...

10 views

இவள் யாரோ!
அது மே மாதம். அஜய்க்கு சரியாக போரடித்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை பள்ளிகளில் விடுமுறை இரண்டு மாதம் என சொல்லி விட்டார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வேறு வெளியிடப்படும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ஏனென்றால் அஜய் தான் வகுப்பிலேயே சுமாராக படிக்க கூடியவர் ஆனால் மூளைக்காரன் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் அவனை செஸ் போன்ற சில மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டில் தோற்கடிக்க ஆட்கள் பிறக்கவில்லை என்றே சொல்லலாம். தன்னுடைய ஒரே தோழி நர்மதாவுக்கு போன் செய்தான் அஜய். "என்ன தான் பண்ற போர் அடிக்குது"

" எதாவது பிக்னிக் மாதிரி நம்ம பிரண்ட்ஸோட போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் "

மறுமுனையில் அஜய் பரவசப்பட்டான் நான் நெனச்ச நீ சொல்லிட்டியே.
நர்மதா சிரித்தாள் "நண்பர்கள் வினித்தையும் அன்வரையும் கூட்டிட்டு எங்கேயாவது கூலிங் பிளேசஸ் போலாம். எந்த ஊருக்கு போலாம் தெளிவா சொல்லு ஊட்டி ,கொடைக்கானல் இது மாதிரி..

"வருஷ வருஷம் சம்மருக்கு அங்க தான் போறோம் இந்த தடவ டிஃபரண்ட் எங்கேயாவது போவோம். சரி எங்க போலாம் வினித்துக்கும் அனைவருக்கும் கான்பிரன்ஸ் போடு"

இணைந்தார்கள்.

"ஏதாவது ஒரு நல்ல பிளேஸ் சட்ஜஸ்ட் பண்ணுங்க ப்ரோ என்ஜாய் பண்ற மாதிரி"

அன்வர் யோசித்துக் கொண்டே சொன்னான் நம்ம ஏன் கேரளா சைடு போய் பார்க்க கூடாது.

"பிளேஸ் சொல்லு ப்ரோ"
நர்மதா சொன்னாள்.

நான் டிசைட் பண்ணிட்டு ஈவினிங் பைவ் ஓ க்ளாக் பேசுரேன்.

பேச்சை முடித்துக் கொண்டனர்.

மாலை 5 மணி.
வினித் அன்வருக்கு போன் செய்தான். அன்வர் நான் புக்ல ஒரு நியூஸ் படிச்சேன். ஏதோ காவல்புரம் தென்காசி பக்கத்துல இருக்குன்னு சொன்னாங்க மறுமுனையில் அன்வர் ஆச்சரியப்பட்டான்.
"என்னது காவல்புரமா அப்படி ஒரு ஊர்லா இருக்கா"

" ஆமா ப்ரோ அங்கு ஏதோ குகை சம்பந்தப்பட்ட இது இருக்குன்னு சொல்றாங்க. ஒன்னு சொன்னா நம்ப மாட்டாங்க ஏதோ அரசர்கள் வாழ்ந்த சில சுவடுகள் தெரியுதுன்னு சொல்றாங்க.."

"அரசர்கள் குகைக்குள்ள வாழ்ந்தாங்களா என்னடா சொல்ற"

" உனக்கு நான் தெளிவா சொல்லி புரிய வைக்கிறேன் பழங்காலத்தில் அரசர்கள் வந்து சுரங்கப்பாதை வழியாக ஒரு அரண்மனையில் இருந்து ஏதோ மர்ம வழியில் வெளியே போவாங்க அப்படிதான் அந்த குகைகளில் பொறிக்கப்பட்ட ஓவியம் இருக்காம் அதுல ஏதோ மர்மம் இருக்குன்னு சொல்றாங்க"

"மர்மமா" அன்வர் ஆச்சரியப்பட்டு கேட்டான்.


"ஆமா அந்த இடத்தில் தான் கருப்பு ராணி ஓட திகில் சம்பவங்கள் எல்லாம் இருக்குன்னு பேசிக்கிறாங்க "

"என்னது கருப்பு ராணியா"

ஆமா இத பத்தி நான் நண்பர்கள் கூட கேட்டு முடிவு பன்னலாம்.
நம்ம நாளைக்கு புறப்படலாம் என்று நினைக்கிறேன்.
நர்மதாவும் அதையும் காண்ப்பிரென்சில் இணைந்து கொள்ள விவரங்கள் அனைத்தையும் கூறிய பிறகு "வாவ் இன்ட்ரஸ்டிங்" என்றால் நர்மதா.
" ஏய் நீ இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வருவியா"அஜய் கேட்க..
"என் வருவெனே" ..
"அது எதோ நானும் கேள்விப்பட்டு இருக்காங்க போனவங்க நிறைய பேர் ஏதோ பைத்தியம் ஆயிட்டாங்க இந்த மாதிரி அந்த ஊர பத்திதானே நானும் படிச்சிருக்கேன்"என்றான் அஜய்.

பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் அடுத்து வரும் ஆபத்தை பற்றி...


மறுநாள் சொல்லி வைத்தபடியே பேக்கிங்கில் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுகளை பத்திரப்படுத்திக் கொண்டு அவர்கள் புக் செய்த வேனில் ஏறிக்கொண்டு காவல் புரம் நோக்கி விரைந்தார்கள். காவல் புரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எந்த காலத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் அவர்களுக்காக கண்களில் பட்டது." ஸ்டார்டிங்க திர்லிங்கா இருக்கே "என்றான் வினித்.
"இட்ஸ் ஓகே டா வா போவோம்" என்றால் நர்மதா.

அந்த குகையை அவர்கள் நெருங்கினர்." இது குகை மாறிய தெரியலையே ஏதோ பாதை போல இருக்கு"
பேச்சை முடித்துக் கொண்டு போகும் போது மதியம் ஆகிவிட்டது கொண்டு வந்து ஸ்நாக்ஸ் மற்றும் உணவுகளை தின்று குகைக்குள்ளே நுழைய ஆரம்பித்தனர்.

"டேய் நீ சொன்னது கரெக்ட் தான் டா இந்த இந்த மாதிரி ஓவியங்கள் வந்து பார்க்க அறியாத நானும் புக்குல கூட படிச்சிருக்கேன் நல்ல கற்பனை திறனோடு வரையப்பட்ட ஓவியங்கள் இங்கே பார் ஏதோ ஒரு ராஜா புறமுதுகிட்டு ஓடும் போது எள்ளி நகையாடப்பட்டார் என்பதை காட்டுகிறது".

பேசிக்கொண்டே உள்ள போன நர்மதா சொன்னால்" டேய் ஆளாளுக்கு தனித்தனியா போய் பார்ப்போம் உள்ள எப்படி என்னதான் இருக்குன்னு உன்னுடைய செல்போனை எடுத்துக்கோ வீடியோ போட்டா மில்லியன் கணக்குல சப்ஸ்கிரைப் வரும்".

பேசிக்கொண்டே முன்னாடி சென்ற நர்மதா வேகமாக ஓடினாள்.

"டேய் டேய் எல்லாரும் இங்க வாங்கடா இங்க ஒரு அதிசயமான காட்சி இருக்கு வாங்க."

" இவ இப்படித்தான் உளறிக்கிட்டு இருப்பாய் என்றான் அஜய்.

இல்லடா இங்கே... பேசிக் கொண்டிருக்கும்போதே நர்மதா அலரும் சத்தம் குகையின் வெளியே வர எதிரொலித்தது "என்னதான் ஆச்சு நர்மதா உனக்கு" என்று அஜய் பரபரத்தான் அங்கே அவன் கண்ட காட்சி இதயத்தை ஒரு நிமிடம் உறைய வைத்தது. நர்மதா இறந்து கிடந்தாள். தொடரும்...
© All Rights Reserved