...

8 views

Computer.........

© நாவல்

[#கணினி part 7

அருங்காட்சியத்தை வெடிக்க வைக்க இரண்டு போர் விமானங்கள் தயார் நிலையில் கிளம்பின.

அப்போதுதான் ஏதோ தப்பாக இருக்கிறது என்று தர்ஷினி கணித்தாள்,

தன்னுடைய வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த போலீஸ்காரர்களிடம் சென்று உடனே அந்த போர் விமானங்களை கிளம்ப விடாமல் நிறுத்த சொன்னாள் தர்ஷினி.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் தர்ஷினியின் பேச்சை பெரியதாக காதில் வாங்கவில்லை சின்ன பொண்ணு பயத்தில் உளறுகிறது என்று அசால்ட்டாக விட்டு விட்டார்.

அதே சமயம் கமிஷ்னர் தர்ஷினியின் வீட்டிற்கு வந்தார்.
கமிஷ்னரை பார்த்ததும் அவரிடம் வேகமாக ஓடி சென்று பேச முயற்சி செய்தாள் தர்ஷினி.
அதை பார்த்ததும் தர்ஷினியை பேச அருகில் அழைத்தார் கமிஷ்னர்.

அவரிடம் கம்ப்யூட்டரின் தந்திரத்தை தெளிவாக எடுத்து கூற தொடங்கினாள்.

அந்த கம்ப்யூட்டர்க்கு நான் தான் வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது.
அந்த கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் பல ரோபோக்கள் உள்ளன அந்த கம்ப்யூட்டர் நினைத்திருந்தாள் அந்த ரோபோக்களை பயன்படுத்தி அங்கிருந்த மக்கள்களை பனைய கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு உங்களை மிரட்டி என்னை ஒப்படைக்க வைத்திருக்க முடியும் ஆனால் அந்த கம்ப்யூட்டர் அப்படி செய்யாமல் வெளியே இருந்த மொத்த ரோபோக்களையும் அருங்காட்சியத்தில் உள்ளே வைத்துக்கொண்டு அமைதியாக காத்திருக்கிறது என்றால் அந்த கம்ப்யூட்டர் வேறு ஏதோ பெரிய திட்டத்தை செயல் படுத்தப்போகிறது என்று கமிஷ்னரிடம் அனைத்து விஷயங்களையும் தர்ஷினி கூறினாள்.

இதை கேட்டதும் கமிஷ்னர் சிரித்து விட்டார் மனுஷங்க தான் பாப்பா நீ சொல்லுற மாதிரி யாரையாவது பனைய கைதியா பிடிச்சு வச்சுக்கிட்டு அரசாங்கத்தை மிரட்டி காரியத்தை சாதிக்க நினைப்பார்கள்,
நாங்க அந்த மாதிரியான திட்டத்தையே முறியடிப்போம்.
இது ஒரு சாதாரணமான கம்ப்யூட்டர் தான் அதுனால இதை சுலபமா அழித்துருவோம் என்று கமிஷ்னர் தர்ஷினியிடம் கூறினார்.

தர்ஷினியின் பேச்சை யாருமே காதில் வாங்கவே இல்லை
அதன் பிறகு சிவா ஓடி வந்து தர்ஷினியை வீட்டிற்குள் அழைத்து சென்றான்.

அருங்காட்சியத்தில் அணுகுண்டை போடுவதற்கு இரண்டு விமானங்கள் தயாராகி கிளம்பி வந்தன.
அருங்காட்சியத்தை வெடிக்க வைக்க குறி வைத்து அணுகுண்டை போட போர் விமான வீரர் தயாராக இருந்தார்.
உலக நாடுகள் அனைத்தும் என்ன நடக்க போகிறது என்று பார்க்க மிக ஆவலாக இருந்தார்கள்.

அப்போதுதான் இரண்டு போர் விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து பறக்க தொடங்கின அதற்கு காரணம் விமானத்தின் மொத்த கன்ட்ரோலையும் அந்த கம்ப்யூட்டர் தன் வசம் படுத்தியது.

அந்த இரண்டு விமான வீரர்களும் விமானத்தை விட்டு வெளியே குதித்தனர்.

தன்னை அழிக்க எப்படியும் ஆயுதங்களுடன் போர் விமானம் வரும் அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான் அந்த கம்ப்யூட்டரின் திட்டமே,
இதை தான் தர்ஷினி சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தாள்.

அந்த இரண்டு போர் விமானங்களையும் மேல் நோக்கி வானத்தில் பறக்க விட்டு அதில் ஒரு விமானத்தின் அணுகுண்டை 5000 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஒரு அதிவேக இன்டர்நேஷ்னல் விமானத்தில் குறி வைத்து வீசி நடு வானில் வெடிக்க வைத்தது அந்த கம்ப்யூட்டர்.
இந்த செயலை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தன.

இன்னோர் விமானத்தின் அணுகுண்டை இந்திய பாராளுமன்றத்தை நோக்கி குறி வைத்து காத்திருந்தது அந்த கம்ப்யூட்டர்.

அந்த போர் விமானத்தை சுட்டு வெடிக்க வைக்க பல போர் விமானங்கள் வானில் பறக்க தொடங்கின.
அது தான் அந்த கம்ப்யூட்டர்ரும் எதிர் பார்த்தது.

PART8 CLIMAX

[#கணினி part 8 climax

அந்த ஒரு விமானத்தை தடுக்க பல போர் விமானங்கள் வானில் பறந்து வந்து கொண்டிருந்தன
அப்படி வந்த அனைத்து போர் விமானங்களையும் ஆயுதங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்க்கு கொண்டு வந்து பல இடங்களில் குண்டுகளை மழைப்போல் பொழிந்து பல அப்பாவி மக்கள்களை கொன்றது அந்த கம்ப்யூட்டர் இது தான் அந்த கம்ப்யூட்டரின் திட்டமும் கூட.

என்ன செய்வது என்று புரியாமல் அரசாங்கம் நிலை தடுமாறி தத்தளித்தது அப்போதுதான் தர்ஷினியை ஒப்படைக்க ஒத்துக் கொள்வதாக முதலமைச்சர் அந்த கம்ப்யூட்டரிடம் செய்தி சேனல்கள் மூலம் தெரியபடுத்தினார்.
சிவாவும்,வித்யாவும் கதறி அழுதனர்.
அதே சமயம் நம் குழந்தையின் ஒரு உயிரை காப்பாற்ற பார்த்தால் நாட்டில் பல உயிர்கள் அழிந்து விடும் என்று அவர்களுக்கும் புரிந்தது.
அதன் பிறகு அரசாங்கத்திடம் தர்ஷினியை ஒப்படைத்தனர் சிவாவும்,வித்யாவும்.

அந்த அருங்காட்சியத்திற்கு காரில் அனுப்பி வைக்க பட்டாள் தர்ஷினி.
கொஞ்சம் கூட பயம் இல்லாமல் தனியொரு ஆளாக அருகாட்சியத்திற்குள் நுழைந்தாள் தர்ஷினி.
தர்ஷினியை பார்த்ததும் அந்த கம்ப்யூட்டர் பல ரோபோக்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்து ஒரு ராட்சன் போல் உரு மாறி நின்றது.
தர்ஷினியிடம் அந்த கம்ப்யூட்டர் பேச தொடங்கியது.
உன் உடலில் ஓடும் இரத்த செல்கள் ஒவ்வொன்றிலும் என்னுடைய மெமரி திரவமாக கலந்துள்ளது,
உன்னை வெளியவே வைத்துக் கொன்றால் உன் இரத்தம் பாதிக்கு மேல் வெளியே போய் விடும் அதனால் உன்னை என் உடலோடு சேர்த்துக்கொண்டு உன் இரத்த அணுக்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து அதன் பிறகு உன்னை கொன்று விடுவேன் அந்த கம்ப்யூட்டர் தர்ஷினியிடம் சொல்லி முடித்தது.

அதற்கு தர்ஷினி ஒரு பதிலை மட்டும் தான் கூறினாள்.
உன்னை உருவாக்கியவரின் மூளையும் என்னுள் தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதே என்று சொல்லி விட்டு அடுத்த நொடியே தன்னுடைய கையில் வைத்திருந்த zeus, sesser, code red, என்கிற கொடுடிய மூன்று வைரஸ்களை தன்னுடைய உடலில் செலுத்தி கொண்டு தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு அந்த கம்ப்யூட்டரின் மேல் பாய்ந்தாள் தர்ஷினி.
தர்ஷினியை வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த கம்ப்யூட்டரை அழிப்பது தான் ஒரே வழி என்று அரசாங்க ஆராய்ச்சியாளர்களிடம் தர்ஷினி தான் கூறி இருப்பாள், அவளின் திட்டப்படி தான் இப்போது மூன்று வைரஸ்களை தன்னுடைய இரத்தத்தில் கலந்து கொண்டு கம்ப்யூட்டரின் மூளை பகுதிக்குள் சென்றாள்.
சிறிது நேரத்தில் வைரஸ் தாக்குதல் அதிகமாக ஆனதும் அந்த கம்ப்யூட்டர் செயல் இழந்து வெடித்து சிதறியது அதோடு சேர்த்து தர்ஷினியும் இறந்து போனாள்.

10வயது சிறுமி மக்களை காப்பாற்ற உயிரை விட்டதை நினைத்து உலக நாடுகளே கவலையில் இருந்தாலும் அதே சமயம் தர்ஷினியின் தைரியத்தை பார்த்து அனைத்து நாடுகளும் பெருமிதம் கொண்டது.
மகள் பிரிந்ததை நினைத்து வித்யாவும்,சிவாவும் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது வித்யாவின் செல்போன்க்கு ஒரு மெசேஜ் வந்தது.
உலகில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும்,லேப் டாப்க்கும் அதே மெசேஜ் ஒரே சமயத்தில் வந்தது.
அனைத்து மக்களும் அந்த மெசேஜ்யை படித்தனர்.
இன்டர்நெட் என்பது காற்று போல அது கண்ணுக்கு தெரியாது, அந்த காற்றோடு காற்றாக இன்று நானும் கலந்து விட்டேன். அந்த கம்ப்யூட்டர் மட்டும் தான் அழிந்தது ஆனால் அதனுடைய செயல் திறன் என்னுள் உள்ளது.
இனிமேல் உங்கள் அனைவரையும் இந்த இன்டர்நெட் மூலம் நாம் கண்காணித்து கொண்டே இருப்பேன்.
யாராவது ஒரு சிறிய குற்றம் செய்தாலும் உங்கள் சொந்த விஷயங்களை தவிர்த்து மற்ற குற்றங்கள் உலகிற்கு காட்டப்படும்.

தர்ஷினி ITS BACK ,........

கதை பற்றிய கருத்துக்களை கமென்ட்டில் கூறுங்கள்

நன்றி.