...

5 views

எனை சாய்க்கும் தென்றலே
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே


இரவில் மின்னும் நட்சத்திரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அழகாய் மின்னியது அந்த திருமண மண்டபம்....
மாடியில் நிலவினை ரசித்துக் கொண்டிருந்தாள் தன்ஷிகா

இங்க என்னப்பா ஒரு நிலா இன்னொரு நிலாவ ரசிச்சுகிட்டு இருக்கு .... _ வினி

என்ன வினி என்ன கலாய்க்க வந்துடியா _ தன்ஷி

உண்மைய சொன்னா
கலாய்க்குறனு சொல்ற தன்ஷி உண்மையாதான் சொல்றேன் வேற யாரு பாத்தாலும் இததான் சொல்வாங்க தன்ஷிமா _ வினி

அய்யோ எதுக்கு இப்டி ஐஸ் வைக்குற என்னால என்ன காரியம் ஆகனும் வினி உனக்கு _ தன்ஷி

அப்டில ஒன்னும் இல்லை தன்ஷி _ வினி

சரி நம்புறேன் _ தன்ஷி

ம்ம்ம்ம் தன்ஷி அண்ணன் கிட்ட பேசினியா என்ன சொன்னாங்க _ வினி

உங்க அண்ணன் கிட்ட நா பேசல
நாளைக்கு கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் பேசலானு
இருக்கேன் வினி_தன்ஷி

சரிடி அய்யோ நான் வந்த விஷயத்தை மறந்துட்டேன் உன்ன அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க காலையில சீக்கிரம் எழுந்து ரெடி ஆகனுமாம் _வினி

ம்ம்ம்ம் சரி வா போகலாம் _தன்ஷி

மஹிதரன் weds தன்ஷிகா என்ற பெயர்ப்பலகையை தாங்கி நின்றது அந்த திருமண மண்டபம்

தன்ஷி அடியே சீக்கிரம் எழும்புடி கல்யாணத்துக்கு மணி ஆகிடிச்சி
எழுந்திருடி நீ இப்போ எழுந்திரிக்கல என் அண்ணனுக்கு வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சிடுவேன். அய்யோ அம்மா எதுக்குடி இப்போ அடிச்ச _ வினி

உன்ன அடிக்காம கொஞ்சுவங்களா எப்படி என் புருஷனுக்கு வேற பொண்ணு பார்க்குறனு சொல்லுவ
அத பாத்துட்டு நான் சும்மா இருக்கனுமா அதான் அடிச்சேன் ஒரு அடியோட நிறுத்திட்டேனு சந்தோஷப்படு _ தன்ஷி

சும்மாதான் உன்ன எழுப்ப சொன்னேன் அதுக்கு இப்டி அடிக்குற எருமை மாடு உன்ன போ
நான் என் அண்ணன் கிட்ட சொல்றேன் இந்த பொண்ணு வேனா அண்ணன் வேற பொண்ணு
பாத்துக்கலாம்னு _ வினி

திரும்ப அடிவாங்காத வினி

எதுக்கு இப்போ அழுகுற தன்ஷி
சாரிடி சும்மா தான் சொன்னேன் உன்ன கஷ்டபடுத்த சொல்லல தன்ஷி உன்ன விட ஒரு நல்ல பொண்ணு எங்க தேடுனாலும் என் அண்ணனுக்கு கிடைக்க மாட்டாங்க சாரி தன்ஷி _ வினி

வினி உனக்கு தெரியும்ல நான் அவங்க மேல எந்த அளவுக்கு அன்பு வைச்சி இருக்கேன்னு உனக்கு தெரியும்ல என் உயிரே அவங்க தான்டி சும்மா கூட அவங்கள வேற பொண்ணு கூட சேர்த்து வைச்சி பாக்க முடியாதுடி _ தன்ஷி

தன்ஷிமா எனக்கு தெரியும் உனக்கு அவங்கள எந்த அளவு பிடிக்கும்னு வீணா மனச போட்டு குழப்பாம கல்யாணத்துக்கு ரெடியாகு _ வினி

சரி வினி

பூக்களில் அலங்கரித்த மேடையா இல்லை பூக்களே மேடையா என அறிய இயலா வகையில் அலங்கரிக்கப் பட்டு இருந்தது மணமேடை
ஆண்மகனிற்கான கம்பீரத்துடன் பட்டு வேட்டி சட்டையில் மணமேடையில் அமர்ந்து இருந்தான் மஹிதரன்
அரக்கு வண்ண பட்டில் ஒப்பனைகள் ஏதுமின்றி தேவதையாய் வந்தாள் தன்ஷிகா
அழகுப் பதுமையாக அவன் அருகில் அவள் அமர்ந்தாள்
அய்யர் மந்திரம் ஓத அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவளின் சங்கு கழுத்தில் பொன்தாலி அணிவித்தான் மஹிதரன்

தொடரும்....

© All Rights Reserved