...

12 views

My first love at college 4

அடுத்த நாள்.... 😊

வழக்கம் போல மதியம் பொண்ணுங்கள பாத்துட்டு இருந்தோம்...

அப்ப அந்த பொண்ணும் வந்தாங்க...

அவுங்க என்னய பாக்கல...

ஆனா அவுங்க ஃப்ரண்ட்ஸ் பாத்தாங்க...

பாத்துட்டு ஏதோ அவுங்கள்ட சொன்னாங்க.....

(

பசங்க யாராச்சும் ஐடியா கேப்பாங்க...

பொண்ணுங்கள எப்டிடா கரெக்ட் பண்றது' அப்டின்னு...

அவுங்க ஃப்ரண்ட்ஸ ஃப்ரண்டு புடிக்கிறதுதான் முதல் வழி.

அத மட்டும் பண்ணிட்டா போதும்...

ஆனா இந்த விசயம் என்னோட கிரஸ் கிட்ட வேல செய்யல...

)

எனக்கு அப்போதைக்கு அவுங்க கிட்ட லவ் சொல்லனும் னு எண்ணமே இல்ல...

என்னோட நண்பன் கவி.தான் அதுக்கும் காரணம்...

பக்கத்துல இருந்த ஃப்ரண்டு கிட்ட இருந்த காச புடுங்கி காலேஜ் கடைக்கு போனோம்.

அங்க அவுங்க நின்னுட்டு இருந்தாங்க...

போய் டய்ரிமில்க் வாங்கி குடுத்தான்...

அப்றம் அவுங்க கிட்ட பேச போனா.....

காலேஜ்ல அங்க இருந்த பசங்க எல்லாம் என்னயவே பாத்துட்டு இருக்காங்க...

நானே பயந்தாங்கோளி...

இவனுக அத ஏத்திவிட்டானுக...

ஒரு கூச்ச சுபாவமுள்ள பையன் அவனோட லவ்வ வெளிப்படுத்தும் போது ரொம்ப அழகா இருக்குன்னு கேள்விபட்ருக்கேன்...

அது அப்டியே நடந்துச்சு...

அவுங்க அத உணர்தாங்களா என்னன்னு தெரியல...

நான் ஒன்னுமே சொல்லல...

ஏன்னா வாய்ல இருந்து காத்து மட்டும் தான் வருது....

அப்றம் அவுங்களே சொன்னாங்க...

"வேணாம். பின்னால வராதிங்க" அப்டின்னு...

எனக்கு இருந்த பயத்துல அந்த இடத்த விட்டு போனா போதும்னு இருந்துச்சு...

கெளம்பிட்டேன்...

ஆனா அந்த பொண்ணு கோவமா சொல்லாருந்தா கொஞ்சம் ஏதாச்சும் தவறா தோனிருக்குமோ என்னவோ..‌.

ஒரு தடவ கூட அவுங்க என்னை பாத்து மொரச்சது இல்ல.....

ஒரு அழகான சிரிப்பு...

அதுல எந்த ஒரு தவறான ஒன்னும் எனக்கு தோனல...

அப்றம் எப்டி ஒரு பையனுக்கு அந்த பொண்ண வெறுக்கத்தோனும்...

எனக்கு அவுங்க அப்டி சொன்னதுல கொஞ்சம் கூட வருத்தம் இல்ல...

அவுங்க சிரிப்பு எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணிடுச்சு.....

இத வந்து எங்க பொறுக்கி பசங்கள்ட சொன்னா...

மொதல்ல டய்ரீமில்க்.அ புடுங்கிகிட்டானுக...

சாப்டு முடிச்சுட்டு ஆளுக்கு ஒரு கருத்து சொன்னானுக...

பொண்ணுங்க பின்னால வராத.னு சொன்னா..... வா.ன்னு அர்த்தம்"
அப்டிங்குற மாதிரி...

நம்ம வருத்தப்படறத்துக்கு ஒன்னும் இல்ல...

ஏன்னா நான் கொஞ்சம் வொர்த் தான்னு எனக்கு தெரியும்...

என்னோட வாழ்க்கை துணைய நல்ல பாத்துக்குவேண்ணும் தெரியும்...

என்ன பிரச்சனைனா அந்த ஆளு யாருங்குறதுதான்...

இதுக்கு அப்றம் அவுங்கள சந்திச்ச. ஒரு தருணம் ஒரு.....
என்ன சொல்றதுன்னு தெரியல...

ரொம்ப அழகா தோனுச்சு...

God's gift...

அப்றம்... அந்த டய்ரீமில்க் கவர இன்னும் வச்சுருக்கேன்...🙈

______________________________

அப்றம் நண்பர்கள் தினத்துக்கு எல்லாரும் ஸ்டேட்ஸ் வச்சிருந்தாங்க..‌.

நான் எதுவும் வைக்கல...

என்னோட ஃப்ரண்டு ஒரு பொருக்கி பையன் ஒருவன் ஒரு மீம் ஸ்டேட்ஸ் வச்சிருந்தான்...

அது என்னன்னா கந்தசாமி படத்துல...

நான் ரைஸ் மில் ஓனர் ரங்கா ராவ் அப்டின்னு பிரபு ட வடிவேல் பேச அடச்சீ அப்டின்னு பிரபு வடிவேலு வ திருப்பி திட்டுவார்....

இதுல அப்படியே வடிவேலு நண்பர்கள் தின ஸ்டேட்ஸ் வக்கிரமாதிரியும்...அத பாத்த பிரபு அவர்கள்
"ஒரு பொண்ணு வந்தவுடனே என்னய விட்டுட்டு போண பயதானடா நீ" அப்டின்னு சொல்ற மாதிரி இருந்துச்சு....

இத என்னோட பொறுக்கி பசங்க டீம்ல உள்ள எல்லாரையும் மென்சன் பண்ணி இன்ஸ்டாகிராம் ல வச்சுட்டேன்...

மத்த பசங்க யாரும் தப்பா நினைக்கல...

கவி நான் எப்படா அப்டி பண்ணேன்'னு பதில் அனுப்பிருத்தான்...

அவன் கேட்டது எனக்கே ஒரு மாதிரி ஆய்டுச்சு...

நான் காமெடிக்கு பண்ணத அவன் சீரியஸா நெனச்சுக்கிட்டான்...

👬👬👬👬👬👬👬👬👬👬👬👬


© murugs

#tamilnadu #pudukkottai #avvmspc #crush #love #memories #gift #propose #friendship ####