...

2 views

வரமாகிய காதல்...2

இந்த காதல் ராட்சசி,
அவன் பெயரை மனதில் ஜெபித்து,
அந்த கடைக்குள் நுழைந்தாள்.
தீடிரென
அக்கடையின் உள்,
அவளவனின் ஸ்பரிச வாசனை
அவள் மனதை வருடுகிறது!
அந்த நிமிடம் அவள் கையில் இருந்த புத்தகம் தவறி கீழே விழுந்து,
அவள் சட்டென்று தலை குனிந்தால்,
அவளுக்கு முன் அவளின் புத்தகம் அவன் வசம்!
அவன் வாஞ்ஜையுடன் அதை திறக்க,
அதில்
அவளின் பெயர் பெரிதாய் அவளவனின் பெயர் சேர்த்து,
"... தி... தி"
என்று,
அவளின் பெயரை அவன் அறிந்தான்!
அவளின் பெயரை அவன் ஜெபித்தான்!
"ரதி"
என்று!
அவளின் பெயரில் மட்டுமல்ல!
அவள் அழகிலும் "ரதி" யே! அன்று அவளின் கண்கள் அலைமோதின, என்றும் காணும் அவளின் கண்ணாளன், இன்று காணவில்லையே என்று! அவள் மனம் பாரமாயிற்று! செய்வதறியாமல் சென்றால் அவளின் வீட்டை நோக்கி, இரவு முழுதும் உறக்கமின்றி தவித்தாள்;அவளவனை காணாததால்!
பொழுது புலர்ந்தது! இன்று அவனைக் கண்டு விடலாம் என்ற ஆர்வத்தில், ஆரவாரமின்றி அவளவனின் கண்களை இதயத்தில் சுமந்து, அவன் ஸ்பரிசத்தை மனதில் நுகர்ந்து சென்றாள்! பாவம்! இப்பேதை ! அவன் இன்றும் அங்கு இல்லை என்பதை அவள் மனம் ஏற்கவே இல்லை! மனம் முழுவதும் நிறைந்த அவனைக் கண்டு மூன்று நாட்கள் கடந்து போயின! அந்த மூன்று நாட்கள் அவள் தனிமையை தாள முடியாதவளாய் தவித்தாள்!
ஆம்! அவனைக் காணவில்லை!

அன்று, நான்காம் நாள், இன்றைய பொழுது தன் ஏக்கத்தை போக்குமா? என்று நினைத்து கண் விழித்தாள் அவள்! அவள் ஏறும் பேருந்து, அன்று அரவமின்றி இருக்க, அவளமரும் இடத்தில் அமைதியாய் அமர்ந்தாள், கண்களை மூடி அவளவனின் கண்களை மனதில் தரிசித்துக்கொண்டு! சில நிமிடங்களில், அரவமற்ற பேருந்து சலனமடைய, அவளும் தன்னிலை திரும்பியவளாய், தன் முகத்தை திருப்ப, அவளை இத்தனை நேரம் மனதில் ஆண்ட கண்கள், அவளின் கண்களை பிரகாசமாய் சந்தித்தன.. தன்னிலை உணர்ந்தவள், நாணத்தால் முகம் சிவந்தாள்! அவன் கூரிய பார்வை எனும் ஆயுதத்தால் அவளை தன்வசமாக்கினான்! மூன்று நாட்கள் அவள் சந்தித்த மனப்போர் இன்று முடிவுற்றது! ஆம்! இது அவள் மனதை நிறைத்த
"நான்காம் நாள் "அவள் "மெய் சிலிர்த்தாள்"முதல் வார்த்தை! பேருந்தில், இப்புறம் அவளும், அப்புறம் அவனும்,இருபுறமும் இதயங்கள் பரிமாற, திடீரென ! சப்தமிட்ட " டிக்கெட் டிக்கெட் "என்ற சத்தத்தில் இருவரும் தன்னிலை உணர, அவன் அவனவளை பார்த்துஉதடுகளை அசைத்தான்,
"இங்கே வா! " என்று,
அக்கணமே அவள் உறைந்தாள்! ஏனெனில்! அவன் அவளிடம் பேசிய "முதல் வார்த்தை " அது! அவன் வார்த்தையில் மட்டுமல்ல! அவனின் வாழ்க்கையிலும் அவளை, "இங்கே வா! "என அழைத்தான். " எத்தனை தான் சுகங்கள் மனிதனின் இந்த காதல் உணர்வால்"அவன் அழைத்த மறுகணம், சிறிதும் தயக்கமின்றி,
"அவனருகில் அவள் "நாணத்துடன் நின்றாள்;அந்த நிமிடம் அவன் விரல்கள்அவளின் கையில் பதிய, அவளின் முகம் சிவந்தது! அவன் அவளை நோக்கி"ரதி" என அழைக்க, அவள் மனம் நெகிழ்ந்தாள்! அவளின் மனதை அறிந்தவனாய், அவளின் கைகளை மென்மையாய் பற்றி, அவனருகில் அமர்த்தினான்! அந்திமாலையில் வீசிய தென்றல் காற்றா? இல்லை அவனருகில் அமர்ந்திருக்கும் அந்த உணர்வா? என்று தெரியவில்லை, ஆனால் அவள் உடல் சில்லென்றது! அவளின் காதல் அவனிடம் மட்டும் அழகானது!

© ❤நான் வாணி ❤