...

4 views

வசந்த் அன் கோ காலம் 📻
வழக்கம் போலவே லேட்டா இரவு 8 மணிக்கு தான் காலேஜ்-ல இருந்து கிளம்பினேன். தலைக்கு மேல ப்ராஜக்ட் வேலை.....ஒரு அவுட்புட்டும் வர மாட்டிங்குது, பைனல் ரிவ்யூ வேற நெருங்கிட்டே இருக்கு......மண்ட காய்து....பஸ் விட்டு இறங்கின உடனே எதிர் கடையில சுடச்சுட மிளகாய் பஜ்ஜி வாசம் தூக்குச்சு. அம்மா சொன்ன தால எண்ணெய் பலகாரம் வேனாம்னு 'சூடா ஒரு மசாலா டீ' கேட்டேன். அத வாங்கி குடிக்கும் போது அங்கே ஓடிட்டு இருந்த ரேடியோ பெட்டி "அந்த காலம் அது அது அது வசந்த் அன் கோ காலம்.....இந்த காலம் இது இது இது இதுவும் நம் வசந்த் அன் கோ காலம்..." அத கேட்ட நான் சிரிச்சுகிட்டே, கிலாஸ மேஜ மேலே வச்சிட்டேன். 7 ரூவா போக 3 ரூவா சில்லரைய டீக்கடை கார அண்ணே மேஜ மேலே வைக்க, நான் அத எடுக்க போயி, பக்கத்துல டீ வாங்க வந்த சின்ன பையன் கைய தெரியாம தட்டிவிட்டேன்.

என் தலயெழுத்து....எல்லோரையும் போலவே அவன் கையிலும் ஒரு செல்போனு இருக்க....அத தட்டி விட்டதுல தாருமார சிதறிடுச்சு. எடுத்து சிம், பேட்டரி போட்டு மாட்டி கொடுத்து 'சாரி' சொல்லிட்டு கிளம்பிட்டேன். டீ பார்சல் வாங்கிட்டு தூக்குச்சட்டி யோட என்ன துரத்திக்கிட்டே வந்தான்.
பஸ் படிக்கட்டுல கம்பீரமா கம்பி பிடிப்பது போல் என் கைய பிடிச்சிட்டு தொங்க ஆரம்பிச்சுட்டான். "இந்த போன் வேல செய்ய மாட்டிது, பாட்டு பாட வச்சி தந்துட்டு போ....." சரி தொலையுதுனு நானும் "சுவிட்ச் ஆஃப்" மீண்டும் "பவர் ஆன்", "மெனு", "எஃப் எம்" பேசிக் மாடல் போன் என்பதால் அதற்கு ஹெட்செட் போன்ற கருவிகள் தேவையில்லை. மேலே ஒரு நீட்ட கம்பி ஒன்றை செல்போனுக்குள்ளே மடக்கி வைத்திருப்பார்கள். அதை நீட்டினால் போதும் சிக்னல் கிடைத்து விடும். இதலாம் எனக்கு தெரிந்திருந்தும் அந்த சிறுவனை சமாளிக்க முடியாமல் திணறி போனேன்.

சிறுவன்: ஏற்கனவே ஒடச்சிப்புட்ட....இன்னும் அந்த கம்பிய இழுத்து இழுத்து ஓட்டை ஆக்கிறாத??

நான்: வேல செய்ய விடுறா!!!

சிறுவன்: கம்பி இழுத்தா தான் சத்தம் வருமா....??

நான்: அப்போ தான் டா சிக்னலே வரும்.

சிறுவன்: இதெல்லாம் உனக்கு மட்டும் எப்பிடி தெரிது....நீயும் இது மாதிரி போன் வச்சிருக்கியா, என்ன??

நான்: டேய் மூடுறா....என் ப்ராஜக்டே இத பத்தி தான்.

சிறுவன்: ஆமா....நீ எத்தனாவது படிக்கிற....

நான்: கெத்தா....சின்ன பையனு கூட பாக்காம...ஐ அம் பேசிக்கலி எலக்ட்ரானிக் இன்ஜினியர் டா....இத லாம் எனக்கு கை வந்த கலை.....


ஒரு வழியா கஷ்டப்பட்டு யூடுயூப் லாம் பார்த்து அவனுக்கு அத சரிசெஞ்சு குடுத்துட்டேன். அதை வாங்கி கொண்ட சிறுவன், 93.5 சூரியன் எஃப் எம்....... மீண்டும் அதே ஒலி📣"அந்த காலம் அது அது அது வசந்த் அன் கோ காலம்🎶....இந்த காலம் இது இது இது இதுவும் நம் வசந்த் அன் கோ காலம்🎶..."

எப்பிடியோ! ரொம்ப நாள முடிக்க முடியாம போன என் ப்ராஜக்ட் இன்னக்கி இவனால முடிஞ்சுச்சே. சிலநேரம் கற்ற கல்வியும் வாழ்கைக்கு உதவுகிறது.

நன்றி,

-முத்து.

© Muthu