...

13 views

இசைஞானி
நம்முடைய இளமை கால நினைவுகளை இன்னும் மறக்காமல் பொக்கிஷமாக வைத்து இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் இளையராஜா தான். நமது பள்ளி காலம், கல்லூரி காலம், இளமை காலங்கள் எல்லாம் அவர் இசையை வைத்தே ஞாபகம் வைத்துக் கொள்வோம். அன்பு காதல் நட்பு இன்பம் துன்பம் என்று எல்லா காலத்துக்கான இசை நமக்கு இளையராஜா மட்டும் தான். 80, 90களில் இவர் இசை ஒலிக்காத வீடுகளே இல்லை. 1978ல் எங்கள் அப்பா கடைக்கு பக்கத்தில் இருக்கும் அப்புச்சியிடம் சொல்லி மலேசியாவில் இருந்து நேஷனல் பானாசோனிக் டூ இன் ஒன் டேப்ரிக்கார்ட்டர் வாங்கி வரச்சொல்லி எங்களுக்கு கொடுத்தார். சோனி மற்றும் டிடிகே கேசட் வாங்கி முழுவதும் இளையராஜா பாட்டுகளை மட்டும் பதிந்து கேட்ட காலம். ரேடியோவில் இளையராஜா இசையில் எஸ்பி ஜானகியின் குரலில் பாடு நிலாவே கேள் கவிதை பாட்டை வீட்டில் கேட்க ஆரம்பித்து நடக்க ஆரம்பித்தால் சாந்தி தியேட்டர் வரை ஒரு டீ கடை, வீடு பாக்கி இல்லாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் நம்மால் முழு பாட்டையும் கேட்டு விட முடியும். அப்படி எல்லோர் வீடுகளிலும் குறிப்பாக டீ கடைகளில் இவர் இசை ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனால் இந்த இளையராஜா என்ற போதை பொருளுக்கு அடிமையான நாம் இன்னும் வெளி வரவே இல்லை என்றால் அதற்கு அவர் அர்ப்பணிப்பும் உயிர்ப்பான அந்த இசையும் தான். ரஜினி கமல் என்று இல்லாமல் மோகன் ராமராஜன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என அவர் எல்லா நடிகர்களுக்கும் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். இந்த கொரோனா காலத்திலும் நாம் அவர் இசையை பேசுகிறோம் என்றால் அது தான் அவர் வெற்றி. வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் பேசுவோம். நன்றி செல்வகணேசன் ப்ரோ.