...

10 views

My first love at college

(ரொம்ப அழகான கதைனு சொல்லிற முடியாது. முழுசா இந்த லவ்.அ கொண்டு போக முடியல... ஆனா அந்த கொஞ்ச நாள்ல எங்களுக்கு இடைல இருந்த எண்ண அலைகள் ரொம்ப அழகா இருந்துச்சு...)

ஒரே பொண்ண நாலு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கானேன்னு கடவுள் நெனச்சாரோ என்னவோ...

(mind voice: கடவுளுக்கு வேற வேல இல்லையாடா)

மனசுல ஒரு மாற்றம்...

அது ஓவரா பண்ணுது... வேற பொண்ணு எதாச்சும் பாத்துக்க வேண்டியதுதான் னு சொல்லுச்சு...

(((ஆனா அந்த பொண்ணோட நிலைமை என்னன்னு நல்லாவே தெரியும்... அவுங்க வீட்ல ரொம்ப ஸ்டிக்ட். நான் நல்ல பையன்னு அதுக்கு தெரியும்.
இருந்தாலும் என்னப் பண்றது)))

அதுதான் சரினும் தோனுச்சு...

திடீர்னு கடைசி செமஸ்டர் அப்போ...

கொஞ்சம் முன்னாலயே தோனிறுக்கலாம்... பைத்தியம்... இப்போ பாரு காலேஜ் முடிஞ்சு போச்சு..‌.

வழக்கம் போல காலேஜ் முடிஞ்சு மதியம் ஷிப்ட் வர்ற பொண்ணுகள பாத்துட்டு இருந்தோம்...

பக்கத்துல ஃப்ரண்டு பீஜி அண்ணனோட ஆள பத்தி விசாரிச்சு கிட்டு இருந்தான்.

அவுங்க அங்க இருந்த டேப்.ல தண்ணி புடிச்சுக்கிட்டு இருந்தாங்க...

அப்போதான் அந்த பொண்ண பாத்தேன்.

செம்ம அழகு... செம்ம கலர்...

(எனக்கு அப்டி தெரிஞ்சாங்க)

இந்த அழகா இருக்க பொண்ணுங்க எல்லாம் பீஜி.யா இருக்குன்னு தோனுச்சு...

இருந்தாலும் சைட் பண்றத விடல...

அப்றம் விசாரிச்சதுல அவுங்க யூஜி தான்னு தெரிஞ்சுது...

அவுங்க அன்னக்கி போட்ருந்த ட்ரெஸ் இப்பவும் ஞாபகம் இருக்கு...

ஆரஞ்ச் கலர் சுடிதார்...

அவுங்க கலருக்கும் அந்த ட்ரெஸுக்கும்... ப்பா...

பயங்கரம்...

அப்போ பக்கத்துல இருந்த ஃப்ரண்ட் கிட்ட சொன்னேன்.

இனிமே இதான் என்னோட ஆளு"ன்னு...

பயபுள்ள என்ன நெனச்சானோ நம்மல பத்தி...

அந்த பொண்ணு ரொம்ப அழகா தெரியுது அதெல்லாம் நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லிட்டான்...

அவன் அப்டி சொன்னத்துக்காகவே அவுங்கள ஃபாளோ பண்ணணும்னு தோனுச்சு...

அடுத்த நாள்...

அடுத்த பதிவில்...

(((மேல உள்ள படம் எங்க காலேஜ்ல உள்ளது. இதுக்கு எதிர்லதான் தண்ணீர் டேப் இருக்கும். நாங்க சைட் பண்றத்துக்காகவே கட்டி வச்ச மாதிரி. இது எங்க பென்ச்... வேற யாரும் இங்க உட்கார முடியாது)))
© murugs
#தமிழ் #pudukkottai #tamilnadu #india #love #memories #crush #dream #writco #lovestory #thanjavur #