...

3 views

சாதல் ! சாதல் ! சாதல் !
ஒரு மாந்தோப்பு பூ -வெடுத்திருந்தது !

அந்த மாந்தோப்பில் ஒரு குயில் அழகாக பாடும் !

தினமும் ,

அது பாடும் இனிமையான பாட்டைக் கேட்டுக் கொண்டே
வேலை செய்வேன் !

இன்று ,
நான் மாமரத்தின் அடியில் மண்டி கிடக்கும் புல் பூண்டுகளை ஒரு

கூர்மையான மண்வெட்டியால் வெட்டி ,

கசடுகளையெல்லாம் ஒருபக்கமாக குவித்துக்கொண்டிருந்தேன் !

எனக்கு ,
என்னயென சரியாகச் சொல்லத் தெரியவில்லை !

ஆனால்,

இப்போது,

பாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு அமைதியான மனநிலை
இருந்தது போல் தெரிந்தது !

அதனால், என் நண்பனைப் பற்றி சிந்திக்க

ஆரம்பித்தேன் !

அவனுக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் !

தான் பாடும்போது தனது குரல் நன்றாக இருக்க வேண்டுமென்று ,

சுக்கு காபி சாப்பிடுவான் !

ஒரு மிளகை எடுத்து தனது உள்நாக்கில் வைத்து கொள்வான் !

காட்டுத்தேன் சாப்பிடுவான் !

ஓயாமல்,

காலையும் மாலையும் பாடி பயிற்சி செய்யும் போது பார்ப்பேன் !

வியப்பாக இருக்கும் !
கூடவே ஒரு வினாவும் இருக்கும் !


பயிற்சியில்லாமல் குயில் எப்படி பாடுகிறது?
அது,
சுக்கு காபியோ ,மிளகோ சாப்பிடுவதில்லை !

காட்டில் கிடைக்கும் சாதாரண உணவுகளைச் சாப்பிடுகின்றது !

என்றாலும் ,

பாடுவோரைவிட நன்றாகப் பாடுகிறது !

எப்படி?

என ,

வாயை பிளந்து கொண்டு அண்ணாந்து மாமரக்கிளையைப் பார்த்தேன் !

அந்த நொடி , அந்தக் கிளையில் இருந்த அந்த குயிலில்லை ,

ஒரு காக்கா என் நெற்றியில் எச்சமிட்டு விட்டது !

நெற்றியில் விழுந்த எச்சத்தைத் துடைத்துக் கொண்டே ,

மனதோடு ,

இப்படி ,

சொல்லிக்கொண்டேன் !

நான் ,

களையெடுத்து ,எவ்வளவு
கஷ்டபட்டாலும் ,
முழு லாபமும் முதலாளிக்குதானே சேரும் !

அதுபோல ,

கடவுள் யார் தலையில் என்ன எழுதினாரோ அது படிதானே
குரல் வளமும் இருக்கும் !

கடவுள் எச்சம் போடவிட்டும் பேசுவார் போல,
ச்சை ,,
எச்சம் பட்டுடுச்சே என்ற
அலுப்போடு துண்டை உதறிவிட்டு சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கலாமென்றுப்
போனேன் !

அப்போதுதான் , நான் வருவதற்குள் ,
என் கார் வரும் பாதையின் ஓரம் வளர்ந்துள்ள புற்களை தரித்து வையென முதலாளி சொன்னது நினைவுக்கு வந்தது !

உதறியதுண்டை வெயிலுக்கு
கட்டிக்கொண்டு,

ஒய்வெடுக்கும் எண்ணத்தையும் உதறிவிட்டு,
கார் ஓடும் பாதையை நோக்கி நடந்தேன் !

ரோட்டு மேல வேலை

இருக்கு !

Bye frinds !


© s lucas