...

7 views

காதல் (LOVE)

© நாவல்
[#காதல் part 1

சிறந்த தொழில் அதிபர்களுக்கான விருது வழங்கும் விழா டில்லியில் நடந்துக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு நபர்களின் திறமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு சிறந்த தொழில் அதிபர் விருது வழங்கப்பட்டது.

எல்லோருக்கும் வழங்கப்பட்ட விருதுகளில் மிகவும் பெரிய விருதுகளையும் அதிகமான விருதுகளையும் வாங்கியது கௌதமின் கம்பெனி தான்.

கௌதமின் வயது 40 இருக்கும்.

இந்தியாவின் சிறந்த கம்பெனியாக கௌதமின் கம்பெனியை தேர்வு விருது வழங்கினார்கள்.

கௌதம் வளர்ச்சியை பற்றி பேச மற்ற தொழில் அதிபர்கள் மேடைக்கு வந்தனர்.

ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பேச தொடங்கனர்.

ஒவ்வொரு ஆணும் எந்தளவு தொழிலுக்கு முக்கியத்துவம் குடுக்கிறமோ அதே அளவிற்கு தங்களுடைய குடும்பத்திற்கும் முக்கியத்துவம் குடுத்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் காதல்,கல்யாணம் இல்லாமல் தனியாகவே இருப்பதாலோ என்னவோ தொடர்ந்து 2 வருடங்களாக கௌதம் சிறந்த தொழில் அதிபர் விருதை பெறுகிறார்,
ஏனென்றால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினைகள் வரும் போது தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் சமாளிக்க முடியாது,
அந்த குடும்ப கவலை இல்லாததால் தான் கௌதமின் கவனம் முழுவதும் தொழிலில் மட்டுமே இருக்கிறது அதனால்தான் அவரின் கம்பெனி முன்னிலையில் இருக்கிறது என்று மற்ற தொழில் அதிபர்கள் பேசி முடித்தார்கள்.

அனைவரும் பேசி முடித்ததும் தன்னுடைய வெற்றியை பற்றி பேச கௌதமை மேடைக்கு அழைத்தனர்.

கௌதம் மேடைக்கு வந்ததும் முதலில் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
காதல், கல்யாணம் என்று எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் இருப்பதால் தான் தொடர்ந்து நான் 2 வருடங்களாக சிறந்த தொழில் அதிபர் விருதை நான் வாங்குவதாக அனைவரும் கூறுகிறார்கள்.

ஆனால் அது உண்மை இல்லை
இன்று இந்த இடத்தில் நான் நிற்ப்பதற்கு காரணமே என் மேல் ஒரு பெண் வைத்திருக்கும் நம்பிக்கையும் அந்த பெண் மீது எனக்கு இருக்கும் காதலும் தான் இப்போ கூட அந்த பொண்ணும் இந்த நிகழ்ச்சியில் தான் இருக்கிறார்கள், உங்கள் அனைவரின் முன்பும் என்னுடைய காதலை நான் என்னுடைய 40 வயதில் கை பிடிக்க போகிறேன், என்று அனைவரின் முன்பும் கௌதம் பேசினார்.

அந்த பெண் யார் என்று அனைவரும் மிகவும் ஆவலாக கேட்டனர்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண் இன்னொருவர் மனைவியாகிவிட்டார்,
ஆனால் அந்த பெண் தன் கணவரோடு இந்த நிகழ்ச்சியில் தான் உள்ளார் என்று கௌதம் சொன்னார்.

இன்னொருவர் மனைவியை போய் எப்படி நீங்கள் இந்த இடத்தில் காதலியாக கை பிடிக்க போகிறேன் என்று சொல்லுறிங்க இது மிகவும் தவறான செயல் என்று அனைவரும் கௌதமை பார்த்து கோபமாக கத்தினார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை முதலில் அனைவரும் கேளுங்கள்,
ஏனென்றால் என் காதலில் ஏற்பட்ட நெருக்கடி என்பது அப்படிப்பட்ட ஒரு சோதனையாக அமைந்தது.

நம்பிக்கையான ஒரு நண்பன் இருந்தால் உண்மை காதல் என்றும் கை கூடும் என்பதற்கு என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு உதாரணம் என்று சொல்லிவிட்டு தன்னுடைய காதலுக்காக கௌதம் பட்ட கஷ்டம்,அசிங்கம் எல்லாம் தாண்டி இப்போ 40 வயதில் இன்னொருவர் மனைவியாக இருக்கும் தன் காதலியை எப்படி கை பிடிக்க போகிறார் கௌதம்?!

தன்னுடைய காதல் வாழ்க்கையை பற்றி அனைவரிடமும் சொல்ல தொடங்கினார் கௌதம்.

(சற்றும் எதிர் பார்க்காத பல திருப்பங்களுடன் கூடிய ஒரு காதல் கதையை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்க போகிறோம் தொடர்ந்து ஆதரவை தாருங்கள் நண்பர்களே)

PART 2
[#காதல் part 2

(அலுவலகத்தில் சில பணி சுமைகள் இருக்கும் காரணத்தால் கதையின் அடுத்த பதிவு தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் நண்பர்களே)

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பற்றி கௌதம் சொல்ல தொடங்கினான்.

சரியாக 22 வருடங்களுக்கு முன்பு 1998 அன்று தான் நான் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தேன்.

சாதாரணமான நடுநிலை குடும்பம் தான் என்னுடையது,
எனக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது யாருடனும் நான் பழகுவதும் இல்லை,
அதற்கு காரணம் என்னுடைய தோழி ஜாஸ்மீன் தான்.
சிறுவயதில் இருந்தே என்னுடைய குடும்பமும்,ஜாஸ்மீனின் குடும்பமும் நல்ல நண்பர்களாக தான் பழகிக்கொண்டு இருக்கிறோம்.

கௌதம் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தான், அவன் கூடவே படிப்பதற்கு ஜாஸ்மீனும் அதே இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள்.

ஜாஸ்மீன் குடும்பத்தில் அவளுக்கு 2 அண்ணன்கள் சற்று வசதியான குடும்பமும் கூட, முஸ்லீம் பெண்களுக்கு அவர்கள் வீட்டில் சற்று கட்டுப்பாடுகள் இருக்கும் அதேபோல் தான் ஜாஸ்மீன்க்கும் இருந்தது.

கல்லூரிக்கு படிக்க செல்லும் நேரம் தவிர நண்பர்கள் கூட வெளியே செல்வதற்க்கு எல்லாம் ஜாஸ்மீன்யை அவளின் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கும் ஒரே இடம் கௌதமின் வீடு மட்டும்தான்.

கௌதமும்,ஜாஸ்மீனும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு ஒருவருக்கொருவர் எந்தவொரு விஷயத்தையும் மறைக்காமல் பழகி வந்தனர்.
சில சமயங்களில் கௌதமின் கல்லூரி பீஸ் கூட ஜாஸ்மீன் தான் கட்டுவாள்.

எப்போதும் கல்லூரி முடிந்து கௌதமும்,ஜாஸ்மீனும் ஒன்றாக தான் வீட்டிற்கு செல்வார்கள்.
ஆனால் தொடர்ந்து ஒரு 10 நாட்களாக கல்லூரி முடிந்ததும் கௌதம் வருவதற்குள் ஜாஸ்மீன் கிளம்பி போய்விடுவாள்.

அதன் பிறகு நான் வருவதற்கள் நீ ஏன் வேகமாக வீட்டுக்கு போறனு கௌதம் நேரடியாக ஜாஸ்மீனிடம் கேட்டான்.

ஆனால் தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மலுப்பிக்கொண்டிருந்தாள் ஜாஸ்மீன்.
கௌதமிற்கு ஏதோ தப்பாக தோன்றியது,
அதனால் கல்லூரி முடிந்து ஜாஸ்மீன் பின்னாடியே தொடர்ந்து போனான் கௌதம்.

ஒரு டவுன் பஸ்ஸில் ஏறி மருத்துவ கல்லூரி வாசலில் இறங்கினாள் ஜாஸ்மீன் அவளை பின் தொடர்ந்து கௌதமும் அங்கே வந்தான்.
இங்கே எதுக்கு இவ வந்தாள் என்று எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கௌதம்.

அப்போதுதான் மருத்துவ கல்லூரி உள்ளே இருந்து ஒருத்தன் வெளியே வந்து ஜாஸ்மீன் கூட சிரித்து சிரித்து பேசுவதை பார்த்தான் கௌதம்,
ஜாஸ்மீனும் அவனுடன் சகஜமாக பேசி சிரிப்பதை பார்த்து அதிர்ச்சியானான் கௌதம்.
அதற்கு காரணம் சிறு வயதில் இருந்தே எந்தவொரு விஷயத்தையும் ஜாஸ்மீன், கௌதமிடம் மறைத்ததில்லை,
ஆனால் இப்படி ஒரு பையன் கூட பேசி பழகுவதை ஏன் ஜாஸ்மீன் ஏன் தன்னிடம் சொல்லவே இல்லை என்று சற்று வருத்தப்பட்டான்.

சிறிது நேரம் பேசிவிட்டு அந்த பையன் திரும்பவும் மருத்துவ கல்லூரிக்குள் சென்று விட்டான்.
அதன் பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி ஜாஸ்மீனும் வீட்டிற்கு கிளம்பினாள்.

வேகமாக ஓடிச்சென்று கௌதமும் அந்த ஆட்டோவில் ஜாஸ்மீன் கூடவே ஏறிக்கொண்டான்.

கௌதமை பார்த்ததும் என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள் ஜாஸ்மீன்.

என்னாடி லவ் பன்னுற போல என்று சிரித்துக்கொண்டே ஜாஸ்மீனிடம் கேட்டான் கௌதம்.
அவளும் சற்று தயங்கி அதன் பிறகு ஆமாம் என்று புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.

அவன் யார் என்று கௌதம் கேட்டான்.

அவன் பெயர் தீபக், தொழில் அதிபர் விஷ்வநாத்தோட ஒரே பையன் நானும் அவனும் 3 மாசமா லவ் பன்னுறோம் என்று ஜாஸ்மீன் கூறினாள்.
கௌரவத்திற்காக கொலை கூட செய்வது தான் விஷ்வநாத்தின் குணம்

love+religion+status=death

PART3
[#காதல் part 3

தான் ஒருவனை காதல் செய்கிறேன் என்று ஜாஸ்மீன் சொன்னவுடன் கௌதமிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அதற்கு காரணம் அவளுடைய வீட்டில் காதல் கல்யாணம் என்றாலே கட்டுப்பாடற்ற செயல் என்று தான் நினைப்பார்கள் அதிலும் முஸ்லீம் பொண்ணா இருந்துட்டு வேறொரு மதத்தை சேர்ந்த பையனை காதலிப்பது மட்டும் ஜாஸ்மீன் வீட்டுக்கு தெரிந்தால் அவளை கொல்லுறது மட்டுமல்லாமல் கூட போன என்னையும்ல துரத்தி துரத்தி வெட்டுவானுங்க என்று மனதுக்குள் பயந்துக்கொண்டே அமைதியாக ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினான் கௌதம்.

என்னாடா நான் ஒருத்தன லவ் பன்னுறேனு சொல்லுறேன் நீ இப்படி எதுவும் பேசாமல் இருக்க??
ஓஓஓ புரியுது டா உங்கிட்ட இத பத்தி முன்னாடியே சொல்லல அதானே நீ கோபமா இருக்க சரியா டா என்று ஜாஸ்மீன், கௌதமிடன் கேட்டாள்.

இப்ப கூட இத நீ எங்கிட்ட சொல்லாமயே இருந்திருக்கலாம் டி
உன் பின்னாடி நான் வந்து
என் பின்னாடி சனியன வர வச்சுட்டேன் டி மூதேவி என்று மனதுக்குள்ளே பயத்தில் புலம்பி கொண்டிருந்தான் கௌதம்.

சரி நீ லவ் பன்னுறது ஒரு இந்து பையன ஆனா நீயோ முஸ்லீம் அப்புறம் எப்படி டி இந்த காதலை உங்க வீட்டுல ஒத்துக்குவாங்க அத விட முக்கியமான விஷயம் உன் லவ் விஷயத்தை எப்படி வீட்டுல நீ சொல்ல போற என்று கௌதம் கேட்டான்.

அதான் டா எனக்கும் பயாம இருந்தது,
ஆனா இப்போ நான் தைரியமா இருக்கேன் டா ஏன்னா உன் தோழி எனக்காக நீ உயிரையே குடுப்பனு எனக்கு தெரியும் டா நான் தீபக்க லவ் பன்னுறேன் என்னுடைய காதலை என் வீட்டுல சொல்லி சம்மதம் வாங்குற வேலையை நீ பாரு டா மற்ற விஷயம் எல்லாம் நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம் இப்ப நீ சிரிச்சிகிட்டே உன் வீட்டுக்கு போடா என்று கௌதமிடம் சொல்லிவிட்டு ஜாஸ்மீன் அவளுடைய வீட்டுக்கு சென்றாள்.

இப்போ இவள் காதல் செய்யும் சந்தோஷத்தில் இருக்காள் இந்த சமயம் எது பேசினாலும் இவளுடைய மண்டைக்கு ஏறாது நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம் என்று முடிவு செய்து தன்னுடைய வீட்டிற்கு சென்றான்.

மறுநாள் கல்லூரியில் வகுப்புகள் முடிந்ததும் கௌதமும்,ஜாஸ்மீனும் கேண்டினில் உட்கார்ந்து பேசினார்கள்.

நீ லவ் பன்னுற பையனோட அப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா பணக்கார பசங்களோட காதல் எல்லாம் எந்தளவுக்கு உண்மையா இருக்கும் சொல்ல முடியாது,
நாளைக்கே உங்களுக்குள்ள ஏதாவது பெரிய பிரச்சினை வந்தாலும் அவன் பணத்தை வச்சு சரி கட்டிருவான் கடைசியில அவமானமும்,அசிங்கமும் நம்முடைய குடும்பத்திற்கு தான் வரும் நீ மட்டும் ஒரு இந்து பையன லவ் பன்னுற விஷயம் உன் அண்ணனுங்களுக்கு தெரிந்தது உன்னை கொன்றுவானுங்க டி இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நமக்கு சரியா வராது டி தயவுசெஞ்சு நான் சொல்லுறத கோப படாமல் யோசனை பன்னி பாரு டி என்று கௌதம் பொறுமையாக ஜாஸ்மீனுக்க எடுத்துக் கூறினான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு அப்புறம் ஜாஸ்மீன் பேசினாள்.
சரி டா நீ சொல்லுற மாதிரி நான் கேட்டுக்கிறேன்.
ஆனா ஒரே ஒரு முறை எனக்காக தீபக்கிட்ட நீயும் பேசி பாரு டா உனக்கும் அவனை பிடிக்கும் டா ஒரு வேல நேரா பார்த்து பேசியும் அவன் மேலே உனக்கு நம்பிக்கை வரல சந்தேகம் இருந்தால் சொல்லு டா நான் உன் பேச்சு மீற மாட்டேன் டா
இருக்கிறது ஒரு வாழ்க்கை டா இந்த நேரம் இந்த நொடி நமக்கான வாழ்க்கை துணை கண்ணுக்கு முன்னாடியே இருக்கும் போது ஏதேதோ சூழ்நிலை காரணமா வச்சு நமக்கு பிடிச்ச வாழ்க்கையை நாம இழந்திற கூடாது டா தீபக் தான் என்னுடைய வாழ்க்கைக்கு சரியான துணைனு என் மனசு சொல்லுது டா இருந்தாலும் என்னுடைய நண்பன் உனக்கு பிடிச்சா தான் டா எனக்கு முழு சந்தோஷம் என்று ஜாஸ்மீன் பேசி முடித்தாள்.

PART4
[#காதல் part 4

சரி நான் தீபக்கிட்ட நேரா பார்த்து பேசுகிறேன் என்று ஜாஸ்மீனிடம் சொன்னான் கௌதம்.

அதே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபக்கை பார்த்து பேசுவதற்காக ஒரு ஹோட்டல்க்கு வர சொன்னால் ஜாஸ்மீன்.

கௌதம்,தீபக்,ஜாஸ்மீன் மூவரும் நேரில் சந்தித்தனர்.

முதலில் தீபக்கை கௌதமிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஜாஸ்மீன்.

உங்க நட்பு பற்றி ஜாஸ்மீன் என்கிட்ட நிறையவே சொல்லிருக்கா என்று தீபக் கூறினான்.

ஆனா உங்க காதலை பற்றி ஜாஸ்மீன் எங்கிட்ட சொல்லல நானா தான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்னான் கௌதம்.

இதை கேட்டதும் சற்றே தீபக் முகம் வாடியது இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

சரி தீபக் நீங்க முதலில் ஜாஸ்மீனை எங்கே சந்தித்திங்க, இவ மேலே உங்களுக்கு எப்படி காதல் வந்தது உங்ககிட்ட இருக்க செல்வாக்குக்கு உங்க அப்பா இந்த காதலை ஒத்துக்குவாறா ஏதாவது ஒரு தப்பு நடந்தாலும் அதனால பாதிக்கப்பட போறது என்னுடைய தோழி ஜாஸ்மீன் வாழ்க்கை தான் என்று சொல்லி முடித்தான் கௌதம்.

எனக்கு சின்ன வயது இருக்கும் போது என்னுடைய அம்மா இறந்துட்டாங்க அதுக்கு அப்புறம் என்கிட்ட ஆதரவா பேசி என் மேல் பாசம் காட்ட யாரும் கிடையாது அம்மா இறந்த பிறகு என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே பிஸ்னஸ் மட்டும் தான்.
அதுக்காக என் அப்பா மேல் எனக்கு பாசம் இல்லைனு நான் சொல்லல ஆனா பாசத்துக்காக ஏங்கிருக்கேன்.

அப்போ தான் 3 மாசத்திற்கு முன்னாடி உங்க காலேஜ்ல இருந்து சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக எங்களுடைய கம்பெனிக்கு சில மாணவர்கள் வந்தார்கள் அப்போ தான் நான் ஜாஸ்மீன்னை பார்த்தேன்.
அவளை பார்த்ததும் எனக்குள் ஏதோ ஒரு சந்தோஷம் இவ்வளவு நாள் நான் ஏங்கி தவித்த பாசமும் அன்பும் எனக்கு கிடைக்கப்போற மாதிரி மனசுக்குள்ள ஒரு இனிமையான சத்தம்,
அதுக்கு அப்புறம் ஜாஸ்மீன் மீது எனக்கே தெரியாமல் ஒரு காதல் வந்திருச்சு, அப்போ முடிவு பன்னேன் சிறு வயதில் அம்மாவா இழந்த எனக்கு எல்லா உறவுமாக ஜாஸ்மீன்னை எனக்கு கடவுள் குடுத்திருக்கிறார் எந்தவொரு சூழ்நிலையிலும் அவளை இழந்திற கூடாது என்று அப்போவே முடிவு பன்னிட்டேன் என்று கௌதமின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்தான் தீபக்.

நீங்க சொல்கிற எல்லா விஷயமும் கேட்க நல்லாருக்கு தீபக் ஆனா நிஜ வாழ்க்கையில் இந்த அக்கறை பாசம் எல்லாம் என் தோழிக்கு குறையாமல் பார்த்துக்குங்க
எந்தவொரு பிரச்சினை வந்தாலும் உங்க காதலை மட்டும் விட்டு குடுத்திறாதிங்க உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம் என்று தீபக்கிடம் கூறினான் கௌதம்.

இரு இரு நாங்க இருக்கோமா உன்ன தவிர வேற யாரு டா எங்க காதலுக்கு சப்போர்ட் பன்ன போறது என்று கேட்டாள் ஜாஸ்மீன்.

அப்போதுதான் சிரித்துக்கிட்டே அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஹோட்டலில் பின்னாடி இருக்கையில் உட்கார்ந்திருந்த கீர்த்தனாவ முன்னாடி கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்கார சொன்னான் கௌதம்.

இதை பார்த்ததும் ஜாஸ்மீன்க்கு அதிர்ச்சியாக இருந்தது அதற்கு காரணம் கௌதம் ஒரு பொண்ண காதலிப்பது அவளுக்கு அப்போ வரைக்கும் தெரியாது.

கீர்த்தனாவை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் கௌதம்.

இந்த பொண்ண உனக்கு எப்படி டா பழக்கம் என்கிட்ட ஏன் டா சொல்லவே இல்ல என்று கோபமாக கேட்டாள் ஜாஸ்மீன்.

கீர்த்தனாவும் இன்ஜினியரிங் தான் டி படிக்கிறா தீபக் கம்பெனிக்கு சிறப்பு வகுப்புக்கு நம்ம காலேஜ் கூடவே நிறைய காலேஜ் வந்திருந்தது டி அங்கே தான் நான் கீர்த்தனாவ பார்த்தேன் எனக்கு அவ மேலே காதல் வந்தது.

(இந்த காதல் இவர்கள் 4 பேரின் வாழ்க்கையும் ஒவ்வொரு திசையில் பிரித்துப்போட போகிறது அடுத்தடுத்த பகுதியில் மாற்றங்களை பார்ப்போம் நண்பர்களே)

PART5
[#காதல் part 5

கீர்த்தனாவை காதல் செய்யும் விஷயத்தை ஏன்டா இவ்வளவு நாளா என்கிட்ட சொல்லல ஒரு வேல எனக்கு தெரிய கூடாதுனு நினைத்து மறைச்சிட்டுயா என்று கோபமாக கௌதமை பார்த்து கேட்டாள் ஜாஸ்மீன்.

அப்படியெல்லாம் எதுவும் இல்ல டி லூசு உங்கிட்ட சொல்ல நினைத்து காத்திருந்த போது தான் நீ திடீருனு காலேஜ் முடிஞ்சதும் என்ன விட்டுட்டு தனியா சீக்கிரமா போக ஆரம்பிச்ச
சரி உனக்கு வேற ஏதோ பிரச்சினை போல அது முதலில் கண்டுபிடிச்சு உன்ன அதுல இருந்து வெளியே கொண்டு வந்துட்டு அப்புறம் என் காதல் பற்றி உன்கிட்ட சொல்லலாம் என்று நினைத்தேன் அவ்வளவு தான் மற்ற படி உன்கிட்ட மறைக்கனும்னு நான் என்னைக்கும் நினைத்தது இல்ல டி என்று ஜாஸ்மீன்க்கு சொல்லி புரிய வைத்தான் கௌதம்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு ஒரு வழியாக சமாதானமானாள் ஜாஸ்மீன்.

இந்தியாவின் நம்பர் 1 தொழில் அதிபர் குருதேவ்வின் ஒரே மகள் தான் கீர்த்தனா.

கௌதம்,கீர்த்தனா
தீபக்,ஜாஸ்மீன்
இந்த 4 பேரின் காதல் மிகவும் நன்றாகவே சந்தோஷமாக தான் போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் கல்லூரியில் ஜாஸ்மீன்க்கு மதியத்தோடு வகுப்பு முடியவும், சீக்கிரமே கிளம்பி கௌதம் கிட்ட கூட சொல்லாமல் தீபக்க பார்க்க அவன் படிக்கும் காலேஜ்க்கு சென்றாள் ஜாஸ்மீன்.

ஜாஸ்மீன்னை பார்த்ததும் தீபக்கும் அவனுடைய வகுப்புகளை பாதியிலே விட்டுவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.
அதன் பிறகு தீபக் மிகவும் கட்டாய படுத்தி நாம சினிமாவுக்கு போவோம் சாயங்காலம் சீக்கிரம் படம் முடிஞ்சுறும் நீ எப்பயும் போல வீட்டுக்கு போய்விடலாம் என்று ஜாஸ்மீன்னை வற்புறுத்தி சினிமாவிற்கு அழைத்தான் தீபக்,
தீபக் மிகவும் கெஞ்சுவது போல் கேட்கவும் வேறு வழியில்லாமல் சினிமாவுக்கு போவோம் என்று பயந்துக்கொண்டே தலையாட்டினாள் ஜாஸ்மீன்.

அதே சமயம் மாலை கல்லூரி முடிந்ததும் ஜாஸ்மீன் வந்தவுடன் வீட்டிற்கு சேர்ந்து செல்ல காத்திருந்தான் கௌதம்,
ஆனால் எல்லோரும் கல்லூரியில் இருந்து வெளியே வந்துட்டாங்க ஜாஸ்மீன் மட்டும் வரவே இல்லை அங்கிருந்த வாட்ச்மேன் கிட்ட எனக்கு முன்னாடியே ஜாஸ்மீன் போய்ட்டாளா என்று கேட்டான் கௌதம்.

அந்த பொண்ணு வகுப்பு மதியமே முடிஞ்சு போய்ருச்சு என்று வாட்ச்மேன் சொன்னார்.

சீக்கிரம் வகுப்பு முடிஞ்சது கூட நம்மகிட்ட சொல்ல நேரம் இல்லாமல் போய்யிருக்கா அவ நாளைக்கு வரட்டும் மண்டையிலயே கொட்டுவோம் என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றான் கௌதம்.

மறுநாள் காலேஜ்க்கு ஜாஸ்மீன் வரவே இல்லை கௌதமிற்கு எதுவும் புரியாமல் இருந்தான்,
சரி சாயங்காலம் கல்லூரி முடிஞ்சதும் ஜாஸ்மீன் வீட்டுக்கு போய் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கௌதம்.

ஆனால் அதே சமயம் கௌதமை பார்க்க மிகவும் பதற்றமாக கல்லூரி வந்தாள் கீர்த்தனா.

என்ன ஆச்சு எதுக்கு திடீருனு காலேஜ்க்கு பதற்றமா வந்திருக்க என்று கீர்த்தனாவை பார்த்து கௌதம் கேட்டான்.

எதுவும் கேட்காத பேசாமல் என் கூட என்று சொல்லி விட்டு தன்னுடைய காரில் கௌதமை கூட்டிக்கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தாள் கீர்த்தனா.

அங்கே அடிபட்டு காயங்களோடு தீபக் படுத்திருந்தான்.

என்ன ஆச்சு வண்டியில் போகும்போது ஏதாவது விபத்து நடந்ததா என்று கௌதம், தீபக்கிடம் கேட்டான்.

அப்போ நடந்த எல்லா விஷயத்தையும் தீபக், கௌதமிடம் சொல்ல தொடங்கினான்.

நேற்று கல்லூரியில் வகுப்பு சீக்கிரம் முடிந்தது என்று சொல்லி என்னை பார்க்க மதியமே ஜாஸ்மீன் காலேஜ்க்கு வந்தாள்,

சினிமாவுக்கு போனோம் அங்கே தான் நாங்க எதிர்ப்பார்க்காத சம்பவம் நடந்திருச்சு என்று தீபக் சொன்னான்.

PART 6
[#காதல் part 6

சினிமா தியேட்டர்ல என்ன நடந்தது என்று பதற்றமாக கேட்டான் கௌதம்.

நானும் ஜாஸ்மீனும் மதியம் சினிமாவுக்கு போனோம் ஆனா அங்க ஜாஸ்மீன் அண்ணன் எங்களை பார்த்துட்டாரு.
அங்கேயே வச்சு ஜாஸ்மீன்னை அடிச்சுட்டாரு அதை நான் தடுத்தேன் ஆனா அதுக்குள்ள அவ அண்ணணோட ஆட்கள் எல்லாம் அங்கே வந்துட்டாங்க என்னால தனியா சமாளிக்க முடியல என்ன அடிச்சு போட்டுட்டு ஜாஸ்மீன அவ அண்ணன் கூட்டிட்டு போய்ட்டான்.

அங்கிருந்தவங்க தான் என்னை மருத்துவமனையில் சேர்த்தாங்க கண் முழிச்சதும் என்ன பன்னுறது தெரியல உங்ககிட்ட போன் இல்லல அதான் கீர்த்தனாவுக்கு போன் செய்து உங்களை கூட்டிட்டு வர சொன்னேன் தயவுசெய்து ஜாஸ்மீன்க்கு என்ன ஆச்சு மட்டும் பார்த்து சொல்லுங்க என்று தீபக், கௌதமிடம் சொல்லி அழுதான்.

இதை கேட்டதும் கௌதமிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா டா அவ குடும்பத்தை பத்தி தான் நாங்க ஏற்கெனவே சொல்லிருக்கோம்ல ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பம் படிப்பு முடியிற வரைக்கும் அடிக்கடி சந்திச்சு வெளியே சுத்த வேணாம் பிரச்சினை வரும்னு தானே முன்னாடியே சொன்னேன்.
இப்போ பாரு டா உன்னால ஜாஸ்மீன் வீட்டுல பிரச்சினையில மாட்டிக்கிட்டாள் என்று தீபக்கிடம் கோபமாக கத்தினான் கௌதம்.
அதன் பிறகு கீர்த்தனா, கௌதமை சமாதான படுத்தினாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு
அதன் பிறகு கௌதமும்,கீர்த்தனாவும் கிளம்பி ஜாஸ்மீன் வீட்டிற்கு என்ன பிரச்சினை என்று பார்க்க எதுவும் தெரியாதது போல போனார்கள்.

கௌதமை பார்த்ததும் ஜாஸ்மீன் வீட்டில் இருந்த அனைவரும் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தனர்.
ஜாஸ்மீன் ஏன் இன்னைக்கு காலேஜ்க்கு வரல என்ன ஆச்சு எங்கே அவ என்று கௌதம் கேட்டான்.

அவளுக்கு உடம்பு சரியில்ல இனிமேல் காலேஜ்க்கு வரமாட்டாள் நீயும் இங்கே வர கூடாது இனிமேல் உனக்கு இந்த வீட்டு பக்கம் வரதுக்கு எந்த வேலையும் கிடையாது இப்ப கிளம்பு என்று ஜாஸ்மீனின் அண்ணன்கள் கௌதமை வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர்.

வெளியே காரில் காத்திருந்த கீர்த்தனா கௌதமை வெளியே தள்ளிவிடவும் வேகமாக ஓடி வந்து தூக்கினாள்.

கௌதம் குரல் கேட்டதும் அறைக்குள் இருந்த ஜாஸ்மீன் அழுது கொண்டே வெளியே ஓடி வந்தாள்,
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் ஜாஸ்மீன்னை தடுத்து நிறுத்தி அவளை அடித்து உள்ளே இழுத்துச்சென்றார்கள்.

முகம் எல்லாம் இரத்த காயங்களோடும் இரண்டு கைகளிலும் கம்பியை காய வைத்து ஜாஸ்மீன்க்கு சூடு போட்டிருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்ததும் கௌதமும்,கீர்த்தனாவும் மிகவும் கோபமாக அவர்கள் கூட வாக்குவாதம் செய்தார்கள் இருந்தாலும் எந்த பயனும் இல்ல உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மருத்துவமனைக்கு வந்து நடந்ததை எல்லாம் தீபக்கிடம் சொன்னாள் கீர்த்தனா.

இதையெல்லாம் கேட்டதும் எல்லாமே என்னால தான் படத்துக்கு வர மாட்டேன்னு சொன்னவள நான் தான் கட்டாய படுத்தி கூட்டிட்டு போனேன் என்னால தான் எல்லாம் என்று கதறி அழுதான் தீபக்.

போலீஸில் புகார் குடுப்போமா என்று கீர்த்தனா கேட்டாள்.

அப்படியெல்லாம் போலீஸ்கிட்ட நம்ம போயிற முடியாது,
போலீஸ் வரது தெரிஞ்சுகிட்டு கௌரவ கொலைனு சொல்லி ஜாஸ்மீன கொன்றுவானுங்க,
இந்த பிரச்சினைக்கு ஒரு வழி தான் இருக்கு அதுக்கு தீபக் தான் தைரியமா முடியுமா இல்லையானு முடிவு சொல்ல முடியும் என்று கௌதம் சொன்னான்.

ஜாஸ்மீன்னை காப்பாற்ற என்ன வேணாலும் செய்வேன்,
நான் என்ன பன்னனும் சொல்லுங்க என்று தீபக் மிகவும் உறுதியாக கூறினான்.

PART7
COMING SOON ,,,,,,