...

7 views

உண்மையில் யார் ஹீரோ
♦️ *யார் உண்மையில் ஹீரோக்கள்?*

*2023 ஜனவரி 14* அன்று சென்னையில் இரு சினிமா கதாநாயகர் களின் திரைப்படம் வெளியீடு. எல்லா இடங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு யார் வாரிசு?
யார் துணிவு? எனது ஹீரோவா? உனது ஹீரோவா? வசூலில் சாதனை யார்? எந்த ஹீரோவின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம்?
உற்சாகம் நிலை தடுமாறி போய் தண்ணீர் டேங்கர் லாரி மேலிருந்து கீழே விழுந்து தனது ஹீரோவிற்கு உயிரையே தியாகம் செய்த அப்பாவி ரசிகன்...
இவைதான் *தமிழகத்தில் நிஜ காட்சிகள்....*

*ஆனால்.....*

அதே நாளில் அன்று மாலை 5.40 மணிக்கு *காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோஷில்லா சுரங்கப்பாதையில்* வேலை செய்து வந்த *மெகா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸை* சேர்ந்த 172 பேர்கள் *மிகப்பெரிய பனிச்சரிவில் மாட்டிக் கொண்டார்கள்* .

அந்த கம்பெனி உடனே நமது இந்திய ராணுவத்தை தொடர்பு செய்து உதவி கோரினர்.

*"சேவா பரமோ தர்ம"*
*என்ற தனது குறிக்கோளுக்கு இணங்க*
ராணுவம் உடனடியாக *அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமெண்ட்டை* சேர்ந்த *தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களை களத்தில் இறக்கியது.* அந்த

*காரிருள் சூழ்ந்த மைனஸ் 15 டிகிரி கடும் பனிக் குளிரில்* மோப்ப நாய்களின் துணையுடன் தேவையான கருவிகளுடன் *ராணுவம் மீட்பு பணியில் இறங்கியது* . கூடவே *மருத்துவ குழுவும் உயிர் காக்கும் சேவையில்.*

*ஜனவரி 15 காலை பொழுது புலரும் வேளையில் 172 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர் சிறிதளவு காயம் கூட இல்லாமல்.*

தமிழகத்தில் சாதாரண *அரிதாரம் பூசும் நடிகனுக்காக* தன் மதிப்பு மிக்க *உயிரை பலி கொடுத்த பரிதாபம்!!*

மற்றொரு பக்கம் *தனது உயிரையும் துச்சமாக மதித்து* *172 பேரையும் உயிருடன் மீட்ட நமது ராணுவ வீரர்கள்.*

*யாருக்கு நாம் வணக்கம் செய்ய வேண்டும்?*

*இந்த பெருமை மிக்க விஷயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லாத* *ஊடகங்களை என்னவென்று சொல்வது?*

*இவர்களில் யார் உண்மையான ஹீரோ?*

பெயர், முகம் தெரியாத அந்த *ராணுவ ஹீரோக்களுக்கு நமது வந்தனைகளை தெரிவிப்போம்!!!*

*ஜெய்ஹிந்த்!!!!*

🙏🙏🙏🙏🙏🙏🙏