வாய்மையும் பொய்மையிடத்து(நிமிடக் கதை)
அ.கு.க கட்சி தலைவர் வாழ்க
தொண்டர் படை வாழ்க என்னும் கோஷம் பத்தடி எட்ட பறந்தது கட்சிக் கொடி.ஒரு வழியாக அல்வா,லட்டு கொடுத்து பரபரப்பு ஓய்ந்தது.
தலைவர் தனது காரியதரிசியை கூப்பிட்டு இரகசியத்தை வரச்சொல்லுயா என்றார்.
இரகசியம் உள்ளே நுழைந்ததும் தலைவர் தாரைவார்ப்பன் வாழ்க என்றதும்.போதும்யா எனக்கேவா என்றார் தலைவர்.
தலைவர்: நாட்டு நடப்பு எப்படியா இருக்கு
இரகசியம்: எல்லோரும் தெளிவா இருக்காங்கய்யா.
தலைவர்: இருக்கக்கூடாதே.பொழப்பு போய்டும்யா.சனங்களை சிந்திக்க உடக்கூடாது.போராட்டம் ஆரம்பிச்சுடுவாங்கய்யா
இரகசியம்: சொல்ல மறந்துட்டேன்.இப்பகூட காவல்துறை மூலமா போராட்டம் ஒன்னு ஓடிக்கிட்டுருக்கு.இன்னொன்னு கேஸ்ல நடந்துகிட்டிருக்கு.
தலைவர்: அப்படிபோடு அரிவாள.யோவ் எதிர்கட்சிகாரன் போய் கேட்கறத்துக்குள்ள போராட்டக்காரங்களோட நம்ம ஆளுங்கள பேசவைய்யா.இந்த காவல்துறை வேற சமாதானம் செஞ்சி போராட்டத்தை கலைச்சிடுவானுங்க.
இரகசியம்: ஏற்கனவே எதிர்கட்சி அங்க ஆஜராயிட்டானுங்க.
விலைவாசிய உயர்வபத்தி மேடை போட்டு பிரச்சாரம் பண்ணப் போறாங்களாம்.சொல்லிப்புட்டேன்
தலைவர்: ஆமா யார் எதிர்கட்சியா வர்றாங்களோ அவங்களுக்கு ஆளுங்கட்சிக்காரங்க முப்பது பர்சன்ட் குடுக்கணும்னு ஸ்லீப்பிங் பார்ட்னர் ஆக்கிவுட்டோம்ல.
இரகசியம்:அட,நீங்க வேற ஐயா,அதுல நம்ம சைலண்ட் பார்ட்னருங்க பதினஞ்ச ஆட்டைய போட்டாங்க என விரக்தியாக பதிலளித்தான்
தலைவர்: பரவாயில்ல விடு.ஆமா ரொம்ப வருஷமா ஆயுள் சந்தா உறுப்பினரா நம்ம ஆளுங்க ஐநூறு பேர எதிர்கட்சியில சேர்த்தோமே.அவனுங்க தொடர்புல இருக்கானுங்களா.இரகசிய கூட்டத்தட்ட கூட்டுயா.
இரகசியம்:: அதுல சிலபேரு அந்தகட்சிக்கே விசுவாசி ஆகிட்டானுங்க என்னத்த சொல்ல.மத்தவங்கள தேடிப்புடிச்சி கூட்டியாரணும் என அலுத்துக்கொண்டான்.
தலைவர்: ஆமா முக்யமா கல்வியும் சுகாதாரமும் எப்படி போயிட்டிருக்கு.
இரகசியம்: நல்லா போயிட்டிருக்கு.ஆனா போதையும் போதைப்பொருளும் தலைகாட்டுதுய்யா.
தலைவர்: அப்ப இலாகாவ மாத்திப்புட வேண்டியதான்.அதுபோகட்டும் நம்ம கட்சி சார்பா போதைப்பொருள் ஒழிப்புப் பேரணி நடத்தினாதான் நம்புவாங்க.இத நம்பிதான்யா இரண்டு கட்சியிலேயும் உற்பத்தி ஆலய ஓட்டிக்கிட்டிருக்கோம்.
சரி.வேணும்னா ஓடாத கடையையும் லைசன்சு இல்லாம ஓட்ற கடையையும் மூடியாச்சும் கட்சிக்கு நல்லபேரு வாங்கணும்யா.அஞ்சு வருஷம் இப்படியே கடைய மூடாம ஓட்டிப்புட்டோம்ன்னா அடுத்த தேர்தலுக்கு இதை வச்சி ஏதாவது செய்ய தோதாகும்.ஏற்கனவே எல்லா மாநிலத்தையும் கையில வச்சிருக்கவங்க ஊழல் இல்லாம இருக்கணும்கிற பேரைச் சொல்லி
தனியாருக்கு வார்த்துவுட்டாச்சி.அப்புறம் இதுல கைய வச்சிடபோறானுங்க.
அது சரி நாட்டுல அமைதி திரும்பறத்துக்குள்ள சாதிச்சண்டைய ஆரம்பிச்சி விடுயா.
இரகசியம்: அது எப்படிண்ண முடியும்? கவிஞர்களும் எழுத்தாளர்களும் அததான் அப்பப்போ கண்டிச்சி எழுதிக்கிட்டிருக்காங்களே.நீங்க வேற
தலைவர்:அது இல்லய்யா.பொதுவா இருக்கிற நம்ம ஆளவிட்டு கதையோ கவிதையோ எதிர்த்து கேஸ் போட்டு அதுக்கு நம்ம குரல சாதகமாக்கி கட்சிக்கு முட்டுகொடுக்க வைப்போம். இலக்கியவாதிகள் சிலர்தான்யா நடுநிலைங்கிற பேர்ல கூச்சல் போடுவானுங்க.மத்தவங்களுக்கு நம்ம கட்சி இலக்கிய மன்றம் சார்பா சமுதாய கவிஞர்,காதல் கவிஞர்,கட்சிக்கொள்கை கவிஞர்னு விருதுகொடுத்து கொள்கைபரப்புக்கு இழுத்துக்குவோம்.அப்புறம் எல்லாத்தையும் தட்டிக்கேட்குறேன்னு ஒரு கூட்டம் இருக்கு பாரு,அவங்களுக்கு நவரசக் கவிஞர்னு பட்டத்தை கொடுத்து விட்டுருவோம்.லைக்கு போடுற பல பேருக்கு எழுதற கவிதையே புரிஞ்சிருக்காது.எழுதின கவிஞன் கேட்டா தடாலடியா நீங்க எழுதினா சரியாதான் இருக்கும்ணேன்னு சமாளிச்சி ஐசை வச்சிட்டுப் போயிடுவான்.
இரகசியம்:அப்படியும் வேலைக்கு ஆவுலேன்னா ஒன்னு செய்வோம்னே.இருக்கவே இருக்கு கோயில்.உண்டியல்ல பிச்சை எடுத்துத்தான் சாமியவே காப்பாத்த முடியுதுன்னு கிளப்பிவிடுவோம்.கோயில் அர்ச்சகரை திருவிழா நாள்ல ஸ்பான்சரை புடிக்கச்சொல்லி வசூல் பண்ணவைப்போம்.படியலன்னா பழியபோடுவோம்.
வசூலிச்சதுல பாதிய ஆட்டய போட்டுத்தான்னே ஐயருங்க ஆடாம கார்ல போயிட்டுவர்றாங்க.அதுக்கும்மேல வி.ஐ.பி தரிசனம்னு சொல்லி சுருட்டிருவோம்.நமக்கு வியாபாரம்தான்னே முக்கியம்.ஒருகாலத்துல படிப்புக்கும் பஞ்சத்துக்கும் படிப்பினையா இருந்ததை இன்னுமும் ஞாபகமா வச்சிக்கிட்டிருக்கப்போராங்க.
விடுங்கண்ணே.
தலைவர்:எலே இரகசியம் கோயில் உண்டியல் பிச்சயிலதான்லே அரசியலே ஓடிகிட்டிருக்கு.ஞாபகப்படுத்தாதேலே.வேற்று மதத்துகாரங்க நடத்துற கோயில் அமைதியா போயிட்டிருக்கு.அத பாரு முதல்ல.
அப்புறம் மக்களை நம்பிதான்யா மருத்துவக்கல்லூரில்லாம் தொறந்திருக்கோம்.கோட்டாவுல காசு பாக்கலாம்னாலும் இந்த தேர்வெல்லாம் வந்து தொந்தரவா இருக்குய்யா.இந்த கார்ப்பரேட்காரன் என்னன்னா நோய கொடுத்து மருந்தையும் கொடுக்குறான்யா.எப்படியோ நமக்கு வர்ற கமிஷன் வர்லேன்னு வையி போராட்டம்பண்ணி கம்பெனிய ஒன்னுமில்லாம செஞ்சிடுவோம்.
இரகசியம்:சரிண்ணே நம்மள நம்பி இருக்கிற மக்கள தூங்கவிடாம சிந்திக்கவிடாம முச்சூடும் நம்மள பத்தியும் நம்ம கட்சிய பத்தியும் செஞ்சாதான் வர்ற தேர்தல்ல நம்ம பலம் கூடும்கிறீங்க புரியுதுண்ணே.உங்ககிட்ட வளந்ததுக்கு இதுகூடவா தெரியாமயா இருப்பேன்.
தலைவர்: சரி.பெரிய தலைவர தலைநகர்ல சந்திச்சிட்டு வர்ரேன்.கொள்கைக் குறிக்கோளோட போயிருக்கேன்னு மீடியால்லாம் பேசணும்யா.அதுக்கு வழிபண்ணு.
இரகசியம்:சொந்த மீடியாவுலயாண்னே.ஏன்னா எதிராளிக்குக்கூட மீடியா இருக்கு.அதான் கேட்டேன்.
இடையில் தொலைபேசி அழைப்பு வந்ததும் உரையாடல் துண்டித்தது.
நிலவரம் கலவரம் ஆகாமல் நல்லறமாக இருந்தால் சரிதான்.
-------------------
*கட்சிகள் எதுவாயினும் நன்மை என்பது சொற்பமே.அதுவும் நம் வரிப்பணம் என்பதும் உண்மையே*
.
© MASILAMANI(Mass)(yamee)