...

1 views

ஓநாய் ஆட்டுக்குட்டி புலி
கர்ணா தனிமையில் படகின் முன்னாடி பகுதியில் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அந்தப் பகுதியில் பெரிய டான் போன்று சுற்றி வந்து கொண்டு இருந்தான், அந்தக் காலகட்டம் பெரிய வியாபாரம் எல்லாம் இல்லை கடலில் சென்றால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்குமா இந்த அரசாங்கம் உதவி செய்யுமா எனத் தெரியாத அந்த மக்கள் பகுதியில் இருந்தனர் . 

அந்த மக்கள் பொறுத்த வரை கர்ணன் எப்பொழுதும் அவர்களுக்காக வாழும் ஒருவன் தான் 

ஒரு நாள் அந்த மீனவ கிராமம் அந்தப் பகுதியில் வரப் போகும் பெரிய தொழிற்சாலை பணிகள் தொடங்க அந்த மக்கள் எல்லோரையும் வெளியேற்ற மும்பை அரசாங்கம் முடிவு செய்தது அவர்களுக்குப் பெரிய பெரிய பண முதலைகள் தான் முக்கியம் போல இருக்க அப்போது தான் கர்ணன் முன்னே வந்தான் அவன் தலைமையில் ஒரு கூட்டம் உருவாக அந்த மக்களுக்காக அவன் முன்னே நின்று போராடினான் அவர்கள் கூட்டம் கண்ட அரசாங்கம் அவகளை எதும் செய்ய முடியாத நிலையில் இருக்க இந்தியாவில் பல மாநிலங்கள் பல தொழிற்சாலை உள்ளே வரக் கூடாது எனப் பல போராட்டம் தொடங்க ஆரமித்த காலம் என்பதால் அப்பொழுது பெரிதாகத் தொழில்நுட்பம் இங்கே இல்லாமல் இருந்ததால் பெரிதாக ஒன்றாகக் கூட முடியாமல் இருந்தது ஆனாலும் அந்தக் காலாத்தில் இருந்த மக்கள் எல்லோரும் போராடும் குணம் கொண்டு இருந்ததால் எல்லோரும் ஒன்றாகக் கர்ணன் பின் சேர்ந்தனர் கர்ணன் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை அந்த மக்கள் நடுவில் பெரிய பட்ட படிப்பு படித்து விட்டு அந்தக் காலத்தில் சரியான வேலை இல்லாமல் பல இன்னல்கள் அவன் சந்தித்து இருக்க அவனைக் கோவம் கொண்ட இளைஞன் ஆக மாற்றியது ( THE ANGRY YOUNG MAN )   அவனின் குணம் கண்டு அந்த மக்கள் எல்லோரும் அவனைத் தலைவன்போல நடத்த தொடங்கினார் பல ஆண்டுகள் ஓடி விட்டது 

இன்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டே அவன் மனதில் தான் எதும் மக்களுக்குத் தெரியாயமல் தவறு செய்கிறோம் என மனதில் ஒரு பக்கதில் குற்ற உணர்ச்சி இருக்க ஆனாலும் அவனின் மனதில் இதன் மூலம் வரும் பணம் தனக்கு பெரிய மரியாதை மற்றும் தன் மக்களுக்காகப் பிற்காலத்தில் நல்லது செய்ய முடியும் என நினைத்தான் 

கர்ணன் கர்ணன் சுற்றி இருக்கும் அனைவரும் இவனைப் போலத் தான் நினைத்துக் கொண்டு இருக்க...