...

3 views

மீண்டும் என்னை உதைப்பாயா கண்மணியே?
சென்னை விமான நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக காணப்பட்டது..... காலில் மக்கள் சக்கரம் கட்டிக் கொண்டது போல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த ஜனக் கூட்டத்தின் மத்தியில்... தங்களது உறவினருக்காய் ஒரு கூட்டம் காத்திருக்க... பலர் தங்களது எதிர்காலத்தை தேடி... வெளிநாட்டுக்கு பறக்க ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர்.... சற்று முன்னர் தரையிறங்கிய விமானத்திலிருந்து எல்லா ஃபாமாலிடிஸையும் முடித்து விட்டு வெளியே வந்தான் ஆதிரன்..... 29 வயதான இளம்  பொறியியல் பட்டதாரி.... ஆறு வருட வெளிநாட்டு வாசம்...அவனது அழகையையும் தோற்றத்தையும் கொஞ்சம் அதிகமாகவே மெருகூட்டியிருந்தது.... தனது சூட்கேஸை இழுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவன்... ஒரு டாக்ஸி பிடித்து... தன் வீட்டை நோக்கி பயணித்தான்.... முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தெரிந்தது... நிச்சயமாக தாய்நாட்டுக்கு வர வேண்டும் என்பதால் தான் வேலைகளை ஒதுக்கி விட்டு வர வேண்டியாதாகி விட்டது... மனைவி பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறனர்.... மனைவியின் வேலையும் பிள்ளைகளின் படிப்பும் விடுமுறை எடுத்து தாய்நாட்டுக்கு வர அனுமதிக்கவில்லை... ஆகவே தான் ஆதிரன் மட்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறான்.....

காரில் வரும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு ஆறு வருடங்களில் சென்னையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.... ஆனால் ஆதிரன் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை....

சார்.... சார்.. உங்க இடம் வந்துட்டு.....

என்று ட்ரைவர் அழைக்க.... அதில் தன்னிலை அடைந்தவன்... சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.... ட்ரைவருக்கு பணத்தை கொடுத்து அனுப்பியவன் தன் வீட்டிற்குள் நுழைந்தான்..... ஆறு வருடங்களில் பெயிண்ட் கலர் கூட மாற்றப்படாமல் இருக்கும் தன் வீட்டை நிமிர்ந்து பார்த்தான்.... வீட்டில் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.....  ஏதோ ஒரு பதட்டம் நெஞ்சை மூட ..... மூச்சை ஒரு முறை இழுத்து விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் ....தன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான் .....அங்கு வீட்டின் நடுப்பகுதியில் நடுநாயகமாக படுத்திருந்தாள் அவனது அன்னை..... உயிரற்ற சடலமாய் கிடந்த தாயை சுற்றி பலர் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்..... அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் ஆதிரன் வெளிநாட்டிலிருந்து பறந்து வந்திருக்கிறான்..... ஆதிரனுக்கு இதயத்தின் ஓரம் ஊசி வைத்து குத்துவது போல வலித்தது..... கண்களும் தன்னை அறியாமல் கலங்க தொடங்கியது ...... ஆனால் சமூகம் ஆண் மகனுக்கு என்று விதித்திருக்கும் சில விதிகளில் ஒன்று ஆண் மகன் அழகூடாது..... எனவே பொங்கி வந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்..... வாய்வழியே வெடித்து சிதற தயாராக இருந்த கதறல்கள் எல்லாம்....  அவனது தொண்டைக்குழிக்குள் அமிழ்ந்துபோயின போயின..... அவனது தந்தை தோளில் ஒரு துண்டை போட்டவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்...  அவரது கண்கள் இலக்கின்றி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தன,.... அந்த வீடே பெண்களின் ஒப்பாரியால் நிறைந்திருந்தது.... மற்றொரு பக்கம் சிதையை எரியூட்ட தேவையான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன... தாயின் உடல் நடுகூடத்தில் குளீரூட்டும் சாதனத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.....

இறுதி சடங்குகள் தொடங்க.... தலை மகனாகவும் ஓரே மகனாகவும் தாய்க்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை சரியாய்...