...

5 views

The Seventh Day of Love
எல்லோரோட வாழ்க்கையையும் ஏதாவது ஒரு இடத்துல காதல்னு ஒன்னு இருக்க தான் செய்த அந்த காதல் எப்ப யாருக்கு புரியும் என்பதை தான் அந்த காதல் சேருமா சேராதா என இருக்கு!
எல்லா காதலுமே சொல்லி வச்சது போல சேர்ந்துட்டா அந்தக் காதலுக்கு என்ன மரியாதை அதே மாதிரி எல்லா காதலும் பிரிஞ்சிட்டா அப்பவும் மரியாதை இல்லை
புரியாத புதிரா இருக்கு இந்த காதல் புரிஞ்சுக்கணும் நினைக்கும் போது புரியாம போறதோ புரியவே வேணாம் நினைக்கிற எல்லோருக்கும் புரிகிறதும் எழுதப்படாத விதி!
இந்தக் காதலும் விதி மாதிரி தான் நினைக்கும் போதெல்லாம் கிடைக்காது ஒரு கட்டத்துல காதலே வெறுத்துப் போய் இருக்கும் போது அந்த நிமிஷம் கிடைக்கிற காதல் அந்தக் காதலை எப்படி வர்ணிக்க என எனக்கு தெரியல இத்தன வருஷமா காதல் வெறும் எழுத்த நினைச்சுட்டு இருந்தேன் எத்தனையோ கிறுக்கல்கள் இங்க கடந்து போயிடுச்சு ஆனா கடந்து போகாத ஒரே வார்த்தை காதல் மட்டும் தான் அந்த காதலை புரிஞ்சுகிட்டா எனக்கு ஒரு யுகம் தேவைப்படுது!
என்னோட புரிதல் ஒரு காதல் கதையா மாறுது அந்தக் காதல் கதை!
The Seventh Day of Love

எப்பவும் மெதுவா கண் முழிச்சு காலை சூரியனை கூட பாக்காத நான் அன்னைக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக தொலைதூரப் பயணம் போகணும்னு சொல்லி மூணு மணிக்கு எழுந்திருச்சு என்னோட ஊர் திருநெல்வேலி பைக் எடுத்துட்டீங்க ஏதோ போகலாம்னு நினைக்கும் போது மனசு சொல்லுச்சு நம்ம ஏன் கன்னியாகுமரி போக கூடாதுன்னு என்னோட கனவா இருக்கட்டும் என்னோட எழுத்துகளாக இருக்கட்டும் நான் வர்ணிக்கிற இடமா இருக்கட்டும் அதுல ஏதோ ஒரு பகுதியில கன்னியாகுமரி எப்பவுமே இருக்க தான் செய்யுது அந்த கடல் அலையும் அந்த கற்களும் அந்தப் பாறைகள் கடலுக்கு நடுவுல இருக்கும் பொழுது அதோட கடைசி பகுதியில் நின்னுகிட்டு காலையில இந்த சூரியனே பாக்குறது ஒரு வரம் தான்ல அந்த வரம் எப்பவாவது தான் கிடைக்கும் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்துவிடுவேன்
என் வாழ்க்கையில் இரண்டு தடவை இந்த அதிகாலை சூரியன ரசிச்சிட்டு இருக்கேன் இது மூணாவது தடவை அன்னைக்கு என்னவோ தெரியல என் வாழ்க்கையில் எல்லாமே...