...

13 views

துரத்தும் காதல்








இது எண்ணுடைய முதல் காதல் கலந்த கதை...

ஒரு பெண்ணை இல்லாத பணத்துக்காக ஓட ஓட துரத்தும் கதை. பண வெரி கொண்ட கட்சி ஆளுங்களும் கண் மூடித்தனமான கட்சி ஆதரவாளர்களும் இதில் அடக்கம்.










அன்று பிபீஓவில் முதல் நாள் வேலை. பி.ஜி படித்து முடித்தவுடன் நிஷாவிற்கு கிடைத்த முதல் வேலை. இன்டக்ஷன் முடிஞ்சி ஜாய்ன் பண்ணி ஸுட்லயும் உட்காந்தாச்சு ....

எல்லாரும் இன்ட்ரடுயுஸ் பண்ணின எக்ஸைட்மேன்ட்ல நிஷா எல்லாரையும் பாத்து ஸ்மையில் பண்ணிட்டு இருந்தா.

பசங்க எல்லாரும் கங்கிராட்ஸ் பண்ணிட்டு கை குலுக்கிவிட்டு அவங்க வேலையை பாக்க போயிட்டாங்க.

அங்க இருந்த சீனியர்ஸ்ல  ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப வாயாடி மாதிரி தெரிந்துச்சு அது நாகலக்ஸ்மி. 


அவளும் அவ பிரண்டு தீபாவும் நல்லா கலகலப்பாவும் பேசுவாங்க. கூடவே காசிப்பும் நல்லா பேசிப்பாங்க.





அருண்குமார், கிருஷ்ணகுமார். சத்யஜித், ரெமி ஜாய், பிரீத்தி, ஷைலஜா மற்றும் டீம் லீடர் வைதேகி இவங்க எல்லாம் கொஞ்சம் காசூவல்லா பேச ஆரம்பிச்சாங்க.

அந்த மாதிரியான பிபீஒ அட்மாஸ்பியர்ல அதுதான் முதல் எக்ஸ்பிரியன்ஸ் நிஷாவிற்கு.

நிஷாவின் மனதுக்குள்...

ச்ச்ச.... என்னோட சீனியர்ஸ்லாம் அந்த  இடத்துக்கு எத்த மாதிரி பலகிட்டாங்க போல. இருபத்தி நாலு மணி நேரமும் பாட்டு. வேலை செய்யும் போது எப்படி பாட்டு கேட்டுட்டே செய்யுராங்கனு தெரிலப்பா. நமக்கெல்லா ஒழுங்கா வேல பாக்கனும்னா டிஸ்டிராக்ஷன் இருக்கவே கூடாது.


அதுல ஆடியோ காமடி வேற.... காமடி போடுறேன்டு கூட இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சிட்டும், வம்புக்கு இழுத்துட்டும் இருந்தாங்க.


தீபாவும் நாகலக்ஸ்மியும் சீனியர் ஆனதால வேலைகளை நியு ஜாய்னீஸ் எல்லாருக்கும்   கொஞ்சம் கொஞ்சமா கத்து கொடுக்க ஆரம்பிச்சாங்க.

ஆனா பசங்க மட்டும் பிபீஒ-ல வேலைக்கு வந்தா பொண்ணுங்கள மடக்கனும்ற எண்ணத்துல
காதல் உணர்வுகள் வர வைக்கிற  மாதிரியே பாட்டு போட்டு தூண்டி விட்டுட்டே இருந்தாங்க.

நான் இருக்கிற  டீம்ல பாட்டு போடலனா பக்கத்து டீம்ல போடுவாங்க. இல்லனா வேற டீம்ல இப்படி எதாவது ஒரு டீம்ல..... மூனு ஷிப்டுலையும் ஓடீகிட்டே தான் இருக்கும்.

எங்க டீம்ல டார்கெட் எதுவும் கிடையாது. எல்லாம் டீம் வர்க் தான். 

எனக்கு முதல் இரண்டு மாசம்  நல்லா தான் போய்ட்டு இருந்தது.

சாப்பிடும் போது மாத்தி மாத்தி கிண்டல் அடிடிச்சுட்டே இருப்போம். புது பாட்டு புளு டூத் வழியா ஷேர் பண்ணிட்டு இருக்க கிருஷ்ண குமார் ஹேல்ப் பண்ணுவான்.
அவன் எனக்கு ஒரு நல்ல ஜெனியுன் பிரேண்ட். மற்ற நேரங்கல்ல ரெமி மலையாளம் கலந்த இங்கிலிஷில் பேசுவா.
நானும் அவளும் ஒரே டைம்ல ஜாய்ன் பண்ணோம்.

பசங்க எல்லாம் டபுள் மீனிங்ல பேச ஆரம்பிச்சாங்க. இங்கதான் பிரச்சனயே ஆரம்பிச்சுது. போகப் போக ஓவராத்தான் போயிடுச்சு.


வேல செய்ய ஆரம்பிச்சி இரண்டு மாசத்துலேயே பாலிடிக்ஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு ஆளுக்கு மட்டும் ஹீரோ மாதிரியான சப்போர்ட். அது சத்யஜித் என்ற கேரலைட்க்கு. தமிழ் ஆளுங்கலாம் சேர்ந்து அவர ரொம்ப எத்தி விட்டாங்க. அங்க ரெமியும் மலையாளி தான்.
...