...

1 views

உண்மை முகம் தெரிய வருமா
அத்தியாயம் 3
சதீஷ் என்ன செய்வான் இவை அணைதகையும் கேட்டு விட்டு என்ன செய்ய என யோசித்து கொண்டு செல்ல அடுத்து என்ன நடக்கும எனத் தெரியாத எல்லோரும் வர்மா தங்கி இருக்கும் இடம் தேடி செல்ல முயற்சி செய்தனர் வர்மா குடும்பம்பற்றி எதும் தெரிய வந்தால் அதைப் பற்றி அவர்களிடம் கூற முயலலாமென முடிவு செய்து வர்மா இருக்கும் இடம் நோக்கிச் சென்றனர் அங்குச் சதீஷ் சுரேஷ் ரம்யா ணூவரும் சென்று அவன் இருக்கும் வீட்டைக் கண்டு பிடிக்க அந்தத் தெருவில் இருக்கும் யாரிடமாவது கேட்டக்கலாமென நினைதானர் அப்போது ரம்யா மற்ற இருவரையும் பார்த்து உங்கள் ரெண்டு பேருக்கும் அவன் வீடு கூடத் தெரியாதா எனக் கேட்க அதற்க்கு சதீஷ் இல்ல ரம்யா இதுவரை வர்மா கிட்ட கேட்கும் பொது எல்லாம் எதும் சொல்லமாட்டான் அவன் நிறைய விஷயம் சொல்லமாட்டான் நாங்க அவனோட மத்த எல்லாம் கேட்டுத் தெறிஞ்சுப்போம் ஆனா அவன் குடும்பம் பத்தி கேட்டா அதைச் சொல்லமாட்டான் அது பத்தி கேட்டா அவன் ரொம்ப கோவம் படுவான் அது போக அவனுக்கு யாரும் இல்ல என்று தான் சொல்லுவான் ஒரு நாள் போன வாரம் அவனை இந்த ஏரியா லத்தான் பாத்தேன் ஆபோ அங்க ஒருத்தர் கிட்ட கேட்கும் பொது அவர் தான் சொன்னாரு அந்தப் பையன் இந்த ஏரியா தான் இதுவரை யார் கிதடையும் அவன் பேசினது இல்லையென அவரு சொன்னாரு அப்போ பின்னாடி இருந்து வர்மா வந்து என்ன டா இங்க எனக் கேட்டுட்டு என்ன கூட்டிட்டு போய் டான் சாரி இந்த ஏரியா தானே அப்பறம் பாத்துக்கலாம் சொல்லிட்டு நானும் வந்துட்டேன் அதுக்கு அப்றம் நானும் மறந்துட்டேன் எனக் கூறினான்




இதைக் கூறி கொண்டு இருக்கும் பொது அன்று சந்தித்த அநாத நபரை மீண்டும் பார்த்த சதீஷ் அவரைக் கூப்பிட்டு அண்ணே வர்மா வீடு எங்க இருக்கு நு கேட்க அவர் தெருவின் கடைசியில் இருக்கும ஒரு பழைய வீட்டைக் காமிக்க அவரிடம் நன்றி கூறி விட்டு மூவரும் சென்றனர் அந்த வீட்டைப் பார்க்க ஏதோ பழைய காலத்து கட்டை குத்து வீடுபோல இருக்க அதைக் கண்டு ரம்யா நினைத்தால் இங்கே தான் வர்மா இருக்கானா என முகம் வேறு விதமாக மாற அங்கே உள்ளே செல்ல நினைத்துக் கதவின் அருகில் செல்ல அங்கே அந்த வீட்டின் வாசலில் ஒரு பெட்டி இருந்தது அதை என்ன என்று பார்க்க அதைச் சுரேஷ் எடுத்துப் பாத்தான் அதில் அந்த வீட்டின் சாவி இருக்க அதை எடுத்து அந்த வீட்டைத் திறக்க முடிவு செய்தான் ஆனால் சதீஷ் அதைத் தடுத்து இல்லை வேணாம் டா அவன் வீட்டை அவன் இல்லாம திறக்கக் கூடாது எனக் கூற ரம்யா ஆமா சுரேஷ் அவன் அனுமதி இல்லாம திறக்கக் கூடாது எனக் கூறினால் சுரேஷ் அப்போ எப்படி அவனைப் பத்தி தெரிஞ்சுக்க அவனைக் காப்பாத்த நம்ம அவன் வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லணும் ஆனாலும் ரம்யா சதீஷ் அரைமனது உடன் அதைத் திறக்கச் சம்மதித்தனர் அப்போது அந்தச் சாவி துவாராதில் சாவி போட்ட வுடன் ஒரு கைபிடிடி கதவின் உள்ளே இருந்து வந்தது அதில் கைரேகை மற்றும் பாஸ்வேர்ட் இடும் ஒரு திரை தோன்ற மூணு பெரும் அதிர்ந்தனர் அதில் இருக்கும் திரையைப் பார்த்து மூவரும் திகைத்து நிற்க அதிலிருந்து ஒரு குரல் கேட்கப் பாஸ் நீங்கத் தானா என ஒரு கம்பியூட்டர் குரல் கேட்டது அதற்க்கு சதீஷ் பயந்து கொண்டு இல்லை நான் வர்மா நண்பன் எனக் கூற அந்தக் குரல் மீண்டும் உங்கள் பெயர் சதீஷ் என்றால் உங்கள் வலது கையின் பெரு விரலை இங்கே வைக்கவும் என இல்லை என்றால் வெளியில் செல்லவும் எனக் கூறியது அப்போது அவன் என்ன செய்ய என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க அதில் நேரம் 10 செக்கண்ட என ஓடிக் கொண்டு இருந்ததை ரம்யா பார்த்துக் குழப்பதில் இருந்தால் அந்த நேரம முடிந்த பின் அந்தச் சாவி துவாரம் அந்தச் சாவியை வெளியே தள்ளி விட்டு அங்கு இருந்த கைபிடி மற்றும் தோடு திரை மறைந்து விட்டது. ஒன்றும் புரியாமல் மூவரும் நிற்க ஒரு குரல் மீடும் கேட்டது திரும்பிப் பார்க்கப் பக்கதில் இருந்த புதருக்குள் இருந்து ஒரு குட்டி ரோபோட் வெளியே வந்தது இந்த மூவரையும் பார்த்து நீங்கள் யாரெனக் கேட்டு மூவரையும் தான் scanner மூலமாகச் சோதனை செய்தது முதலில் சுரேஷ் நடுவில் சதீஷ் அடுத்ததாக ரம்யா நின்று கொண்டு இருக்க வாசல் கதவு மூடியது அதைக் கண்டு மூவரும் திகைத்துப் போய் நிற்க. அந்த ரோபோட் நான் தான் ஜாக் v .2.0 வர்மா சார் பி ஏ எனக் கூறி கொண்டு நின்றது ...




யார் இந்த வர்மா மூவரும் அறிவார்களா வர்மாவின் திட்டதில் மூவரும் இணைவார்களா வர்மா என்ன செய்யக் காத்து கொண்டு இருக்கிறான். இதற்க்கு முன் வந்த பகுதில் கூறியது எல்லாம் உண்மையாகத் தான் இருக்குமா இல்லை அடுத்த பகுதியில் காண்போம் ...




வர்மா விக்கிப் பிடியில் ஒரு குடோன் யில் அடைத்து வைக்கப் பட்டு இருந்தான் விக்கி அவன் அப்பா இருவரும் வந்து அவனை என்ன செய்யலாமென யோசித்து கொண்டு இருக்க இதுவரை வர்மா முகத்தைக் கூடப் பார்க்காத விக்கியின் அப்பா கிஷோர் வர்மா இந்தப் பெயர் நம்ம ஊரு காரர் பெயர் மாதிரி இல்லையே இவன் உண்மையிலயே யாரு டா வேற எதும் ஊருல இருந்து இங்க வந்து பொழைக்க வந்தானா. வர்மா முகத்தைப் பார்க்க வர்மா கட்டி வைக்கப் பட்டு இருந்த அறைக்குள் சென்று அவன் அமர்ந்து இருந்த நாற்காலியைக் கண்டான் வர்மா முகத்தைப் பார்க்கச் சற்று திகைத்துப் போனான் அவன் முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்க சற்று யோசித்த கிஷோர் அவன்பற்றிய அனைத்து தகவல் அவனுக்கு வேண்டும் எனக் கூறி அவனின் உடன் இருக்கும் அடியாளிடம் கூறினான் அது மட்டுமில்லாமல் விக்கி இங்கே இருக்க வேண்டாமெனக் கூறி அவனை வீட்டுக்குச் செல்லக் கட்டளை யிட்டான் ஆனால் விக்கி இல்லை அவன் சாவ பார்க்காமல் நான் போகமாட்டேன் எனப் பிடிவாதகமா கூற மண்டையில் தட்டி வீட்டுக்குப் போகக் கூறினான் கிஷோர் இப்படி பதட்டமாக இருக்க விக்கிக் கிஷோர் இடம் என்ன என்று கேட்க விக்கி நீ உன்னோட காலேஜ் போய் அங்க இருக்கிற டைரக்டர் இங்க வரச் சொல்லு முக்கியமா அந்தப் பைய கிட்ட வர்மா பத்தின முழு விவரம் வேணும் நு சொல்லு எனக் கூற அதைச் செய்தான். விக்கி




இங்கே கிஷோர் வர்மா பத்தி அறிய முயற்சி செய்து கொண்டு இருக்க அவனுக்கு ஏனோ வர்மா வைப்பார்க்கப் புலனாய்வு துறை சேர்ந்த ஒருவன் முகம் நியாபாகம் வரச் சற்று திகைத்துப் போய் யோசித்து கொண்டு இருந்தான்,




ராஜா ஆதித்தன் முகம் அவன் கண் முன் வந்து செல்லப் பல குழப்பம் அவன் மனதில் ஒரு வழியாக மனதை சமாளித்து இது ராஜா ஆதித்தன் குடும்பம் சேர்ந்த ஒருவனாக இருக்க முடியாது அவளோ பெரிய குடும்பம் எதற்க்கு இவனை இப்படி விடப் போகிறது என நினைத்துக் கொண்டு இருந்தான், இங்கே இவை அனைத்தும நடந்து கொண்டு இருக்க விக்ரம் ஆதித்தியன் இருக்கும் இடத்தில் வர்மா பற்றிய தகவல் செல்ல இன்னும் 4 வருடம் இருக்கிறது அதுவரை இவனுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தம் இல்லையெனக் கூறிவிட்டு சென்றார், ஆனாலும் ராஜா ஆதித்தன் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது வர்மா வின் திறமைபற்றி அவருக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் சிறு பயம் இருக்க வர்மா குடும்பம் அமைதியாக இருக்க நினைத்தது.




கொஞ்ச நேரம் செல்ல விக்கி அந்தக் கல்லூரி டைரக்டர் யைக்கையோடு கூடி வந்து விட்டுச் சென்றான் அவன் கையில் இருக்கும் அனைத்து ஆவணம் வாங்கி அதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், மேலும் அதில் வர்மா சிறு வயத்திலிருந்து நெல்லை சமாதானபுரம் அருகில் இருக்கும் சர்ச் பாதர் திரு லூயஸ் தான் கார்டியன் எனவும் பள்ளியில் படிக்க அவர் தான் அனைத்து உதவியும் செய்தார் எனவும் தெரிய வரப் பாதர் லூயஸ் க்கு கால் செய்து கேட்க நினைதான் ஆனால் அதற்க்கு அடுத்து இருந்த ஒரு கடித்ததில் வர்மா ஆசீராமதில் வளர்ந்ததாக ஒரு சான்றிதல் இருக்க அதை விட்டு விட்டு அடுத்த சான்றிதல் பார்க்க நெல்லை - தென்காசி செல்லும் வழியில் இருக்கும் ஒரு பள்ளியில் தனது மேல்நிலை பள்ளியைப் படித்து முடித்து அடுத்து இங்கே வந்து அரசங்கம கொடுக்கும் உதவியில் படித்து வருவது தெரிய வர அப்பொழுது தான் சற்று நிம்மதி அடைந்தான் இதற்க்கு மேல் அவனின் சந்தேகம் எல்லாம் தீர்ந்து போக இனிமேல் தான் மகன் விக்கியை அடித்த காரணத்துக்கு அவனைப் பழி வாங்க வேண்டும் என நினைதான் அந்த டைரக்டர் யிடம் இனிமேல் வர்மா உங்க கல்லூரிக்கு வரமாட்டான் அதனால் வர்மா பெயரை நீக்கி விடுங்கள் என விக்கி அவரிடம் கூற அவர் சற்று திகைத்துப் போனார் ஆனாலும் கிஷோர் எதிர்த்துத் தன்னால் எதும் பண்ண முடியாது எனத் தெரிந்த பின் அவர் மெதுவாக நடந்து சென்றார். இங்க இத்தனை சம்பவம் நடந்து கொண்டு இருக்க.

அடுத்து என்ன நடக்கும் 

( ஒரு நாள் யாரோ ஒருத்தார் எழுதி வைத்த கவிதைகள் யாரோ ஒருவரால் புத்தகம் அச்சடிக்க பட்டு எங்கோ இருக்கும் யார் யாருக்கோ அது ஏதோ ஒரு வகையில் பயன் படுவது போல தான் இங்கே நாம் எல்லோரும்  எதற்காக நாம் வாழ்வில் இவை நடக்கிறது என்று தெரியாமல் சில நிகழ்ச்சி நடந்து செல்கிறது ஏதோ ஒரு நாள் அதன் பிரதிபலிப்பு தெரியும் .. 
© அருள்மொழி வேந்தன்