...

1 views

தி கோஸ்ட்



தி கோஸ்ட் 



(நினைத்த எல்லாம் நடக்கும் என நினைக்கும் மடமைகள் இங்கே இருக்கும் வரை செயல்முறையில் நிகழத்த நினைக்கும் போராளிகள் முன் எல்லாமே வீணாகத் தான் செய்கிறது )



ரம்யா சுரேஷ் ஒரு பக்கம் ஸ்கெட்ச் போட்டுக் கீதா வை மாட்ட வைக்க என யோசித்து இங்கே சிலவற்றை செய்ய , இதற்க்கு முன் ஆதிரா நினைத்த படி செயல்பட்டால் இங்கே எல்லாமே தவறாக நடக்கும என நினைத்த எல்லோரும் கதிர் மேற்பார்வையில் புதிதாக உருவாக்கப் பட்ட சில நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கியது , 


அன்று காலைச் சுரேஷ் ரம்யா கதிர் ஆதிரா செயல் திட்டம் தீட்ட வர்மா வீட்டில் இருந்தனர் ரம்யா என்ன செய்யலாமெனக் கேட்கும் பொது சதீஷ் தான் இந்த முறை நான் சொல்லும் வழியில் செய்யலாம் கண்டிப்பாகக் கீதா மாட்டுவா எனக் கூறினான் 


சதீஷ் நான் பிரின்சிபால் கிட்ட சொல்றதை சொல்லி அவரை நம்ம பக்கம் திருப்பனும் வர்மா சொன்னதை கதிர் தான் சொல்லப் போறான் , கதிர் அவர்கிட்ட வர்மா உடல்நிலை சரி இல்லையெனக் கூறி தேர்வு மட்டுமே எழுத முடியும் என்று ஒரு அறிக்கை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நடக்க வேண்டும் , 


ரம்யா முடிஞ்ச வர உங்க கிளாஸ் பக்கம் இதை நடக்குறது நமக்கு நல்லது சுரேஷ் நீ கீதா உன்னோட கண்காணிப்பு , சில நேரம் நம்ம குறி தப்ப கூடாது , 


ஆதிரா மேடம் நீங்க நான் சொல்லுற நேரம் அந்தக் காலேஜ் உள்ள போகணும் நமக்கு முக்கியம் கீதா தான் இதுக்கு மேல நம்ம அமைதியா இருக்க வேணாம் எனக்குத் தெரிஞ்சு வர்மா போன காரியம் சீக்கிரம் முடிய போறது இல்லை , ஆதிரா மேடம் நீங்க எனக்குத் தெரிஞ்சு ஒரு டம்மி போலீஸ் வச்சு தான் கீதா வைப்பிடிக்கணும் எனக் கூற . 


சதீஷ் கூறிய அனைத்தும கேட்டுக் கதிர் கைத்தட்ட ஆரமித்தான் , ஆதிரா சதீஷ் யைப்பார்த்து வேற லெவல் மேன் நீயெனப் பாராட்டினால் , 
ரம்யா ஒரு பக்கம் சரி சதீஷ் நம்ம அங்க நடக்க போற எல்லாமே பதிவு செய்யணும் எனக் கூற கதிர் ஜாக் ஜூலியெனக் கூப்பிட உடனே இருவரும் கையில் பல gadget உடன் வந்தனர் எல்லோரிடமும் ஒரு மொடம் அதில் சிம் , camera , recorder , எனப் பல வற்றை அவர்களிடம் கொடுத்தான் . 


அதைக் கண்ட எல்லோரும் சற்று ஆவளோட அதைப் பார்த்தனர், 
ரம்யா நான் makeup gadgets எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறி விட்டு எடுத்துக் கொண்டால் , ஆதிரா அப்போ நம்ம போலீஸ் மட்டும் ரெடி பண்ணனும் எனக் கேட்க , 


கதிர் அதற்க்கு நீ எதற்க்கும் கவலை பட வேண்டாம் நான் ராஜா மாமா கிட்ட எல்லாமே பேசிட்டேன் நமக்குக் குறிபிட்ட சில உதவி கிடைக்கும் நாம இப்போ அவங்களை பிடிச்சி ராஜா மாமா கிட்ட தான் கொடுக்கப் போறோம் , கோஸ்ட் டீம் நமக்காக இன்னைக்கு காலையில நம்ம ஊருக்கு வந்துட்டாங்க அதைக் கேட்ட ஆதிரா செம எனக் கத்தினாள் , 


அதிரா அதைக் கூறியவுடன் சுரேஷ் எதுக்கு இப்படி கத்துறீங்க எனக் கேட்கக் கோஸ்ட் டீம் எங்க மாமா டீம் தான் , அதுல எங்க அண்ணன் தான் சீஃப் எனக் கூறினால் , 


அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்பொழுது அங்கே இருக்கும் பெரிய திரையில் வர்மா அழைப்பு வர அதைக் கதிர் atten செய்தான் , அதில் கதிர் நான் விக்ரமாதித்தியன் தாத்தா வைப்பார்க்கச் செல்லப் போறேன் எனக் கூறினான் , கதிர் நாங்க சில plan மாத்தி இருக்கோம் ராஜா மாமா கோஸ்ட் டீம் நமக்குச் சப்போர்ட் ஆக அனுப்பி இருக்காங்க எனக் கூறினான்  


அதற்க்கு வர்மா நான் தான் கோஸ்ட் டீம் இங்க வர வச்சேன் அப்பா கிட்ட சொல்லி அவங்க சொன்ன சிலவற்றை நாம செய்ய வில்லை இன்னும் 4 வருஷம், இருக்கு ஆனா நம்ம இப்போவே ஆரமிக்க வேண்டியதா இருக்கு எனக்குத் தெரிஞ்சு நமக்கு இது மட்டும் தான் இருக்கற ஒரே வேலை இதை நாம முடிச்ச அப்பறம் நமக்கு 4 வருஷம் கண்டிப்பா பயிற்சி இருக்கும் எனக் கூறினான் , கதிர் கீதா மொபைல் நமக்கு ரொம்ப முக்கியம் எனக் கூறினான் . 


அதற்க்கு எல்லோரும் நீ சீக்கிரம் வா வர்மா நாம ஒண்ணா பயணம் செய்ய காத்து கொண்டு இருக்கிறோம் என எல்லோரும் கூறினார்கள் . 


வர்மா நாம எல்லோரும் ஒரு குடும்பம் எனக் கூறினான் ரம்யா சீக்கிரம் வந்துருவேன் சரியா கவலை படாத எஎனக் கூறினான், ரம்யா அதற்க்கு சாரி வர்மா வா உனக்காக நான் காத்து கொண்டு இருப்பேன் எனக் கூறினாள் , 


ஆதிரா சரி எல்லோரும் முக்கியமா ஒரு விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்கணும் யார் கூப்பிட்டாலும் நீங்க இங்க இருந்து யாருக்கும் பேசக் கூடாது அதுனால சுரேஷ் சதீஷ் உங்களுக்குத் தான் இது முக்கியமா சரியா இங்க யாரும் இனிமே சந்திக்க வேண்டாம் ஜூலி  நீ என்னோட வா என ஆதிரா கூப்பிட்டு சென்றால் , ஜூலி  டாடா சொல்லிட்டு சென்றான் , கதிர் சுரேஷ் சதீஷ் ரெண்டு பேருக்கும் இன்னைக்கு வீட்டுக்குக் கம்பியூட்டர் வரும் அது போக உங்களுக்கு நம்ம கம்பெனி ல இருந்து வேலைக்கு லெட்டர் வரும் எனக் கூறினான் 


இப்போவே எதற்க்கு எனக் கேட்க அது எல்லாம் காரணமா தான் நாம எல்லோரும் இனிமேல் ஒண்ணா சந்திக்க வேண்டாமெனக் கூறினான் , 
ரம்யா நீ அந்த ஹாஸ்டல் லத்தங்க வேண்டாம் உன்னோட மாமா நீ இருக்க காலேஜ் பக்கம் ஒரு வில்லா இருக்கு சரியா அங்க  இருங்க சரியா அங்க தான் கோஸ்ட் சேர்ந்த பெண்கள் இருக்காங்க எல்லோரும் சுத்தி இருக்கிற சில இடத்தில வேலைக்குச் சேர்ந்து இருபாங்க உனக்கு எதும் பிரச்சனை இல்லையேயெனக் கேட்டான் , 


ரம்யா அதற்க்கு எனக்கு அது எல்லாம் பிரச்சனை இல்லை , ரம்யா உனக்குத் திருநெல்வேலி ல ஒரு ஸ்கூல் ல டீச்சர் வேலைக்கு request வரும் நீ அதைச் சரி சொல்லிடு , எனக் கூறினான் . சதீஷ் கதிர் நீ என்ன பண்ண போற எனக் கேட்க அதற்க்கு 


கதிர் நானா எனக் கேட்டுக் கொஞ்ச வில்லதனமாகச் சிரித்தான் , 
அவன் சிரிப்பாதை பார்த்த ஜாக் உடனே உள்ளே வந்து கலாய்த்து விட்டு அமைதியாக இருந்தது , 
அது ஒண்ணும் இல்லை டா நான் இங்க சர்வர் ரூம் செட் பண்ண போறேன் டா எனக்கு மத்த எல்லாத்தையும் கண்டு பிடிக்கணும் அதுனால உங்க காலேஜ் பக்கம் ஒரு கடை வாடகைக்கு எடுத்து இருக்கேன் டா எனக் கூறினான் . 
இவை எல்லாமே வர்மா மாட்டிய நிமிடத்திலிருந்து நடக்க தொடங்கியது எல்லாமே கதிர் வர்மா திட்டம் தான் அவர்கள் நகர்த்தும் காய் சரியாக நகர்கிறது என உறுதி படுத்தி கொண்டார்கள் ,


ரம்யா அப்போ நானும் சுரேஷ் அங்கே பகுதி நேர வேலை செய்ய வரலாமா எனக் கேட்க நானே கேட்கணும் என நினைத்தேன் உங்க மூணு பேருக்கும் அதுல வேலை செய்றது எதுனா பிரச்சனை இருக்கா எனக் கேட்க அதற்க்கு ரம்யா சுரேஷ் இல்லையெனக் கூறினார்கள் . சதீஷ் மட்டும் யோசித்து கொண்டு இருந்தான் . 


சதீஷ் முகம் கண்ட கதிர் என்ன யோசிக்கிற எனக் கேட்க இல்ல கதிர் இங்க நடக்கிறது எல்லாமே சீக்கிரம் நடக்கிற மாதிரி இருக்கு எனக்கு இன்னும் கனவுபோலத் தான் இருக்கு ஆனா ஒரு விஷயம் வர்மா எனக்கு நல்ல நண்பன் மட்டும் இல்லை எனக்குப் பல நேரம் எத்தனை பிரச்சனை வந்தாலும் சமாளிக்க கூட இருந்த ஒருத்தன் என்னோட ஆசை நான் ஒரு மனுசனா இருக்கணும் ஆனா நாட்டுக்காக நல்லது செய்யணும் ஆனா எனக்குக் கண்ணு சரி இல்லாத காரணம் என்னால போலீஸ் ஆர்மி எதுலயும் சேர முடிய வில்லை ஆனா இந்த நிமிஷம் நானும் ஒரு போராளியென நினைக்கும்போது எனக்கு அவளோ சந்தோஷமா இருக்கு . எனக்குப் பல சந்தேகம் இருக்கு நாம வர நாட்கள் அதைப் பேசுவோம் எனக் கூறினான் . 


கதிர் சரி டா இப்போ நீ என்ன செய்யப் போற எனக் கேட்க நான் சில வேலை விட்டு வச்சு இருக்கேன் அதைத் தான் பார்க்கப் போறேன் , உங்களுக்குப் பல துணை இருக்க வாய்ப்பு இருக்கு ஆனா டெலிவரி பாய் துணை வேணும் அதைத் தான் நான் பார்க்கப் போறேன் எனக் கூறினான் . 


கதிர் புரிந்து கொண்டான் எதற்க்கு இவன் இதைச் செய்யப் போகிறானெனச் சரி சதீஷ் ஆனா உனக்கு நாங்க கொடுக்குற வேலையை டெலிவரி பாய் மாதிரி செஞ்சா மட்டும் போதும் எனக் கதிர் கூறினான் 


சதீஷ் சரியெனக் கூறினான் ரம்யா சுரேஷ் இருவரும் சரியெனக் கூறினார்கள் 


அவர்கள் பேசி முடிக்கும் பொழுதில் அந்த வீட்டின் வாசலில் ஒரு உருவம் வந்து நிற்க அதைக் கண்டு எல்லோரும் உறைந்து போய் நின்றார்கள் முக மூடி அணிந்து கருப்பு உடையில் வந்த அந்த உருவம் கதிர் அருகில் வந்து அவனைக் கட்டி பிடித்து டேய் மச்சானெனக் கூற கதிர் மாமேயெனக் கூறினான் கோஸ்ட் டீம் லீடர் தான் வந்து இருந்தான் எல்லோரையும் பார்த்து விட்டு ரம்யா வைப்பார்த்து அண்ணி வணக்கம் எனக் கூறினான் சுரேஷ் சதீஷ் பார்த்து ஹாய் நண்பா எனக் கூறினான். 


எல்லோரும் ரம்யா வை அண்ணியெனக் கூற அவளுக்கு மனதில் ஏதோ ஒரு புரியாத உணர்வு வர அவள் முகம் சந்தோஷத்தில் சிவந்தது . 


ஆதிரா எங்க எனக் கேட்க அதற்க்கு கதிர் அந்தப் பிசாசு இப்போ தான் போச்சு கூடவே குட்டி பிசாசு ஜூலி யும் போய்ட்டு எனக் கூறினான் ஜூலியை குட்டி பிசாசு எனக் கூறியவுடன் ஜாக் சிரித்து கொண்டு இருந்தான் , 


சாரி எல்லோருக்கும் நான் தான் ஆதிரா அண்ணன் ஆதவன் எனக் கூறினான் , ஆதவன் அண்ணேயெனக் கூறி கொண்டே ஜாக் கையில் காபி யுடன் வந்தான் அதைக் கண்ட வுடன் ஜாக் உன்னோட பாசம் வேற டா எனக் கூறி அதன் மண்டையில் கை வைத்துத் தடவினான் .. 


சரி எல்லோரும் கிளம்புங்க நான் சிவா ஜாக் மட்டும் இங்க இருக்கோம் சரியா கதிர் இன்னைக்கு நைட் நீ கிளம்பு எனக் கூறினான் ஆதவன் , கதிர் சரி மச்சானெனக் கூறி எல்லோரும் கிளம்பி விட்டனர்.. 


அடுத்து என்ன நடக்கும் . 




© அருள்மொழி வேந்தன்