இது போர்க்களம்
எல்லோரும் திட்டம் போடத்து போல நடந்து கொண்டு இருக்க அங்கே ஜான் வேற ஒரு திட்டம் செயல் படுத்த ஆரமித்தான் , இங்கே கர்ணன் பணையம் வைத்து விட்டுப் பக்கத்து தீவு சேர்ந்த ஆட்கள்மூலம் 3 நாள் அப்பறம் வர வேண்டிய கப்பலை அவர்கள் எல்லோரும் வேறொரு சிறிய கப்பலில் சென்று மடக்கி விட்டனர் ஜான் வரப் போராதை தெரிந்த அந்தக் கப்பல் மாலுமி ஜான் வருகைக்காகக் காத்து கொண்டு இருந்தான் ,
பல சாக்கு மூட்டைகள் இந்தப் படகிலிருந்து அந்தக் கப்பலில் கை மாற்றப் பட்டது , பிறகு ஜான் போட்டு வைத்த திட்டம்போல வெள்ளை நிற பொடி மற்றும் மாத்திரை கள் நிறைந்த பெரிய பெரிய பெட்டிகள் இருப்பதை உறுதி படுத்தி கொண்ட ஜான் அங்கே இருந்து கிளம்பி சென்றான்
இரண்டு நாட்கள் முடிவு அடைந்த பின் திட்டம் போட்டது போலக் கர்ணன் சிறைசாலை அழைத்துச் செல்லப் பட்டான் ஆனால் மக்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் செய்தார்கள் , அங்கே கர்ணன் இருக்க அவனைப் பார்க்க முதலில் தீபா சென்றால் தீபா வைப்பார்த்த கர்ணன் என்ன மேடம் எதுக்கு என்னை இப்போ கைது செஞ்சி இருக்கீங்க , கண்டிப்பா பழைய கேஸ் எனப் பொய் மட்டும் சொல்லாதீங்க கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு என்ன சரியா மேடம் எனக் கேட்டான்
இவர்கள் பேசிகொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருந்த ராஜா சிறிது நேரம் கழித்து அந்த அறையில் நுழைந்தான்
ராஜா வருவதை பார்த்த கர்ணன் ,
ராஜா வை எங்கயோ பார்த்த மாதிரி இருக்க யோசனையாக இருந்தான் , சிறிது நேரம் யோசித்த பின் ராஜா முகத்தைப் பார்த்து நீ தானே அன்னைக்கு என்னைப் பார்க்க வந்த அப்போ என்னவோ நீ வேலை தேடிட்டு இருக்க எனச் சொன்ன
அன்று இரவு நேரம் கர்ணன் கடற்கரை பகுதியில் நடந்து கொண்டு இருந்தான் அப்பொழுது இருவர் அடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது அங்கே ராஜா இருக்க அவனை இருவர் அடித்துக் கொண்டு இருந்தனர் அதைக் கண்ட கர்ணன் அங்கே ஓடிச் சென்று என்ன என்று பார்க்க அங்கே சண்டை போட்டுக் கொண்டு இருந்த எல்லோரையும் விளக்கி விட்டு ராஜா அருகில் செல்ல அப்பொழுது தான் தெரிந்தது அங்கே ராஜாவை அடித்த எல்லோரும் வழிப்பறி கும்பல் என்பதை கண்ட கர்ணன் அனைவரையும் தன் ஆட்களுக்குக் கண் அசைவில் கட்டளை யிட்டான் கொண்டு போகச் சொல்லி .
...