...

2 views

02) இமைக்கா நொடிகள்.
அத்தியாயம் 2

சூரியன் தனது ஒளிகளை தாராளமாக பரப்பிக் கொண்டிருந்தார். அவ்வீட்டில் இருக்கும் அனைவரும் பரபரப்புடன் கிளம்பி கொண்டிருக்க, நம் நாயகனான 'சூரஜ்' போர்வையை இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான்.

அவனது தாய் 'சகுந்தலா' அவனை எழுப்ப அறைக்குள் வந்தார். அந்த அறையோ அறை போலவே இல்லை. தரையெங்கும் புகைப்படங்கள் சிதறி கிடந்தது. அவனது Table மேலே files இருக்க, Bedஇலும் கூட புகைப்படங்கள் தான் இருந்தன.

அதை பார்த்து பெருமூச்சு விட்டவர் அவனை எழுப்பினார்.

அவனோ எழவே இல்லை. இரவு முழுவதும் ஏதோ ஒரு caseஐ பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன், உறங்கவே காலை ஆனது.

'இவன் இப்படி சொன்னால் கேட்க மாட்டான்' என்று நினைத்தவர், அவனுக்கு அருகில், Black Coffeeஐ வைத்து விட்டு சென்று விட்டார்.

அந்த Black Coffeeஇன் நறுமணம் சூரஜ்ஐ எழுப்பி விட்டது. கண்ணை கசக்கி கொண்டே எழுந்தமர்ந்தவன், Black Coffeeஐ எடுத்து குடித்தான். பின்னர், குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வெளியே வந்தான்.

அவனது தாய், "இப்போ தான் எழுந்துக்க தோனுச்சா??" என்று கேட்டவர் உணவு பரிமாறினார்.

இவர்கள் இந்தியாவை  சேர்ந்தவர்கள். இவனது தந்தை பெயர் தீபன்.

என்ன தான் இந்தியனாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் Londonஇல் தான்.

Burgerஐ வாயில் அரைத்துக் கொண்டே phoneஐ நோன்டி கொண்டிருந்தான். அப்போது அவனின் phone அலறியது.

அதை எடுத்து காதில் வைத்துக் கொண்டான்.

அவனின் Cheaf தான் அழைத்திருந்தார்.


Cheaf- Hello சூரஜ். நான் சொல்ற இடத்துக்கு உடனே வா... என்று முகவரியை கூறிவிட்டு வைத்தார்.


இவனுக்கோ, கொஞ்சம் கோபம் தான் வந்தது. சாப்பிடும் போது தொல்லை செய்தால் யாருக்கு தான் கோபம் வராது‌. இவனுக்கும் வந்தது. ஆனால், அதை அடக்கிக் கொண்டு, Burgerஐயும் French Friesஐயும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்‌.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சகுந்தலாவிற்கு இது புதிதல்லவே.. எதுவும் சொல்லாமல் அடுப்பறைக்குள் சென்று விட்டார்.

*

காரை ஓட்டிக் கொண்டே Burgerஐ சுவைத்துக் கொண்டிருந்தான் சூரஜ். அவன் வரவேண்டிய இடத்திற்கு வந்ததும், காரை பார்க் செய்து விட்டு, அந்த பெரிய apartmentக்குள் நுழைந்தான்.

இவனது நண்பன் விஷால், அவனுக்காக அங்கு காத்துக் கொண்டிருந்தான் போலும்.

விஷால்- வந்துட்டியா.. அந்த தீவெட்டி தலையன் ரொம்ப torture பண்றான். ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவனோட தலைய தீ வச்சு கொலுத்தனும் டா. என்று கூறவும் சூரஜ் பார்த்து முறைத்தான்.

சூரஜ்- லூசு.. உன்னோட வாய கொஞ்சம் மூடிட்டு வா. நானே சாப்ட விடாம பண்ணிட்டானேன்னு கடுப்புல இருக்கேன்.. என்று கூறி கொண்டே விஷாலின் பின் நடந்தான்.

அங்குள்ள அனைவரும், சூரஜிற்காக தான் காத்திருந்தனர்.

கொலை செய்ய பட்டவனின் கண்கள் இரண்டும் அவன் வாயில் தான் இருந்தது. அது சற்றே நசுங்கி போய் இருந்தது. அனைவரும் அதை பார்க்காமல் தவிர்க்க, சூரஜ் மட்டும் அவன் அருகில் சென்று, அவன் வாயில் இருந்த கண்களை உற்று பார்த்தான்.

சூரஜ்- இது பாக்க கொலை மாதிரி தெரிஞ்சாலும், இத ஒரு மனுஷன் பண்ணிருக்க chanceஏ இல்ல.

விஷால்- எப்டி சொல்ற??

சூரஜ்- இவனோட இமைகள வெட்டிருக்காங்க. வெட்டுனது கத்தில வெட்டல. வேற எதையோ வச்சு தான் வெட்டிருக்காங்க. வெட்டுனது unevenஆ இருக்கு. இதோ, இந்த கண்ணுக்குள்ள நகம் இருக்கு. அப்டின்னா, இது மனுஷ உருவத்துல இருக்குற மிருகம் தான் பண்ணிருக்கனும்.

விஷால்- Forensic report வந்தா பாத்துக்கலாம்.

சூரஜ்- இப்போ இந்த கேஸ் யார் எடுத்துக்குறாங்க???

Cheaf- நீயும் உன்னோட டீமும் தான் இந்த கேஸ எடுத்துக்கனும். என்க, இவனும் ஒப்புக்கொண்டான். அவனுக்கு தான் விஷால் இருக்கிறான் அல்லவா...

Cheaf- இன்னொரு கொலை நடந்துருக்கு என்க, சூரஜ் அவரை புரியாமல் பார்த்தார்.

விஷால்- டேய்.. ரெண்டு கொலை.‌.. ஒரே இடத்துல, ஒரே மாதிரி.

சூரஜ்- வாங்க போய் பாக்கலாம்.. என்று கூறவும், அனைவரும் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தனர். அங்குள்ள கட்டிலில் Liam கண்கள் இரண்டும் வாயில் வைக்கப்பட்ட நிலமையில் கடந்தான்.


சூரஜ்- இது என்ன?? ஒரே மாதிரி, ஒரே இடத்துல ரெண்டு கொலை. Different.. என்று தமிழில் சொல்லிக் கொண்டான்.

(விஷாலும், சூரஜும் தனியா இருக்கும் போது தமிழ்ல தான் பேசிப்பாங்க.)

கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில், ஒரு ஃபோனும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது.

அந்த துண்டு சீட்டை எடுத்து பார்த்தான். ஆனால், அதில் ஒன்றும் இல்லை. யாரும் பார்க்கும் முன், அதை பத்திரப்படுத்திக் கொண்டான்.

*

விஷாலும், சூரஜும் restaurantஇல் அமர்ந்து இருந்தனர்.

விஷால்- டேய், எதாவது clue கிடைச்சுதா??

சூரஜ்- ம்ம்ம். நிறையவே கிடைச்சு.. Clue இல்ல.. குழப்பம்..

விஷால்- அப்டி என்ன தான் ஆச்சு??

சூரஜ் மடிக்கணினியை நோன்டி கொண்டிருந்தான்.

சூரஜ்- இங்க பாரு, செத்து போணவங்க ரெண்டு பேரும் ஒரு illegal gameஓட finalists. இத நம்ம கிட்ட இருந்து மறைச்சுட்டாங்க.

விஷால்- இது எப்டி உனக்கு தெரியும்??

சூரஜ்- அவங்க illegalஆ game நடத்துராங்க. நான் illegalஆ அத பாக்குறேன். அவ்ளோ தான்.

விஷால்- இது என்ன game??

சூரஜ்- இது நம்மல மாதிரி நல்லவங்க கண்ணுக்கெல்லாம் தெரியாது. இப்போ செத்து போனாங்கல்ல, அவங்கள மாதிரி கெட்டவங்க கண்ணுக்கு தான் தெரியும்..

விஷால்- சரி டா.. அந்த Gameல அப்டி என்ன தான் பண்றாங்க??

சூரஜ்- இது எந்த gameனு எனக்கும் தெரியல. சும்மா உக்காந்துட்டே இருந்தான். எனக்கு கடுப்பாகிருச்சு. அதான் அத பாக்கல. ஆனா, இதுனால அவங்களுக்கு அவ்ளோ profit.

விஷால்- Profitஆ. அப்டி என்ன profit.


சூரஜ்- ஒரு வருஷத்துக்கு ஒரு கோடிக்கும் மேல இந்த  gameல கலந்துக்குராங்க. ஒவ்வொருத்தரும் entry fee 1000 டாலர் கட்டனும். Finalsல win பண்ணவங்களுக்கு 50,000 டாலர் தருவாங்க. 1000*1,00,00,000= 10,00,00,00,000. வருஷத்துக்கு ஆயிரம் கோடி டாலர் சம்பாதிக்குறாங்க.

விஷால்- இவ்ளோ சம்பாதிக்குறாங்க... என்று வாயை பிளந்தான்.

சூரஜ்- ஆமா.. ஆனா, இவங்க எதுக்கு செத்து போனாங்க..

விஷால்- எப்போ final ஆரம்பிக்குது???

சூரஜ்- அது இந்த வருஷம் நடக்கல. இதுல இருந்து escape ஆக தான் அவங்க பாப்பாங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு Game இல்லையாம்.. என்று மடிக்கணினியில் இருந்து கண்ணை எடுக்காமல் கூறினான் சூரஜ்...

*


© Ashwini