மனதோடு மழை தூறுதே...
ஏனோ சில நாட்களாக அவள் கையில் அடைக்கலமாகும் பொழுதெல்லாம் கடல் நீரில் குளிப்பதாய் பிரம்மை அவளின் நாட்குறிப்பேட்டிற்கு....
சில நாட்களாக தான் இந்த நிலை... இதற்கு முன்பு எல்லாம் கையில் கொண்ட பேனாவால் ஏதேதோ எழுதியவள் எழுத வைத்தவன் நினைவில் உதட்டால் ஒற்றி எடுத்து அவளின் உதட்டு சாயத்தாலும் எழுதி வைப்பாள் நாட்குறிப்பேடே நாணிடும் காதல் கதையை
அவனை சந்திக்க வைத்ததும் மழை தான் அவர்களின் பிரிவுக்கு சான்றாய் நின்றதும் மழை தான்...
ஆம்... பிரிவு தான் அவன் தந்த பிரிவு அல்ல... அவளாக அவனுக்கு தந்த வலியின் உச்சம் அவனுக்கு மட்டும் அல்ல அவளுக்கும் அது உயிர் வலிதான்... ஆனால் அவன் உயிரை காக்க வேண்டுமே...
காதலன் உயிர் காக்க காதலை இழக்க துணிந்து விட்டாள் பேதை....
அழுத விழிகளோடு டைரியை அணைத்துக் கொண்டு சாளரம் வழியே பார்க்க எதிரில் உள்ள காட்சிகள் மறையும் அளவு பேய் மழை பொழிந்து கொண்டிருந்தது.
இப்படியான ஒரு மழை நாளில் தான் அவனை சந்தித்தாள். இவள் ருத்ரா..
பெயருக்கேற்ற ருத்ரத்தை கண்ணில் கொண்டு தன்னை நெருங்கும் ஆண்களை நெருப்பாய் எறித்திடுவாள். அந்த ருத்ர அக்னியை குளிர்விக்க வந்த மழையாய் அவன்...
அவன் வர்ஷன் என மழையின் பெயரை கொண்டதாலோ என்னவோ மழை என்றாலே அலாதி பிரியம் அவனுக்கு.
எப்போதும் கோபமாய் காட்சி தந்தாலும் மழையிடம் மட்டுமே குழந்தையாய் இணைவாள் ருத்ரா...
கொட்டும் மழையில் கல்லூரி அருகில் இருந்த பூங்காவில் பெண் மயிலென ஆடிக் கொண்டு இருந்தாள் ருத்ரா
எப்போதும் மழையை ரசிக்கும் குணமுள்ளவன் இன்று மழையில் நனையும் மலர்களையும் மழையோடு விளையாடும் மயூரியாக மங்கையையும் அவன் அனுமதி இன்றி ரசிக்க தொடங்கியது அவன் விழிகள்
அதை உணர்ந்தவள் அந்நிய ஆண் தன்னை ரசிக்கும் அளவு தான் நடந்து கொண்டதை மறந்து "அடுத்த வீட்டு பொண்ணை இப்படி பாக்குறீயே... உன் வீட்டு பொண்ணை யாராவது சைட் அடிச்சா சும்மா விடுவியா?" என தன் இயல்பான குணம் தலை தூக்க அவனிடம் சண்டைக்கு சென்றாள்.
அவன் குடும்பத்தை பற்றி பேசியதில் மனம் உடைந்து அவளிடம் அவனே மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
சில நாட்கள் கழித்து அவள் கல்லூரிக்கு செல்லும் அதே பேருந்தில் அலுவலகம் செல்ல பயணிக்க முதலில் தன்னை பின் தொடர்கிறானோ என்று சந்தேகித்து கோபம் கொள்ள அதன்பின்பே தன் கல்லூரியில் படிக்கும் இன்னொரு பெண் அவள் தோழியிடம் "அவனை கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஃபாலோவ் பண்ணி இந்த பஸ்ல வரேன் நோ ரெஸ்பாண்ஸ்... சரியான ஜடம்" என சலிப்பாக கூற கேட்டு அவன் கடந்த ஒருவருடமாகவே இதே பேருந்தில் பயணிப்பதை அறிந்து 'தான் தவறாக புரிந்து கொண்டோமோ' என்ற எண்ணம் முதல் முதலாக தோன்றியது.
அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்தவன் ருத்ராவிடம் சில்மிஷம் புரிய ருத்ரா அவனை அடிக்கும் முன் வர்ஷன் அவனை அடித்து துவைத்து எடுத்து விட்டான்.
நன்றி சொல்ல வந்தவளை கையமர்த்தி "என் வீட்டு பொண்ணு இல்லைங்க எதிர்ல எந்த பொண்ணுக்கு பாதிப்புன்னாலும் நான் உதவி செய்ய தயங்க மாட்டேன்... அன்னைக்கு மழையில அந்த பார்க்ல இருந்த பூவை எப்படி ரசிச்சேனோ அதே பார்வையில தான் உங்களை பார்த்தேன் வேறெதுவும் தப்பான எண்ணம் இல்ல" என்று அன்றைக்கு புரிய வைக்க வேண்டியதை இன்றைக்கு உரைக்க
அவளும் அவனின் பார்வை அர்த்தம் புரிந்து "சாரிங்க" என மன்னிப்பு கேட்க அவன் புன்னகையில் அவளை மன்னித்தான்.
அதன் பின் பெயர்கள் பரிமாறி பொதுவாய் கொஞ்சம் உரையாடி... தினமும் அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் பேருந்தில் இடம் பிடித்து நட்பு பலப்பட்டு
ருத்ரா "ருத்" ஆகவும் வர்ஷன் "வரு" ஆகவும் பெயர்கள் மாற்றம் பெற்றிருந்தது. மனங்கள் இடமாறியதை அறிந்தாலும் பரிமாற தோன்றாமல் தள்ளிப் போட்டனர் இருவரும்...
ஒருநாள் பதினேழு வயது பெண்ணொருத்தியை தன் தோளோடு அணைத்து பிடித்து ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தான் வர்ஷன்.
தன் தோழிகளோடு வெளியே வந்திருந்த ருத்ரா கண்களில் இக்காட்சி விழ எதையும் சிந்திக்காமல் அவனை இன்னொரு ஆட்டோவில் பின் தொடர ஒரு மருத்துவமனையில் நின்றது வர்ஷன் சென்ற ஆட்டோ..
அந்த பெண் தள்ளாடி நடக்க இவன் கை தாங்கலாக அழைத்துச் செல்ல சந்தேகம் வலுத்து பின்னே சென்றவள் ரிசப்ஷனில் 'தன் தங்கை' என்று பெயர் கொடுத்துக் கொண்டு இருந்தவனை ஓடிச் சென்று பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் ருத்ரா.
வர்ஷன் பதறி விலகி விசாரிக்க உண்மை உரைத்தவள் "உங்க மேல சந்தேகம் இல்லை வரு... எங்க என்னை விட்டு போயிடுவீங்களோன்னு பயம் அவ்வளவு தான்" என தன் காதலையும் சேர்த்தே உரைத்தாள் கொஞ்சம் தயங்கியபடி... பின்னே அவன் தன்னை தவறாக எடுத்துக் கொள்ள கூடாதே...
அவளின் எண்ணம் முழுதாய் புரிந்திட ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது இல்லை... இருந்திருந்தாலும் இவள் முன்பு இழுத்துப் பிடிக்க முடியாதே....
"இவ என் தங்கை பெயர் வத்சலா... திடிரென பயங்கர காய்ச்சல் அதான் டாக்டர் பாக்க வந்தோம்" என்று எப்போதும் போல அவளை மயக்கும் புன்னகையோடு கூற
அதில் மயங்கிய மனதை கட்டி வைத்து "ஏன் வரு......