...

0 views

தொலைதூர மருத்துவம்
#WritcoStoryPrompt12
கிழவி மரணத்தை நெருங்கினாள். அவள் வலி நிறைந்த மூச்சுத்திணறல்களை இழுக்க முயற்சிப்பதை என்னால் கேட்க முடிந்தது. உலகின் இந்த தொலைதூர பகுதியில் ஒரு மருத்துவராக நான் உதவியற்றவனாக உணர்ந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லையா?
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் தொலைவு ஒரு தடையே இல்லை என்று என் நண்பன் சொன்ன பிறகு தான்
மனதில் சிறிய அளவிலான தைரியம் வந்தது.எப்போதும்
மனம் கலக்கத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்க முடியாது,எந்த யோசனையும் தோன்றவும் செய்யாது.
பாட்டியை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆணையிட்டேன் .அங்கு சென்றவுடன் அங்குள்ள மருத்துவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்னிடம் பேச வைத்து,அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கேட்டு விட்டு நானும் என்னுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சொல்ல அவரும்
அதை ஏற்றுக்கொண்டு
பாட்டிக்கு வைத்தியம் பார்த்தார்.
என்ன அதிசயம்,பாட்டி ஆபத்
தானகட்டத்தைதாண்டி,சகஜ நிலைக்கு வந்து விட்டார்.
உலகில் எந்த மூலையில் இருந்தும் சிறப்பான சிகிச்சை கொடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தேன்.தக்க சமயத்தில்,யோசனை கூறிய நண்பனுக்கு நன்றி சொன்னேன்.இனி பாட்டி பிழைத்து கொள்வார்,அடுத்த மாதம் அவரை நேரில் சந்திக்க போகிறேன்.பாட்டி தான் என்னை மருத்துவம் படிக்க சொல்லி,படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கு மேல்படிப்பு படிக்க அனுப்பிவைத்தார்.இவ்வளவு உதவி செய்த பாட்டிக்கு என் படிப்பு உதவாமல் போய் விடுமோ என்று கவலை பட்டேன்.ஆனால் ஆண்டவன் அருளும்,விஞ்ஞான வளர்ச்சியும் தக்க சமயத்தில் உதவியது

© Vadamalaisamy