...

11 views

இருள் திண்ணும் பறவை பாகம்- 4
சூரியன் அடிவானத்தில் மறைந்து கொண்டிருந்தது.நான் அதைப் பார்த்தேன்.நான் அதை நோக்கி நடக்க வேண்டுமா அல்லது திரும்பி காத்திருக்க வேண்டுமா என்று யோசித்தேன்.நான் அதனை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.மேற்கு வானில் செந்நிற கதிர்களுடன் சூரியன் விடியலை நோக்கி புறப்பட்டு கொண்டிருந்தது.அந்த செங்கதிரோன் மறைவை கண்டு தன் இடம் பெயரும் பறவைகளின் ஓசைகளை கேட்டேன்.அந்த பட்சிகளின் இனிய ஓசைகளை கேட்டு ரசித்தேன்.தன்னிலை மறந்தேன்.மாலை நேரப் பொழுது ஒரு தனி மயக்கம்.இதமான தென்றல் காற்றில் நனைந்தவாறு மணம் தரும் மலர்களின் வாசம் மணந்து ஹாஹா! அது ஒரு ரம்மியமான தருணம்.அது என்னை அழைப்பது போன்று உணர்ந்தேன்.அவ்வேளை மெல்லிய என் கால்கள் அதை நோக்கி நகர்ந்தது.அப்போது என் விழிகளை திறந்து பார்த்தேன்.அருவிகளின் பின்னலாய் காட்டுப் பாதைச் சென்று மரங்களில் முட்டி மோதிக் காயம் ஏதும் இன்றி தண்ணீரில் நடனமாடி மேடு பள்ளம் கடந்து மலை உச்சி வழி வந்து வெண் நுரையாய் பொங்கி எழும் பாற்கடல் போன்று நீர்த்திவலைகள் சிதறும் அழகிய நீர்வீழ்ச்சி கண்டேன்.அந்த நீர்ச்திவலைகள் நடுவே அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரித்து பறந்து கொண்டிருந்தன.அந்தச் சிறகுகள் மீது ஏதோ பளிச்சென தென்பட்டது. இரவு வானில் தோன்றும் விண்மீன்கள் ஒளிர்விட்டு பிரகாசிப்பது போன்று வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் மீது மின்மினிப் பூச்சிகள் அழகிய காட்சி தந்தன.சட்டென்று வண்ணத்துப்பூச்சிகள் யாவும் மறையக்கண்டேன்.அந்த வண்ணத்துப்பூச்சிகளை காணச் சென்றேன்.அப்போது கருங்கல் பாறைகள் மீதேறினேன்.குன்றுக்குழிகள் மற்றும் மண்மேடுகள் கடந்தேன்.பச்சைப்பசேலென கண்ணுக்கு விருந்தூட்டும் தளிர் விட்டு முளைத்தெழுந்த பசுமையான தேயிலைச் செடிகள் மீது வண்ணத்துப்பூச்சிகள் சோகத்துடன் அமர்ந்திருந்ததை கண்டேன்.அவைகள் என்னை பார்த்து கண்ணீர் சிந்தின.நான் அவைகளிடம் உங்கள் துக்கத்திற்கான காரணம் எதுவென வினவினேன்.வண்ணத்துப்பூச்சிகள் கூறியவை என்னை கண்கலங்கச் செய்தது.கன்னித்தீவு என்னும் ஒரு அழகிய கிராமம்.நெல்லுக்கு பஞ்சமில்லாத கிராமம் அது.எங்கு வயல்வெளிகளும் சோலைக்காடுகளுமே காணப்படும்.நீர் வளம் ஆறாக பெருகி ஓடும்.அங்கு வாழும் மக்கள் அனைவரும் விலைக்கொடுத்து வாங்க முடியாத மனம் கொண்டவர்கள்.கன்னித்தீவு மிகவும் செழிப்பான கிராமம்.ஒரு மலை உச்சி மீது நின்று அந்த கிராமத்தை அவதானித்தால் மனதுக்கு மகிழ்வூட்டும் வனப்புமிக்க இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.ஆனால் அந்த கிராமத்திற்கு....

5ம் பாகத்தை எதிர்பார்த்திருங்கள்

©ரா.சஞ்சிதா