோம். மூணு பேரும் ஒரே டிபார்ட்மென்ட்..

நெக்ஸ்ட் டே காலேஜ் முதல் நாள்.டிபார்ட்மென்ட் பங்க்ஷன் அப்பதான் அவனை முதல் முறையா பார்தேன்.கார்த்திக் M.E first இயர் டான்சர்.அவனோட டான்ஸ் பெர்பார்மன்சும் அவனை விட அழகா இருஞ்சு.

love at first sight உண்மைன்னு இப்பதான் ப்ரியா க்கு தெரியுது.இப்படியே ஒரு வாரம் போயிருச்சு இந்த ஒரு வாரத்துல பல தடவ கார்த்திக்க சைட் அடுச்சாச்சு போய் பேசற தைரியம் இல்ல பட் பேசணும்னு நெனச்சுட்டு இருந்தப்ப தான் அந்த வாய்ப்பு தேடி வருது.maths கிளாஸ் செம தூக்கம். சார் கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டு ரெண்டு பேர் உள்ள வந்தாங்க யார்டா இது தூக்கத்த டிஸ்டர்ப் பண்றதுனு திரும்பி பார்த்தா ஓ மை காட் அது கார்த்திக் அவனவே பாத்துட்டு இருந்தேன் முதல் தடவ கார்த்திக் ஓட வாய்ஸ் சூப்பரா இருந்துச்சு.கார்த்திக் பேச ஆரம்பிச்சான்

ஹாய் பிரென்ட்ஸ். நான் கார்த்திக் அண்ட் இவன் என் பிரென்ட் பிரவீன். நாங்க M.B.A first இயர். நாங்க ஒரு டான்ஸ் கிளப் ஸ்டார்ட் பண்ணிருக்கோம் டான்ஸ் நல்லா பண்றவங்க பிளஸ் interest இருக்கறவங்க எங்க கிளப்ல ஜாயின் பண்லாம். டெய்லி ஈவினிங் one hour practice இருக்கும். காம்பெடிஷன் இருந்தா od வாங்கி தருவோம்.அவன் சொல்லி முடிக்கர்துக்கு முன்னாடியே நான் பேர் கொடுத்துட்டேன் பட் அவன் என்ன திரும்பி கூட பாக்கல. பிரவீன் அண்ணா தான் பேர் எழுதுனாங்க என்னோட சேர்ந்து 1 பையனும் பேர் குடுத்தான்.டெய்லி ஈவினிங் 5 மணிக்கெல்லாம் practice கு போயிருவேன்.நான் கார்த்திக் கிட்ட பேசலாம்னு போவேன் பட் அவன் கண்டுக்கவே இல்ல. பிரவீன் அண்ணா நல்லா பேசுவாங்க. எங்க டான்ஸ் கிளப்ல மொத்தம் 5 பேர் 2 girls நானும் cse டிபார்ட்மென்ட் ல இருந்து ஒரு பொண்ணு அவ பேர் பவித்ரா. பவி முதல் நாளே என் பெஸ்ட் பிரென்ட் ஆயிட்டா. 3 பாய்ஸ் கார்த்திக் ,பிரவீன் அண்ணா, என் கிளாஸ் அப்துல் அவனும் என் பிரென்ட் ஆயிட்டான்.ஒரு காம்பெடிஷன் போய் வின்னும் பண்ணிட்டோம்.அப்ப அப்ப கார்த்திக் பேசுவான் கொஞ்ச நாள்லயே நல்லா பேச ஆரம்பிச்சுட்டோம் 5 பேரும் நல்லா பிரென்ட்ஸ் ஆயிட்டோம்.

first செமஸ்டர் வந்தாச்சு சோ டான்ஸ் practice கட் aayruchu.கார்த்திக்க அவ்வளவா மீட் பண்ண முடில கொஞ்ச கஷ்டமா தான் இருந்துச்சு.ஒரு வழியா எக்ஸாம் முடுஞ்சு ஒரு மாசம் லீவ்க்கு வீட்டுக்கு வந்தாச்சு.அம்மா அப்பா கூட இருக்கறது ஹாப்பிதான் இருந்தாலும் கார்த்திக்க பாக்காம இருக்கறது கஷ்டமா இருக்கு லவ்னா இப்டிதா இருக்குமா பட் இந்த பீலிங்கும் நல்லதா இருக்கு.லீவ் முடுஞ்சு காலேஜிக்கு வந்தாச்சு ஈவினிங் கார்த்திக்க பாத்தவனே அவ்ளோ சந்தோசம் பட் அவன் முகத்துல ஒரு ரியாக்ஷனும் இல்ல.அவனோட விசயத்துல அவன் கரெக்டா இருந்தான்

பிரென்ட்ஸ் 2 வீக்ஸ்ல ஒரு காம்பெடிஷன் வருது சென்னைல அதுல வின் பண்ணணும்.இன்னைல இருந்து அதுக்கு practice பண்ணுவோம். நானும் ப்ரவீனும் சாங்ஸ் செலக்ட் பண்ணிருக்கோம் நல்லா இருக்கானு பாருங்க இல்லேன்னா வேற ஏதாச்சும் சாங்ஸ் இருந்தா சொல்லுங்க மாத்திக்குவோம்ணு கார்த்திக் சொன்னான்.

ஒரு சில சாங்ஸ் மட்டும் மாத்தி 2 வீக்ஸ் full practice பண்ணோம்.காலேஜ்லயும் வீட்லயும் பெர்மிஷ்ஷன் வாங்கிட்டு 5 பேரும் சண்டே மார்னிங் சென்னைக்கு train ல கெளம்புனோம்.3 டேஸ் காம்பெடிஷன்.ட்ரெயின் journey ஜாலியா பாட்டு பாடிட்டு விளையாடிட்டு சென்னை வந்ததே தெரில.3 டேஸ் காம்பெடிஷன் நெறய காலேஜ் ல இருந்து வந்துருந்தாங்க.காம்பெடிஷன் ல ஜெயசுட்டா கார்த்திக் கிட்ட லவ் சொல்லிரனும்ணு நெனச்சேன் அதுக்காகவே கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன் நாங்க ஜெயிக்கணும்னு அதே மாதிரி ஜெயிச்சுட்டோம் எல்லாரும் செம ஹாப்பி. ஆனா எனக்குதான் பயமா இருந்துஞ்சு because கார்த்திக் கிட்ட propose பண்ணி ஆகணுமே.மறுநாள் ட்ரெயின் ஏறினோம். என்ன தவற 4 பேரும் செம ஜாலியா விளையாடிட்டு வந்தாங்க.

face வாஷ் பண்ணிட்டு வரலாம்னு பாத்ரூம் போனேன். face வாஷ் பண்ணிட்டு வெளில வந்தா கார்த்திக் நின்னுட்டு இருந்தான் எண்ட்ரன்ஸ்ல.இதுதான் நல்ல சான்ஸ் கார்த்திக் கிட்ட சொல்லிரலாம்னு தோணுச்சு ஆனா கை கால் எல்லாம் நடுங்க ஸ்டார்ட் ஆயிருச்சு அப்டியே சீட்கே போயிறலாம்னு நடந்தேன் அவனே என்கிட்டே பேசினான்.

ஏன் ப்ரியா ஒரு மாதிரி இருக்க உடம்பு ஏதும் செரி இல்லையா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லதா இருக்கேன் ஏன்!

இல்ல உன் face டல்லா இருக்கு...