...

12 views

மாதவிடாய்


© நாவல்

[#மாதவிடாய்# part 6

தன்னுடைய மனதில் இருக்கும் ஆத்திரங்களை நீதிமன்றத்தில் சொல்ல தொடங்கினாள் கேத்திரின்.

அருண்; சரி மற்ற பெண்களை விடுங்கள் நீங்கள் தான் புகார் குடுத்து இருக்கிங்க உங்க கிட்டயே கேள்வி கேட்கிறேன்.
மாதவிடாய் ஏற்படும் போது உங்களை வீடியோ எடுத்து youtubeல் போட்டது யார் என்று தெரியுமா அதுவும் ஒரு பெண் தான் என்று சொல்லி ஒரு பெண்ணை கோர்ட்டில் நிறுத்தினார் வக்கீல்

கேத்திரின் அந்த பெண்ணிடம் சில கேள்விகளை கேட்க தொடங்கினாள் அந்த பெண் பெயர் கீர்த்திகா.

கேத்திரின்; நீயும் ஒரு பொண்ணு தானே எனக்கு மாதவிடாய் ஏற்படும் போது அந்த வலி என்னானு உனக்கும் தெரியும் தானே அப்புறம் எதுக்காக வீடியோ எடுத்து youtubeல் போட்ட?

கீர்த்திகா; என்னை மன்னிச்சுருங்க நான் சும்மா விளையாட்டாக தான் வீடியோ எடுத்து போட்டேன் அது உங்கள இந்த அளவுக்கு பாதிக்கும்னு எனக்கு தெரியாது நீங்க தற்கொலை முயற்சி பன்னதா கேள்வி பட்டதும் அப்போவே அந்த வீடியோ அழித்துட்டேன்.

அருண்; மிஸ்.கேத்திரின் இப்போ நீங்க சொல்லுங்க இந்த ஒரு பொண்ணு செய்த தப்புக்கு எதுக்காக சமூகத்தின் மீது வழக்கு போட்டிங்க

கேத்திரின்; அந்த கோவிலில் இருந்த பூசாரி கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கனும் தயவுசெய்து அவரையும் வர சொல்லுங்க

அருண்; நீங்க சொல்கிற மாதிரி உங்கள் பக்க நியாத்தை சொல்ல உங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவரையும் அழைக்கிறோம் ஆனால் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தால் உங்களுக்கு தான் பிரச்சினை மிஸ்.கேத்திரின்.

பூசாரி வந்தவுடன் தன்னுடைய கேள்வியை கேட்டாள் கேத்திரின்

கேத்திரின்; கோவிலுக்குள் மாதவிடாய் ஆன பெண் செல்ல கூடாது என்று நீங்க ஏன் சொல்லுறிங்க சரியான பதிலை சொல்லுங்க என்னை போல் எல்லா பெண்களும் தெரிந்து கொள்ளட்டும்.

பூசாரி; மாதவிடாய் ஆன பெண்கள் கோவிலுக்குள் மட்டுமல்ல எந்த வழிப்பாட்டு தளங்களுக்கும் செல்ல கூடாது சுத்தமாக இருப்பது தான் அனைத்து கடவுள்களும் விரும்புவது இந்த முறையை தான் காலங்காலமாக அனைவரும் பின்பற்றி வருகிறார்கள் அதனால்தான் கோவிலுக்குள் மாதவிடாய் ஆன உடன் உன்னை வெளியே போக சொல்லி சொன்னேன் இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவுமே இல்லையே

கேத்திரின்; இதுதான் நீங்க என்னை வெளியே போக சொல்ல காரணம் இல்லையா

பூசாரி; ஆமாம்

அருண்; சரி பூசாரி எதற்காக உங்களை கோவிலில் இருந்து வெளியே போக சொன்னார் என்று சொல்லிவிட்டார்
இப்போது நீங்கள் சொல்லுங்க மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்வது தீட்டு என்பது தானே உண்மை?

கேத்திரின்; இல்லை மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல கூடாது என்பது ஆன்மீகம் சார்ந்த விஷயம் என்பதை விட அறிவியல் சார்ந்த விஷயம் என்பது தான் உண்மை.

அருண்; இதை உங்களால் நிரூபிக்க முடியுமா இல்லையென்றால் இப்போதே மன்னிப்பு கேட்டு விடுங்கள் ஏனென்றால் மக்களின் பலங்கால நம்பிக்கையில் நீங்கள் கை வைக்கீறிர்கள்.
மொத்த நீதிமன்றமும் கேத்திரின் என்னா சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது.

கேத்திரின்; என்னால் இது அறிவியல் சார்ந்த விஷயம் தான் என்று நிரூபிக்க முடியும் என்று துணிந்து நின்றாள்.

தன்னுடைய விளக்கத்தை கூற ஆரம்பித்தாள் கேத்திரின் ஒட்டு மொத்த மக்களும் அவள் கூறப்போகும் விளக்கத்தை கேட்க ஆவளாக காத்திருந்தனர்.

கேத்திரின்; பெண்கள் மகப்பேறு மருத்துவர் ஒருவரை அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்து வர சொன்னாள்.

(நான் இப்போது சொல்ல போகும் இந்த விஷயம் அனைத்தும் முறையாக மருத்துவரிடம் கலந்து பேசி சேகரித்த தகவல்கள் ஆகும் எதுவும் கற்பனையோ,வதந்தியோ கிடையாது.
நாவல் குழு)

[#மாதவிடாய்# part 7

கேத்திரின் கேட்டது போல் ஒரு மகப்பேறு மருத்துவரை கோர்ட்டிற்கு வர வைத்தனர்.

வழக்கறிஞர் அருண் டாக்டரிடம் கேள்விகள் கேட்க தொடங்கினார்.

அருண்; மாதவிடாய் ஆன பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்று சொல்வதில் ஆன்மீகம் இல்லை அறிவியல் தான் இருக்கிறது என்று மிஸ்.கேத்திரின் சொல்கிறார், அதைப்பற்றி சற்று விவரமாக கூறுங்கள் கோர்ட்டில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.

டாக்டர்; மிஸ்.கேத்திரின் கூறுவது சரி தான்,
ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது அவள் வயதுக்கு வந்தவுடன் கற்பபையில் கரு முட்டைகள் உருவாக தொடங்கும்,
அந்த கரு முட்டைகள் உருவாகி 23ல் இருந்து 25 நாட்களுக்குள் இறந்து விடும்,
அப்படி இறந்த அந்த கரு முட்டைகளை கற்பபை வைத்துக்கொள்ளாது வெளியேற்றி விடும்,
அப்படி இறந்த கரு முட்டைகள் இரத்தத்தில் கலந்து மாதவிடாயாக பெண்களுக்கு வெளியே வரும் அந்த சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்யில் ஒரு வித கதிர் வீச்சு ஏற்படும்.
அந்த கதிர் வீச்சானது அதிக வெப்பமாக இருக்கும்
உதாரணத்திற்கு மாதவிடாய் ஏற்பட்ட உடன் பட்டு பூச்சியின் கூட்டிற்கு அருகில் சென்றால் அந்த மாடவிடாய்யில் இருந்து வெளி வரும் கதிர் வீச்சின் வெப்பத்தால் அந்த பட்டு பூச்சிகள் கூட்டுக்குள்ளயே கருகி இறந்து விடும்
அது மட்டுமல்ல துளசி செடிக்கு அருகில் சென்றால் கூட அந்த துளசி செடி மாதவிடாய் ஆன பெண்ணின் உடலில் இருந்து வெளி வரும் வெப்பத்தில் கருகி விடும்,
துளசி செடி என்பது கடவுளுக்கு அணியும் மாலையிலும் பூஜைக்கும் பயன் படுத்தும் ஒரு புனிதமான பொருள்,
அந்த துளசி செடியே கருகி விடுவதால் தான் மாதவிடாய் ஆன பெண்கள் வழிபாட்டு தளங்களுக்கு அந்த நேரத்தில் செல்ல கூடாது என்று அந்த காலத்தில் பெரியவர்கள் கூறினார்கள், அதற்கு காரணம் வழிபாட்டு தளங்கள் என்பது பொதுவாகவே எப்பொழுதும் வெப்பமாக தான் இருக்கும், மாதவிடாய் ஆன பெண்களின் உடல் வெப்பமும் அதிகமாகவே இருக்கும்.
அப்படி இருக்கும் போது மாதவிடாய் ஆன பெண்கள் வழிபாட்டு தளங்களுக்குள் செல்வதால் அந்த பெண்களின் உடல் நிலை பாதிக்கும் வெப்பம் உடலில் அதிகம் ஆகும் போது கற்பபை பலவீனம் ஆகும் திருமணத்திற்கு பிறகு குழந்தை கற்பபையில் தங்காமல் கலைந்து விடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால்தான் மட்டுமே மாதவிடாய் ஆன பெண்கள் வழிபாட்டு தளங்களுக்குள் செல்ல கூடாது என்று சொல்வார்கள் ஆனால் அதையே காலப்போக்கில் மக்கள் அனைவரும் அதற்கு தீட்டு என்று ஒரு பெயரை வைத்து
ஒரு பெண்ணே இன்னோர் பெண்ணை மாதவிடாய் காலத்தில் ஒதுக்கி வைக்க தொடங்கி விட்டாள்.

அருண்; ரொம்ப நன்றி டாக்டர் எங்களுக்காக கோர்ட்டில் வந்து அனைவருக்கும் இதை பற்றி விளக்கமாக சொல்லியதற்கு

கேத்திரின்; நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் ஆதாரத்துடன் சரியான பதில் கூறி நிரூபித்துவிட்டேன், இப்போ இந்த உலகத்தில் இருக்கிற ஆண்,பெண் இருவருக்கிட்டேயும் நான் சில கேள்விகள் கேட்பேன் அதற்கு இந்த சமுதாயத்தில் உள்ள ஒருவராது அதற்கு சரியான பதிலை கூற வேண்டும் அதற்கு பிறகு மாதவிடாய் ஏற்படும் பெண்களின் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகள் இந்த அரசாங்கம் செய்து தர வேண்டும்.

ஒட்டு மொத்த நீதிமன்றமும் ரொம்பவே அமைதியாக இருந்தது கேத்திரின் என்னா கேள்வி கேட்க போகிறாள், என்னா கோரிக்கையை முன் வைக்க போகிறாள் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தனர்

(கேத்திரின் கேட்க போகும் கேள்வி
குடும்ப சூழ்நிலையில் சிக்கி தன்னுடைய வலிகளை மனத்திற்குள் பூட்டி வைத்து தினம் தினம் வேதனையில் துடிக்கும் அனைத்து பெண்களின் கேள்வி,
பதில் கூற அனைத்து ஆண்களும் தயாராக இருங்கள்)

[#மாதவிடாய்# part 8

தன்னுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை கேள்வியாக கேட்க தொடங்கினாள் கேத்திரின்.

கேத்திரின்; மாதவிடாய் ஆன பிறகு வழிபாட்டு தளங்களுக்கு செல்ல கூடாது என்பதற்கு விளக்கம் குடுத்தேன்
ஆனால் வீட்டில் உள்ள பூஜை அறைக்குள் செல்ல கூடாது நல்லது கெட்டது என்று எந்த விஷேசங்களில் கலந்து கொள்ள கூடாது என்று அனைவருமே சொல்ல என்னா காரணம்? இதற்கு யார் சரியான விளக்கத்தை சொல்ல போறிங்க?

நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அருண்; நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது அதற்கு காரணம் நீங்கள் சொல்லும் அந்த முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள் இங்கிருப்பவர்கள் அல்ல
பலங்காலத்தில் உள்ள பெரியவர்கள் உருவாக்கியது அதை தான் இன்று உள்ளவர்கள் செய்கிறார்கள் இதில் எங்களுடைய தவறு எதுவும் இல்லை மிஸ்.கேத்திரின்.

கேத்திரின்; யாரோ ஒருவர் அந்த காலத்தில் மாதவிடாய் ஆன பெண்கள் வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் போக கூடாது என்று சொன்னார் அப்படி போனால் அவர்கள் உடல் அளவில் பலவீனம் ஆவார்கள் இது மட்டும் தான் காரணம்
ஆனால் இதை வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து விஷேசம் நடக்கும் இடம் வரைக்கும் கொண்டு வந்து அதற்கு தீட்டு என்று பெயர் வைத்தது இன்று உள்ள சமூகம் தான்
ஒரு உயிர் உருவாகி குழந்தையாக வெளியே வருவது நீங்கள் தீட்டு என்று சொல்லும் அந்த வழியாக தான்
தீட்டோடு பிறக்கும் அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம்
உயிர் போகும் வலியில் குழந்தையை பெற்று குடுத்துவிட்டு கடவுளின் படைப்பாள் மாதவிடாய் என்ற இயற்கை உபாதையில் துடிக்கும் பெண்ணை தீட்டு என்று ஒதுக்கி வைப்பதும் இதே சமூகம் தான்.
உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் மீது உங்களுக்குள்ள தீண்டாமை என்கிற அந்த எண்ணத்தை மனதில் இருந்து துடைத்து எடுத்தாளே போதும் இனிவரும் சமுதாயத்தில் உள்ள பெண்கள் தன்னுடைய வீட்டிலே அடிமை போல் இல்லாமல் தன்னுடைய பணிகளை சுதந்திரமாக செய்து கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் முழு சந்தோஷத்துடன் கலந்து கொள்வார்கள்
ஒரு ஆணுக்கு உடல் வலி என்றால் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் ஆனால்
ஒரு பெண்ணிற்கு ஏற்படும் மாதவிடாயின் போது சற்றும் ஓய்வின்றி தட்டு தடுமாறி அனைத்து வேலைகளையும் செய்வது அந்த பெண்கள் மட்டும் தான்.
ஒரு வீட்டில் உள்ள அப்பா,சகோதரர்கள்,கணவன் இப்படி பட்ட ஆண் உறவுகள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் மட்டும் இல்லாமல் எல்லா வலிகளின் உனக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று எப்போது நிற்கிறார்கள்ளோ அன்றைக்கு தான் சார் உண்மையான தீட்டு இந்த சமுதாயத்தில் இருந்து முழுமையாக போகும்.

கேத்திரின் சொல்லி முடித்ததும் நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் தங்களை மறந்து கை தட்டி விட்டனர்.

நீதிபதி; நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்திலும் உலகில் உள்ள பல பெண்களின் வலியும், வேதனையும் தெரிகிறது இதற்கு காரணமான சமுதாயத்தில் நானும் ஒரு நபராக இருந்ததை நினைத்து மனம் வருந்துகிறேன்.
ஒரு நீதிபதியாக இந்த விஷயத்தில் பெண்களுக்கு என்னா செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் மிஸ்.கேத்திரின்.

(கேத்திரின் தன்னுடைய கோரிக்கையை நீதிபதி முன்பும் அரசாங்கத்தின் முன்பும் வைத்தாள்)

இந்த கதையில் நான் கூறி இருப்பது உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கை தான் ஒரு பெண்ணிற்கு தந்தையிடமோ, சகோதரனிடமோ தன் மனதில் உள்ள வலியையும், வேதனையும் சொல்ல நினைப்பதில்லை.
தன் உயிராக நினைக்கும் கணவனிடம் மட்டுமே சொல்ல நினைப்பாள். தயவுசெய்து உங்கள் மனைவியின் வலியை ஒரு நிமிடம் கேட்டு பாருங்கள்.

[#மாதவிடாய்# part 9 climax

கேத்திரின் தன்னுடைய கோரிக்கையை நீதிபதியிடம் கூறினாள்.

மக்கள் அன்றாடம் புழங்கும் பொது இடங்கள் பஸ் நிறுத்தம், கல்லூரிகள், பள்ளிகள், பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும், இரயில் நிலையங்களிலும்.
இலவச (நாப்கின்) அரசாங்கம் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலுள்ள தெரு முனையில் ஒரு கழிப்பறையும், தெரு முடிவில் ஒரு கழிப்பறையும் பெண்களுக்கு கட்டி தர வேண்டும்.
குற்றம் எதுவும் செய்யாமல் பொது வளைதளங்களில் இருந்து எந்தவொரு பெண்ணின் வீடியோவும் தொலைக்காட்சியில் போட கூடாது அதையும் மீறி போட்டாள் அந்த நிறுவனம் சம்பந்த பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தன்னுடைய கோரிக்கையை சொல்லி முடித்தாள் கேத்திரின்.

அருண்; நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆனால் ஒரு பெண் கேட்பதற்காக மட்டும் இந்த வசதிகளை அரசாங்கம் எவ்வாறு செய்து குடுக்கும் மிஸ்.கேத்திரின்.

கேத்திரின்; நான் கேட்பது என் ஒருத்திகாக மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தான் இதை நடைமுறை படுத்த என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

அருண்; உங்களை போல் அனைத்து பெண்களும் சேர்ந்து கோரிக்கை முன் வைத்தாள் நீங்கள் சொன்ன அனைத்து கோரிக்கையும் நிறைவேறும். அதற்கு நாம் ஆன்லைன் ஓட்டிங் வைப்போம் மிஸ்.கேத்திரின்

நீதிபதி அதற்கு சரி என்று உத்தரவு பிறப்பித்தார். ஆன்லைன் ஓட்டிங் தொடங்கியது.
இப்போது இந்தியாவில் உள்ள எல்லா ஆண்,பெண் அனைவரும் கேத்திரின் கோரிக்கை வேண்டும் என்று ஓட்டு போட்டனர்.
கேத்திரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு ஆணையிட்டு வழக்கை முடித்தது.
கேத்திரின்னை கேலியும்,கிண்டலும் செய்த அனைவரும் கோர்ட்டிற்கே வந்து கேத்திரினிடம் தங்கள் பார்வையிலேயே மன்னிப்பு கேட்டனர்.
முதலில் நீதிமன்றத்திற்குள் தனியொரு பெண்ணாக உள்ளே சென்ற கேத்திரின், வெளியே வரும் போது அவள் பின்னால் ஒரு பெரிய பெண்களின் அணிவகுப்பே இருந்தது.

கேத்திரின் கனவு மெய் பட வேண்டும்.,,,,

(ஒரு பெண்ணின் வலி என்பது அவர்களுடைய வாழ்வில் என்றும் மறையாத தழும்பாகவே உள்ளது.
அந்த தழும்பை நாம் மறைய வைக்க வேண்டாம், ஆனால் புதிதாக ஒரு தழும்பை உருவாக்காமல் இருப்போம்.)

இந்த கதையில் நான் கூறியிருப்பது பெண்ணின் வாழ்க்கையில் உள்ள ஒரு பகுதி வலியை மட்டும் தான்.

முடிந்தவரை அவர்களை போற்றி பேசா விட்டாலும்,
தூற்றி பேசாமல் இருப்போம்.

அனைத்து பெண்களுக்கும் சமர்பனம்.

சுபம்.

பெண்களின் மாதவிடாய் என்பது எவ்வளவு வலியும், வேதனையும் நிறைந்தது என்று என்னால் முடிந்த வரை வெளியே கொண்டு வந்துள்ளேன்.
அவர்கள் வலி தீர்க்கும் மருந்தாக இனிமேல் நாம் இருப்போம்.

மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை comment ல் சொல்லுங்கள் நண்பர்களே.

அனைவருக்கும் நன்றி,,,,,,

அன்புடன்
மு.சதாம் உசேன்