...

4 views

*அன்பு வேணுமோ அன்பு*

அன்பு வேணுமோ அன்பு…
அன்பு வேணுமோ அன்பு…
கூவிக்கூவி விற்றுக்கொண்டு
சென்றான் ஒருவன்

உன்
அன்பை வச்சிக்கிட்டு
என்னா செய்றது?
கேட்டான் ஒரு வழிப்போக்கன்

என்னா
அப்புடிக் கேட்டுட்டீங்க
அன்பு இல்லாட்டா இந்த உலகத்துல
ஒண்ணுமே இல்ல

பொறவு ஏன் கூவிக் கூவி விக்கிற
உங்கிட்ட யாராச்சும்
அன்பு வேணும்னு கேட்டாங்களா
அவனவன் சோத்துக்கும் சுகத்துக்கும்
ரூவாவத்தேடி அலையறான்
இவரு அன்பு விக்க வந்துட்டாரு
அன்பு
...