...

3 views

இன்னும் இரு நாட்கள்
அதிகாலை நேரம் நட்டத்திரங்கள் இன்னும் மின்னிக் கொண்டிருக்க சூரியன் இன்னும் விழிக்கவில்லை....செவ்வானமும் சோம்பலாயிக்க.... கோடைக்கால வெம்மை கருணையின்றி இரவில் கூட தகித்து கொண்டிருந்தது... பணத்தில் மிதப்போருக்கும், பணக்கட்டுகளின் வாசனையில் வாழ்பவருக்கு ஏ.சி குளிரில் உறக்கம் இனிமையாய் இருக்க.... ஃபேன் காற்றிலும் இனிமையாய் உறக்கம் கொண்டிருந்தது நடுத்தர வர்க்கம்.... ஏசி காற்றோ ஃபேன் காற்றோ எதுவும் உறக்கத்தில் இனிமை தராமலும் இருந்தது ஒரு வர்க்கம்.....

சோனியா, 32 வயதான இல்லத்தரசி. வேலைக்கு செல்லும் பொறுப்பான கனவன்,  வீட்டில் தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனார் ,மாமியார் மேலும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் இரு குழந்தைகள். இது தான் அவளது குடும்பம். குடும்பத்தில் தனக்கான கடமைகளை செய்வது மட்டுமல்லாமல், கனவனுடன் நிநி சுமையையும் சுமந்து வருகிறாள் சோனியா. அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாள்.

காலையில் நான்கு மணி அடி வயிற்றில் சுளீர் என்ற வலியுடன் கண் விழித்தாள் சோனியா. கட்டிலிலிருந்து திடுக்கிட்டு எழுந்தவளுக்கு அன்றைய தேதி நினைவுக்கு வந்தது. இன்று மார்ச் 24 ஆம் தேதி. கடைசியாக தலைக்கு குளித்து 28 நாட்கள் ஆகி இருந்தது. சோனியாவின் மனதில் ஆற்றாமையுடன் ஒரு சோகம் படர்ந்தது. இன்னும் மூன்று நாட்களுக்கு நரகம் தான் என்ற கசப்பான உண்மை அவளது மூளைக்கு உரைக்கவே சோம்பலாக மெத்தையிலிருந்து எழுந்தாள். இன்னும் கண்களில் தூக்கம் மிச்சம் இருந்தது. நேற்றைய உடல் களைப்பு இன்னும் அவளது உடலை படுத்திக் கொண்டிருந்தது. காணாக் குறைக்கு மாதவிடாய் வேறு. கட்டிலிலிருந்து எழுந்தவள் தான் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள் செங்குருதி கற்றையாய் படிந்திருந்தது. ஒரு பெருமூச்சினை விட்டாள் சோனியா. இன்றைய வேலைகளோடு இன்னும் ஒரு வேலை. படுக்கை விரிப்புகளையும் துவைக்க வேண்டும். அனுதினமும் அவளது உடலில் ஏற்படும் அதீத களைப்பானது, அவளின் அடி வயிற்று வலியையும், அவளையும் அறியாமல் உடைகளில் ஏற்படும் ஈரத்தையும் கூட உணர முடியாத அளவிற்கு அவளை ஆழ்ந்த உறக்கதிற்கு அழைத்துச் சென்று விடும். அதின் விளைவு படுக்கையில் இரத்த துளிகளின் கறை. சலிப்பாக அதை பார்த்தவள் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கனவனின் பக்கம் திரும்பியது. அவனை தொந்தரவு செய்ய மனமின்றி அவனது நெற்றியில் முத்தமிட்டவள் , தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அன்று புதன் கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் கனவனை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என எல்லாம் வரிசைக் கட்டி வந்து நிற்க, அடி வயிற்றின் வலியையும், குருதி போக்கையும் ஓரங்கட்டியவள் வழக்கம் போல காலில் சக்கரம் கட்டிக் கொண்டு களத்திற்குள் இறங்கினாள் சோனியா....

முன் தின இரவில் சுத்தமாக துடைத்துப் போட்ட சமயலறைக்குள் நுழைந்தாள். வேகமாக ஒரு குக்கரில் அரிசியை போட்டவள் அதை அடுப்பில் வைத்தாள். மற்றொரு அடுப்பில் காலை டிபனுக்காக தோசைகளை சுட்டவள் அதை ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்தாள். கூடவே தக்காளி சட்னியையும் செய்தாள். அரிசி மாவு தோசைகளை...