...

0 views

11,12) Adventures of the four friends.
11)


" எனக்கு என்னமோ சாப்பாடு கிடைக்கற மாதிரி தெரியல . " வருண் .

" போடா . " என்ற வர்ஷினி திரும்ப , அங்கு ஒரு வீடு தென் பட்டது .

" வினு . அங்க பாரேன் . ஒரு வீடு . " என்று அந்த வீட்டை கான்பித்தாள் .

" வா அங்க போய் சாப்பட்லாம் ‌ . பசிக்குது . " என்று பாவமாக கூறினாள் வர்ஷினி .

" சரி வாங்க . " வருண் .

நால்வரும் அந்த வீட்டின் முன் சென்று கதவை தட்டினார்கள் .

டொக் டொக் டொக் என்று பல முறை தட்டினாலும் திறக்கவில்லை .

" என்ன வருண் இது . திறக்கவே இல்ல . " வர்ஷினி .

அவள் கூறிய அடுத்த நொடி கதவு திறக்கப் பட்டது . திறந்தவர் ஒரு முதியவர் . 200 வயது இருக்கும் .

" என்ன வேணும் பசங்களா ‌ . " பாட்டி .

" பாட்டி , நாங்க வழி தவறிட்டோம் . பசிக்குது . சாப்ட எதாவது இருக்கா பாட்டி . " வர்ஷினி .

" வாங்க . " என்று உள்ளே வரவேற்றார் .

நால்வரும் உள்ளே நுழைந்தனர் .

" இந்தாங்க . " என்று கூறி , ஒரு சட்டியில் கூழ் போல் இருந்ததை கொடுத்தார் .

" இது என்னது பாட்டி . " வர்ஷினி .


" இது கூழ்ம்மா . இத குடிச்சா சக்தி கிடைக்கும் . "

" சரி பாட்டி . " என்ற வர்ஷினி அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள் .

சிறிது நேரத்தில் நால்வரும் அந்த கூழை குடித்து முடித்தனர் .

" பாட்டி . இங்க இருந்து எப்படி வெளிய போணும் . " என்று வர்ஷினி கேட்டவுடன் , அவள் கையை பிடித்து இழுத்து , அவள் தலையில் மந்திரக் கோலை வைத்தார் .

" அனுஉஉஉஉ . " என்று கிருஷ் கத்தினான் .

" நான் சொல்றத கேளுங்க . இல்லன்னா இங்கையே சாவுங்க . "


" கேக்குறோம் . என்ன பண்ணனும் ‌ . " வருண் .


" வாங்க ‌. " என்று கூறி விட்டு வர்ஷினியை இழுத்துக் கொண்டு அவர் செல்ல ,  இவர்களும்  பின்னாலையே சென்றனர் . அங்கு சிறியதாக ஒரு கதவு இருந்தது .

" இந்த கதவு வழியா போங்க . நேரம் வரும் போது உண்மை உங்கள தேடி வரும் .

நேசத்தை காரணமாக கொண்டு
வினை விதைத்தவள்...
பாசத்தை கருவாக்கி ஆள நினைக்கிறாள்...
அப்பாசமே அவளை கொன்றுவிட
வரம் சாபமாக மாறியது.. 

கிடைத்த சாபத்தை வரமாக்க முயல்பவள்...
எந்த பாசம் சாபத்தை கொடுத்ததோ அதே பாசத்தை வைத்து வரம் வாங்க நினைக்கிறாள்... " பாட்டி..


" நாங்க எதுக்கு போகனும் . போக முடியாது . " வினு .

" அப்பா இவ செத்துருவா . " மந்திரக்கோலை அவள் தலையில் அழுத்திப் பிடித்தார் .

" போறோம் . போறோம் . " என்று கூறி விட்டு அவள் முன்னால் சென்றாள் . அவளை தொடர்ந்து மற்ற இருவரும் சென்றனர் . அவர்கள் சென்றதும் , வர்ஷினியையும் உள்ளே தள்ளி விட்டவர் , அந்த கதவை மந்திரக்கோலை வைத்து அந்த கதவை மூடினார் .

இங்கு வெளியே வந்த நால்வரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர் . வருண் வர்ஷினியை முறைக்க , வர்ஷினி வினுவை முறைக்க , வினு கிருஷ்ஷை முறைக்க , அவனோ வருணை முறைத்துக் கொண்டிருந்தான் .

" என்ன டா இது . " வர்ஷினி .


அனைவரும் அந்த இடத்தை பார்க்க , அங்கோ அந்த காடு இயற்கை வளங்களை இழந்து , அனைத்து மரங்களும் வாடி போய் இருந்தது .


நால்வரும் முறைப்பதை விட்டு விட்டு , நடக்க தொடங்கினார்கள் .

" என்ன இடம் இது . இப்டி இருக்கு ‌ . இங்க மழை பேயாது போலவே . " வர்ஷினி .

" இருக்கலாம் . " வருண் .


" ஆமா அந்த பாட்டிக்கு வயசு என்ன இருக்கும் . " வினு .

" யாருக்கு தெரியும் . " வர்ஷினி .


" இப்போ எதுக்கு நம்ல இங்க தள்ளி விட்டாங்க . " வினு .


" அவங்க கைல மந்திரக் கோல் இருந்துது . " வர்ஷினி

" ஆமா . ஆனா , அது எப்டி முடியும் . " வருண் .

" தெரியல . ஆனா இருந்துச்சு. அவங்க நம்ம ஏதோ பண்ணனும்னு சொன்ன மாதிரி எனக்கு தோனுது ‌ . " வர்ஷினி.

" பைத்தியமா டி நீ . " வருண் .

" லூசு . அவங்க அப்படி தான் சொன்னாங்க . நேரம் வரும்போது உண்மை உங்கள தேடி வரும் . அப்டின்னா , நம்ம ஏதோ பண்ணனும்னு தான அர்த்தம் ‌ . " வர்ஷினி .

" கதை படிச்சு படிச்சு மூளை குழம்பிருச்சு டி உனக்கு . அப்டிலாம் எதும் இருக்காது . நீ லூசு மாதிரி பேசாத . " வினு .

" அவ ஒன்னும் லூசு மாதிரி பேசல . " கிருஷ் .

" என்ன டா . " வினு .

" அவ சொல்றது உண்மை தான் . " கிருஷ் .

" எப்டி டா . " வருண் .

" அந்த பாட்டி எதுக்கு நம்ல இங்க வர வைக்கனும் . அந்த சின்ன கதவுக்குள்ள இவ்ளோ பெரிய காடு இருக்கு . அவங்க கிட்ட மந்திரக் கோல் . அவங்க ஏன் வர்ஷினிய பிடிச்சு வைக்கனும் . "

" நீ பிட்டு பிட்டா பேசுற . " வருண் .

" டேய் , நான் கேட்டதுக்கு பதில் சொல்லு . அவங்க ஏன் வர்ஷினிய பிடிச்சு வைக்கனும் ‌ . " கிருஷ் .

" ஏன்னா , அவ தான் அவங்க பக்கத்துல இருந்தா . " வருண் .


" இல்ல . வினு தான் அவங்க பக்கத்துல இருந்தா . அப்போ , வர்ஷினிக்கு ஒன்னுன்னா நம்ம எல்லாரும் துடிப்போம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு ‌ . இதே , வினு வர்ஷினி இடத்துல இருந்திருந்தா , அவ அந்த பாட்டிய அடிச்சிருப்பா . ஏன்னா , அதுல அவளுக்கு நம்பிக்கை இல்ல . நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் தூரமா இருந்தோம் . அதுனால , வர்ஷினி தான் அவர் கைல மாட்டுனா . அவங்க ஏதோ கவிதைலாம் சொன்னாங்க . வர்ஷினிக்கு தான் கவிதை தெரியுமே . அவ தான் அதுக்கு meaning சொல்லனும்... " கிருஷ்..


.

.




12)



" நேசத்தை காரணமாக கொண்டு
வினை விதைத்தவள்...

நேசம்னா காதல் ஆ . அப்போ காதல வச்சு சதி செஞ்சவங்க..

பாசத்தை கருவாக்கி ஆள நினைக்கிறாள்...

பாசம்னா . எதை குறிக்குதுன்னு தெரியலையே...

அப்பாசமே அவளை கொன்றுவிட
வரம் சாபமாக மாறியது.. 

அந்த பாசம் அவங்கள கொன்னுடுச்சுன்னா . புரியலையே . தலையும் புரியல வாலும் புரியல .

கிடைத்த சாபத்தை வரமாக்க முயல்பவள்...

இது வேற ஒருத்தவங்களா இருக்கலாம் .

எந்த பாசம் சாபத்தை கொடுத்ததோ அதே பாசத்தை வைத்து வரம் வாங்க நினைக்கிறாள்...

பாசம்னா என்னன்னு தெரிஞ்சா தான் இதுக்கு meaning தெரியும் . " வர்ஷினி .


" இந்த காடு என்ன இருட்டிருக்கு . " வினு .


" தெரியல . டேய் வருண் . time சொல்லு .‌ " வர்ஷினி


" 3:40 . " வருண் .

" அப்புறம் எப்டி இருட்டுச்சு . " வினு .

" நானும் உன் கூட தான் இருக்கேன் . அப்புறம் எப்டி எனக்கு மட்டும் தெரியும் . " வருண் .

" பே . லூசு . " என்று முனுமுனுத்து விட்டு , வர்ஷினியுடன் பேச ஆரம்பித்தாள் .


நேரம் யாருக்கும் நில்லாமல் ஓடியது . 3:40 என்று இருந்த நேரம் , இப்போது 10:00 மணி ஆகி விட்டது . நால்வரும் நடந்து நடந்து களைத்து போய் இருந்தனர் .

.

.

police station :

" இதுக்கு தான் ஊட்டிக்கு அவன போக விட வேண்டாம்னு சொன்னேன் . கேட்டியா நீ . இப்போ அவன கானாம போய்ட்டான் . " என்று வருணின் தந்தை தன் மனைவியை திட்டிக் கொண்டிருந்தார் .

" நான் என்னங்க பண்ண . அவன் ஆசையா கேட்டான் ‌ . அதான் போய்ட்டு வான்னு சொன்னேன் ‌ . இப்டி ஆகும்னு நினைச்சு கூட பாக்கலையே . " என்று கூறியவர் அழத் தொடங்கினார் .



" ஏய் அழாத டி . "

" உங்க பசங்கள இனி காப்பாத்த முடியாது . " என்று police கூறவும் அந்த இடத்தில் அழுகை சப்தம் அதிகரித்தது .

.

.





© Ashwini