...

10 views

வரமாகிய காதல்..1
ஒரு பெண்,
அவள் சந்தித்த முதல் அழகான ஆண்,
அவனுக்காக அவள் வாங்கிய ஐம்பது பைசா காகிதம்,
அந்த வெற்றுக் காகிதத்தில் எழுதத் தெரியாத அவன் பெயர்,
அனுதினமும் அப்படியே சென்ற நாட்கள்
அக் கம்பத்தில் அழகாய் சாய்ந்திருக்கும் அவனைப் பார்த்து,
ஒரு நாள்...
எதிர்பார்த்த அந்த நாள்
பெயர் என்று தெரியாதா!

பல நாள் பழகிய நண்பன்
பெயர் என்ன என்றான்?
பரிகாசமாய்!
பின்னிருந்து ஒரு குரல்
பிரகாசமாய் கேட்டது,
பெயர் தெரியாமல் நீர்
பெயரிட்டது ஏனோ? என்று!
ஆச்சரியத்தில் அவன் சட்டையின்
பச்சை நிறமும் மின்னியது...
பச்சை நிறம்!
ஆம்!
அவள் கண்ணை கவர்ந்தவன்
அணியும் " பச்சை நிறம்"
இந்த நிற சட்டை அணிந்து நீ அழகாய் இருக்கிறாய்!
அவனின் மின்னிய கண்ணுடன்,
அவள் கண்கள் சந்தித்தன.
ஆம்!
பச்சை நிற சட்டையில்,
அவளின் இதயம் களவாடியவன்!
அவன் கள்வன் அல்ல!
அவன் கண்ணின்
காந்த பார்வையில் மயங்கிய அவள்,
அவளறியாமல் சொன்னால்,
"இந்த சட்டையில் நீ அழகாய் இருக்கிறாய்"
என்று!
அவள் சொல்ல நினைத்தது,
அவன் சட்டையை பற்றி அல்ல!
அவன் மேல் அவளின்
ஆசையை பற்றி!
இந்தப் பெண் ஒரு காதல் ராட்சசி!
அவள் வந்த பேருந்து, நிறுத்தத்தில் நிற்க! களைப்பாய் இறங்கினால் கண்களில் தேடுதலோடு,
கண்கள் அவனைக் காட்டவில்லை, என்றுமிருக்கும் இடத்தில்,
மாற்றாய் அவன் அன்று வந்தான் பின்னிருந்து,
சட்டென்று அவள் திரும்ப,
அவன் அவளருகில்,
அவள் கண்கள் மின்னின!
தொலைவில் ஒருவன் உரக்கக் கூப்பிட்டான்
"..... தி " என்று
அன்று தெரிந்தது அவளுக்கு
அவளவனின் பெயர் "சக்தி" என்று
அந்த நிமிடம்,
அவளின் மனம் முழுதும் வந்தான் "சக்தி"
அவளின் உடல் முழுதும் தந்தான் "சக்தி"
எத்தனை தான் ஆனந்தம் அவளவனின் பெயரில்!
அந்த நிமிடம்!
அவளவனின் பெயர் கேட்ட அந்த நிமிடம்,
மனம் நெகிழ்ந்த அவளின் உணர்வுகள்!
இந்நாள் வரை வாங்கிய ஒவ்வொரு
ஐம்பது பைசா காகிதமும்,
இன்று அவளவனின் பெயரால்
நிரப்பினாள் அந்த நாயகி,
" எத்தனை தான் ஆனந்தம்!
அவளவனின் பெயரை
அவள் கைகளால் அக்காகிதத்தில்
நிரப்பும் போது! "
இந்தப் பெண்மையே விசித்திரமானது தான்!
மனதில் நிறைந்தவனின் பெயரை
நினைவிலே ஆசுவாசிக்கிறாளா இப்பெண்?
காதல் அழகானது!

© ❤நான் வாணி ❤