ஊரை கை விடாதே !
பத்திரிக்கை வைத்து -
ஊரை அழைத்து-
பிரியாணி சமைத்து
-பேனர் கட்டி
கோலாகலமாக -
ஒரு பணக்கார தம்பதியின் -முதல் குழந்தையின்-
முதல் பிறந்த நாள் -கொண்டாட்டம்
இனிதே நிறைவுற்றது !
என் ஊரில் உள்ள பிரபலமான பெரிய மனிதர்கள் பலர் ,
அந்த விழாவில் பரிசுகளோடு
கலந்து கொண்டதை கண்ட
என் வீட்டார்,
25 வயதாகும் எனக்கு பிறந்தநாள் கொண்டாட ,
ஊரையே கூட்டி இருந்தனர் !
தலைவிதியே என - தலையில் எண்ணெய் தேய்த்து குளித்தேன் !
புத்தாடை அணிந்தேன் !
பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க ,
கேக் வெட்டினேன் !
அம்மாவுக்கு-
அப்பாவுக்கு-
அண்ணனுக்கு -
அக்காவுக்கு -
தம்பிக்கு -
தங்கைக்கு - என அனைவருக்கும் கேக் ஊட்டினேன் !
வாழ்த்தியதோடு , ஆசியும் - ஆஸ்தியும் - வழங்கியது எனது குடும்பம் !
அந்த மகிழ்ச்சியோடு ,
வந்திருந்தவர்களுக்கு - இனிப்பை வழங்கி வாழ்த்து பெற்றேன் !
பரிசுகளையும் பெற்றுக் கொண்டேன் !
ஆனால்,
ஏராளமான பரிசுகளை எதிர்பார்த்த என் - பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
அதை போக்கும் விதமாக -
பசிக்கிறது என்றேன் !
அமர வைத்து பரிமாறினார்கள் !
அப்போது-
எதிர் தெருவில் வசிக்கும்
ஆண்டி -
பிரியாணி விருந்தை மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு-
வாளியில் வீட்டுக்கும் வாங்கிக் கொண்டு -
போகும் போது -
என்னைப் பார்த்து,
ஏழு கழுதை வயதாகுதே - இன்னும் ஒரு வரன் கூடவா
அமையவில்லை ?
இதுவரை,
ஒரு பெண் பின்னாலும்
நீ போகவே இல்லையா?
என அத்தனை பேர் முன்னும் கேட்டு - என் மானத்தை-
பிறந்த நாள் - என்றுகூட பார்க்காமல் நாசம் - செய்து விட்டு போனது !
உண்மையை காது கொடுத்து கேட்க ,
கஷ்டமாக இருந்தாலும் - மனதார ஏற்றுக்கொண்டேன் !
ஆனால்,
நாளை முதல் ஆண்டி வீட்டு பக்கமாகத்தான்_
போவேன் !
வருவேன் !
ஏனென்றால், ஆண்டிக்கு -
திருமணமாகாத -4 பெண் பிள்ளைகள் !
என்னை விட - 1 அல்லது 2 கழுதை வயது குறைவானவர்கள் !!
© s lucas