...

6 views

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
அதில் எனக்கு சந்தேகமே இல்லை,
வெற்றி வந்தால் தலைகனம்கொள்ளாதே,
தோல்வி வந்தால் கவலை கொள்ளாதே
தோல்வி வந்தால் நீ ஏற்றுக் கொள்
ஏனென்றால் அது தான் உன் வெற்றிக்கு முதல் படி
முதல் போட்டியில் வெற்றிக் கொள்
ஆனால் இரண்டாம் போட்டியில் உன் அலட்சியத்தால் தோல்வி அடையாதே....
பல உள்ளங்களும் உறவுகளும் சொல்லத் துடிக்கும்
என்னவென்றால் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று.
முயற்சி என்பது நான்கு எழுத்து சொல்
வாழ்க்கை என்பது நான்கு எழுத்து சொல்
ஆதலால் முயற்சி இருந்தால் வளர்ச்சி பெற முடியும்
வளர்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
முயன்று பார் உன்னால் எதையும் வெல்ல முடியும்
முயன்றால் உன் மூச்சயும் வெல்ல முடியும்
முயற்சி தான் வாழ்க்கையின் முதற் பயிற்சி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
முயன்றால் இந்த உலகத்தையே நீ வென்று விடுவாய்!