...

10 views

குரங்கின் கடிதம்
நரிக்கூட்டம் பற்றிய தகவல்களை அனுப்பிவிட்டு பழைய நினைவுகளை அசைப்போட தொடங்கியது குரங்கு,

பத்து ஆண்டுகளுக்கு முன் காட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தும் படுத்தாள முயற்சித்து தோற்றோம், என்ன செய்ய குரங்கு புத்தி!!

மாலை நேரம், அன்றைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தன்மரம் திரும்பிய குட்டி குரங்கு, மர உட்சிக்கிளையில் சோர்வுடன் தெரிந்த மூத்த குரங்கருகே வந்தமர்ந்தது.

ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?
என கேட்ட (குட்டி குரங்கு) 'குகு' விடம் பார்வையை திருப்பாமல், எழுந்து நின்று சூரியன் மறைந்து மெல்லிய இருள் சூழ்ந்த காட்டை பார்த்துக்கொண்டே ,

இதோ கேள் குட்டி குரங்கே, கிட்டதட்ட அறுபது ஆண்டுகள் இந்த ஒட்டு மொத்த காடும் நம்ம கையிலதான் இருந்துச்சி, ஆரம்பத்துல நம்மள்ள சிலர் செஞ்ச நல்ல வேலைகளால அடுத்தடுத்துனு நாமளே ஆட்சில இருந்தோம்
ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எல்லாமே நம்மதானு நினைச்சோம், நம்மள இந்த இடத்துல உட்கார வைச்ச விலங்குகளை துச்சமா தூக்கி எறிஞ்சோம் விளைவு,

இப்போ நம்ம இருக்கமா இல்லையான்னு தெரியாத நிலைக்கு வந்துட்டோம், இதுவே தொடர்ந்தா இன்னும் சில வருடங்கள்ல நாம இருந்த கிளை தெரியாம போய்ட வாய்ப்பிருக்கு, அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

என, "க்கு" வைத்து முடித்த 'மூகு' ங்கை ஆர்வத்துடன் பார்த்தது குகு.
மரத்தின் பால்கனி பகுதியில் இருந்து தன் அறையான கிளைக்கு குட்டி குரங்கை அழைத்து வந்த மூகு, தன் அறை பொந்திலிருந்து மூங்கிலை குடைந்து உருவாக்கப்பட்ட ப்ளாஸ்க் வடிவிலான பொருளை குகு ங்கின் கைகளில் கொடுத்து,

இதுதான் நம்ம கடைசி முயற்சி,
இதோ இதுக்குள்ள இதுநாள் வரையில்
நம்ம செஞ்ச தவறுகள் துரோகங்கள்னு
ஒண்ணு விடாம குறிப்பிட்டு மனப்பூர்வமா
காட்டுல இருக்குற எல்லார்டையும் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியிருக்கன், இதை நீ ஒவ்வொருத்தர் டையும் கொண்டு சேர்க்கனும்.

இதுவே காலம் கடந்த யோசனைதா
இருந்தாலும் இப்பவும் திருந்தாட்டி கடந்த காலாம்
செய்த ஒரு சில நல்லதும் காணம போய்டும்,
ஒரு விஷயத்தை எப்பவும் மறந்துடாத
இவங்க கிட்ட இவ்வளவு கெட்டப் பெயர் எடுக்க நமக்கு அறுபது ஆண்டுகள் ஆச்சி, ஆனா இந்த நரிக்கூட்டத்துக்கு ஆறாண்ண்டே போதுமானதா இருக்கு!!

இங்க காட்டுல வாழ்றவங்களுக்கு தெரியும்
அவங்கள எப்பவும் குறைச்சு மதிப்பிடாத……..

இல்ல மாட்டன் கண்டிப்பா மன்னிப்பு கேட்பன், ஆட்சியை புடிப்பேன்,
புடிப்போம்
புடிப்போம்னு
தூக்கத்துல கத்துன யானையோட
தொண்டை மேல தும்பிக்கையை தூக்கி போட்டவாரே,
என்ன தம்பி இன்னிக்கும்
உன் குரங்கு தலைவன் திருந்துறாப்புல கனவா எனக் கேட்டு காடே அதிர சிரித்தது அண்ணன் யானை!!

ஓ எல்லாம் கனவானு மெதுவா எழுந்து
அண்ணனை முறைத்தவாரே
" தூதன் வருவன், மாரிப்பொய்யும்"
என முனுமுனுத்தவாறு, பிரமாண்ட பின்னழகில் வாலாட அன்றைய பொழுதைப் போக்க ஆந்தையாரை தேடிப் புறப்பட்டது…

©Kv