...

7 views

சாக்கடையில் தங்கம் கிடைக்கும் இந்திய நகரம்
சாக்கடையில் தங்கம் கிடைக்கும் இந்திய நகரம் - எங்கிருக்கிறது தெரியுமா?

கட்டுரை தகவல்
எழுதியவர்,
ரம்ஷா ஸுபைரி
பதவி,
பிபிசிக்காக
26 நவம்பர் 2022
ஃபிரோசாபாத்

பட மூலாதாரம்,XAVIER GALIANA/GETTY IMAGES

இந்தியாவின் கண்ணாடி நகரமான ஃபிரோசாபாத், பாரம்பரியமான கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்றதாகும். ஆனால், இந்த நகரம் மறைந்திருக்கும் மற்றும் கண்டறிவதற்கு கடினமான இன்னொரு பொக்கிஷத்துக்கும் ஆதாரமாக திகழ்கிறது.

"சேலையை எரித்து, அதில் இருந்து சுத்தமான மெல்லிய துண்டு போன்ற வெள்ளியை எடுத்து அவர் தந்தார்," என 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய வீடு இருந்த ஃபிரோசாபாத் நகரில் நடந்த நிகழ்வின் தருணத்தை என் தாய் என்னிடம் கூறினார்.

அவருடைய கதையில் கூறப்பட்ட மனிதர் மேஜிக் செய்பவர் அல்ல. அவர் உலோகங்களை பிரித்தெடுக்கும் நபர். இதேபோல பல கைவினைக்கலைஞர்கள் என் தாயின் பிறந்த ஊரில் உள்ளனர். என் தாய் குறிப்பிட்ட அந்த நபர், வீடு வீடாகச் சென்று பழைய சேலைகளை சேகரித்து அவற்றில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பணியை செய்தார்.

1990ஆம் ஆண்டு வரை சேலைகள் சுத்தமான வெள்ளி, தங்கம் ஆகியவற்றைக் கொண்ட நூல்களால் நெய்யப்பட்டன. என் அம்மாவின் அலமாரியில் பொக்கிஷம் போன்ற அவரது பளபளக்கும் ஆடைகளை தேடியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், துணிகளை விடவும் மிகவும் விலைமதிப்புள்ள ஒன்று அதில் இருப்பதை உலோகங்களை பிரித்தெடுப்போர் பார்ப்பதாக என் தாயார் கூறியிருந்தார். அவர்கள் இந்த நகரத்திற்கான குறிப்பிட்ட ஒரு வகையான குப்பையை அந்த சேலைகளில் தேடிக்கொண்டிருந்தனர்.

தங்க சுரங்கத்துக்கு இணையான நகரம்
ஆகவே, வெளித்தோற்றத்துக்கு மாய உருமாற்றம் போலத் தெரியும் பிரித்தெடுத்தல் குறித்து மேலும் சிலவற்றை அறியலாம் என்பதற்காக நான் ஃபிரோசாபாத் நகருக்குச் சென்றேன். அந்நகரம், விலை மதிப்பற்ற உலோகங்களை விடவும் கண்ணாடி வளையல்களுக்காக அதிகம் அறியப்படுகிறது. அந்நகரின் அருகில் இருக்கும் தாஜ்மஹால் (மேற்கே 45 கி.மீ தொலைவில்) இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை விஞ்சி இருக்கிறது.

ஆனால், நான் கண்டுபிடித்த வகையில், இந்த பகுதியில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம் சாக்கடைகள் வழியே வழிந்தோடியதன் காரணமாக சில உழைக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு, இந்த நகரம் ஒரு தங்க சுரங்கத்துக்கு இணையாகவே இருந்தது.

டெல்லி சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக் என்பவர் கி.பி.1354ஆம் ஆண்டு ஃபிரோசாபாத் பகுதியை அரண்மனை நகராக நிர்மாணித்தார். நீதிமன்ற வரலாற்று ஆசிரியர் ஷம்ஸ்-இ-சிராஜின் என்பவரின் புத்தகங்கள் வாயிலாக, ஷாஜஹான்பாத் நகரை (இப்போதைய பழைய டெல்லி, தாஜ்மஹாலைக் கட்டிய அதே ஆட்சியாளரால் வடிவமைக்கப்பட்டது) போல இரண்டு மடங்காக இருந்தது ஃபிரோசாபாத்.

'டெல்லியின் மறந்து போன நகரங்கள்' எனும் புத்தகத்தின் எழுத்தாளரும் வரலாற்று அறிஞருமான ராணா சஃப்வியின் கூற்றுப்படி, பின்னர் இது முகலாய கால கோட்டைகளுக்கு முன்மாதிரியாக பயன்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கான திவான்-இ-ஆம் (பார்வையாளர் கூடம்) மற்றும் பிரபுக்களுக்கான திவான்-இ-காஸ் (தனியார் பார்வையாளர்கள் கூடம்) என்ற முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது."

© ✒️vinaykrish g 👑