...

1 views

07) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
(  07 ) 👻👻👻👻👻👻👻


நிலா , ஜெனி மற்றும் வினு மூவரும் டைம் மிஷின் செய்யும் வேலையில் தங்களை முழுமையாக அர்பனித்து கொண்டனர் . சொல்லப்போனால் இவர்களின் டைம் மிஷின் ஷாப் தான் அகிலத்திலேயே நம்பர் ஒன் ஷாப் என்று கூறுமளவிற்கு வளர்ந்து இருக்கிறது . அதற்கு காரணம் இவர்களின் விடா முயற்சி மட்டுமல்ல , நிலாவின் தந்தையின் பங்களிப்பும் இதில் இருக்கிறது . நிலாவின் தந்தை தான் அவளுக்கு நெகெட்டிவ் எனர்ஜியை பற்றி கற்று கொடுத்திருப்பார் . அவர் இல்லையேல் நிலா ஒரு டைம் மிஷின் ஷாப்பை தொடங்கி இருக்க இயலாது .


" நிலா . " என்று அழைத்தவாரு உள்ளே நுழைந்தான் சூர்யா .

" என்ன .  " நிலா .

" இல்ல நிலா , சும்மா தான் என்ன பண்றன்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன் . நீ உன்னோட வர்க் எதுவோ அத பாரு . நான் போரேன் " என்றவன் வெளியேறிவிட்டான் . அவன் செல்லும் திசையையே நிலா முகசுழிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் .


" என்ன டி அவன் போன திசையையே பாத்துட்டு இருக்க " வினு .

" இப்போ எதுக்கு அவன் வந்தான் . வந்துட்டு சும்மா வந்தேன்னு சொல்லிட்டு போறான் . அவனுக்கு பைத்தியம் எதுவும் பிடுச்சுருச்சா என்ன " நிலா சந்தேகத்துடன் வினவினாள் .


" சம்திங் சம்திங் " என்றனர் கோரசாக . இதை கேட்டதும் நிலா முறைக்க துவங்கிவிட , அவர்கள் வேலையை தொடர்ந்தனர் . ( எத்தன சென்சுரி போனாலும் இந்த நட்பு  மட்டும் மாறவே இல்ல பாத்திங்களா . வெரி பவர்ஃபுல்  )


வெளியே வந்த சூர்யாவை பார்த்தவர்கள் " என்ன டா . போன ஒடனே வந்துட்ட . " ஜான் .

" அங்க போணா நிலாவ தவர ரெண்டு பேரும் என்ன ஏதோ வித்தியாச ஜந்துவ பாக்குர மாதிரி பாக்குராங்க . அதான் வந்துட்டேன் . " என்றான் சூர்யா .

" அப்டியா . " ஜான் .

" ஆமான்டா . " சூர்யா .

" சரி வாங்க போவோம் . இவங்க டைம் மிஷின் செய்ரேன்னு எனென்னமோ செய்ராங்க . பாக்கலாம் என்ன நடக்குதுன்னு . " என்ற ஜான் அப்படியே உரைந்து போய் நின்றான் அவன் கண்ட காட்சியில் . ( அப்டி அவன் என்ன பாத்ருப்பான்னு யோசிங்க . நான் அந்த நெகெட்டிவ் எனர்ஜிய இன்டர்வ்யூ எடுத்துட்டு வந்தர்ரேன் . )

◆◆◆◆◆◆◆◆◆◆

இங்கு ஜீவாவின் வீட்டில் :

இரவு 10 மணி . ( அங்கு 9 : 30 மணியளவில் தான் அந்த பேய் வெளியே வந்திருந்தது . )


" அப்பா . " ஜீவா .

" என்னப்பா " மகேஷ்வரன் .

" இல்லப்பா , சப்போஸ் அந்த நெகெட்டிவ் எனர்ஜி வெளிய வந்துருச்சுன்னா என்னப்பா பண்றது . " ஜீவா .

" வாய வக்காத டா . வந்துர போகுது . " என்று அவர் கூறிய அடுத்த நிமிடம் கர்ன்ட் கட் ஆனது .


" என்னப்பா கரன்ட் கட் ஆகிருச்சு . " ஜீவா .

" எனக்கு என்னப்பா தெரியும் . " மகேஷ்வரன் .

" சரி இருங்க நான் போய் என்ன ஆச்சுன்னு பாக்குறேன் . " என்று கூறியவன் வெளியே செல்ல முற்பட அவன் வெளியே செல்ல முடியாதவாறு காற்று வீசியது . விட்டால் அவனையே அந்த காற்று தூக்கி அடித்துவிடும் போலும் . அந்த அளவு காற்று பலமாக வீச , இங்கு அன்டார்டிகாவிலோ அனைவரும் கொஞ்சம் பரபரப்புடன் அமர்ந்திருந்தனர் . காரணம் அகிலத்தில் ஒரு இடம் மட்டும் தான் அவர்கள் கன்ட்ரோலில் இல்லாமல் இருந்தது . ஆனால் தற்போது இன்னும் ஒன்று அதனுடன் சேர்ந்து கொண்டது . அதுவும் இவர்களின் கையை விட்டு சென்று விட்டது .

ஜீவாவின் வீட்டில் கற்று பலமாக வீச அவன் பறந்து போய் ஒரு கம்பியில் பலமாக மோதி கீழே விழுந்தான் . அது மட்டும் அதற்கு பத்தாது போலும் இன்னும் காற்று பலமாக வீச , தற்போது அவனின் தந்தை பறந்து சென்று விழுந்தார் . அப்படியே இருள் சூழ ஆரம்பிக்க அங்கு ஒரு கருப்பு உருவம் வந்தது . தலை முடியை விரித்து போட்டிருந்தது . அத்ற்கு கால் இல்லை . இடை வரை மடடும் தான் தெரிந்தது . அப்படியே அது அவர்களின் அருகில் வர அவர்கள் பயந்து தான் போனார்கள் .

" வேணாம் . விட்ரு . " என்று ஜீவா கெஞ்ச  , அதுவோ ஈவு இறக்கம் துளியும் இன்றி கத்தியது . " என்ன விட்றதா . நானும் அன்னிக்கு அப்டி தான் கெஞ்சுனேன் . யாராவது கேட்டாங்களா . இல்லல்ல , அபர்ம் எதுக்கு டா நா மட்டும் விடனும் . என்ட ஈவு இறக்கத்த எதிர் பாக்காத . " என்ற அது அவனின் தலை முடியை கொத்தாக பற்றி மேலே தூக்கியது . அவனுக்கு உயிர் போகும் அளவிற்கு வலிக்க , அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தது அந்த உருவம் .

" ப்ளீஸ் வேணாம் . என்னோட பய்யன விட்ரு . அவங்க பண்ணுன தப்புக்கு எதுக்காக எங்கள கொல்லனும் . ப்ளீல் வேணாம் . இத்தன வருஷம் கழிச்சும் பகை உணர்ச்சிய வச்சுட்டு இருக்க . அவங்க தான தப்பு பண்ணுனாங்க . அவங்கள போய் அழியேன் . எங்கள எதுக்கு அழிக்குற . " மகேஷ்வரன் .

" உங்களோட குடும்பத்த அழிக்காம விட மாட்டேன் . " என்ற அந்த உருவம் மகேஷ்வரனின் கழுத்தை நெரித்தது . அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை . ஜீவாவால் கூட இயலவில்லை . ஒரு கையில் ஜீவாவின் தலை முடியை பற்றி இருக்க மறு கையில் மகேஷ்வரனின் கழுத்தை நெரித்து கொண்டிருந்தது .


ஜீவா எவ்வளவோ கெஞ்சி பார்த்துவிட்டான் . ஆனால் அந்த உருவத்தின் திடம் மட்டும் குறையவே இல்லை .  அந்த உருவம் அவரின் கழுத்தை நெரிக்க நெரிக்க அவரின் உயிர் சிறிது சிறித்தாக சென்று கொண்டிருந்தது . ஜீவா துடித்து போணான் . எந்த ஒரு மகனுக்கும் இந்த ஒரு நிலை வர கூடாது . கண் முன்னே தன் தந்தையின் உயிர் சென்று கொண்டிருக்கிறது . அவனால் எதுவும் செய்ய இயலவில்லை . கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது .


சிறிது நேரத்தில் அவரின் உயிர் உலகத்தை விட்டு பிரிந்தது . அவரின் உயிர் பிரிந்ததும் ஜீவாவவை விட்டது அந்த உருவம் . ஜீவா தன் தந்தையின் அருகில் சென்று கதறி கதறி அழுதான் . " அப்பா ...........   "


அதை பார்த்து ரசித்தது அந்த உருவம் . தன் மகனும் இப்படி தானே கதறினான் . அதை அவளின் கண்களால் கண்டாளே . அதை நினைத்து வருந்தியவள் , அந்த காட்சியை ரசித்தது .


அப்படியே அந்த உருவம் மறைய , இருள் சூழ்ந்து இருந்த வானம் இப்போது தெளிந்தது . அவன் உடைந்து அழுதான் .


★★★★★★★★★★★

" சரி வாங்க போவோம் . இவங்க டைம் மிஷின் செய்ரேன்னு எனென்னமோ செய்ராங்க . பாக்கலாம் என்ன நடக்குதுன்னு . " என்ற ஜான் அப்படியே உரைந்து போய் நின்றான் அவன் கண்ட காட்சியில் . அங்கு ஜெனி அந்த அறையை விட்டு வெளியே வந்திருந்தாள் . அவளை பார்த்து தான் அவன் அதிர்ந்து நின்றிருந்தான் . 

" டேய் . என்ன டா பண்ற " சூர்யா .

" ஈஈஈஈஈ . ஒன்னுல்ல  , வா போலாம் . " ஜான் .

" அப்டியா . " என்று அவனை வித்தியாசமாக பார்த்து கொண்டே கேட்டான் .

" ஆமா டா . வா போலாம் . "  என்று கூறி அவனை அழைத்து சென்று விட்டான் .

- பேயின் ஆட்டம் தொடரும் .

★★★ ★


© Ashwini