...

10 views

பாச மகளின் நேச அப்பா
பெட்டை பிள்ளை பெத்துட்டுயே
மவ பொறந்ததும் செத்துட்டியே
எட்டி உதைச்சு அழும் மவள
புட்டி பாலு ஊட்டி வளர்த்தேன்
செத்துட்டாலும் நீ எனக்கு
மரு உருவா மவளா வந்தே

புத்தி கெட்ட ஊர் சனக
இன்னொருத்தி கெட்டிக்கோனு
வெட்டி கதை கதைச்சாங்க
உச்சி கொட்டி போனதுப்பா
இச்ச ஆச மெச்சி போச்சு
கோச்சிக்காம போ மக்கானு
நாசுக்காக பேசிடுவேன்

காலம் தள்ளி போகிடுச்சு
கழுத எனக்கும் வயசாகிடுச்சு
குந்த வச்ச நம் மவள
பந்த காலு நட்டு வச்சி
பக்குவமா பாத்துக்கிட்டேன்
பாவி மக நீ இல்லையே
பாசத்தாலே பந்தலிட
படைச்சவனே பகச்சிகிட்டேன்

காலு தாண்டி போவணுமே
பாசமுள்ள என் மவளே
யோசிக்காம யோசிக்கிறேன்
இப்போவே வந்திராதேன்னு
வர்ற பொழுத யாசிக்கிறேன்

புகுந்த வீடு போற மவ
பிறந்த வீடு மறந்திடுமா
நிரந்தரமா நேசம் வைப்பா
நெறியறிந்த பெட்டை பிள்ளைன்னு
நெஞ்சை நான் தேதிக்குறேன்

பொண்ணு இவ சிறை இருந்தா
பூவுலக ஆசானெல்லாம்
பாசம் எல்லாம் வேஷம் என்பார்
ஆடு மேய்க்கும் ஆசாமியோ
குறும்பாடு விற்கச் சந்த போனா
முந்திக் கொண்டு ஏல கூறு
குறையா விலையில்
விரலில் சொல்வார்

விலையில்லா தங்கமடி
என் மவளே நீ எனக்கு
விதி கிடக்கு அழ வேண்ணா
என்றைக்குமே உங்கப்பன்
நா உன் பாசத்தின் அங்கமடி

சேவல் கூவ காலங்காத்தால
காகம் கத்த நீர் தெளிப்பே
கறவை மாடு கத்துதேன்னு
காம்பழுத்தி பால் கறப்ப

சோறு போடும் வயக்காடு நோக்கி
ஏறுகட்டி நான் நடக்க
வாசலிலே வழியனுப்ப
நேச மவளே
நிறைஞ்ச சிரிப்பா நீயிருப்ப

களத்துமேடு களையெடுத்து
களைப்பாக இருக்கையிலே
கட்டு சோறு கட்டிவந்து
கஞ்சித்தண்ணி நீ கொடுப்ப

பெற்ற மவளே இப்போ எங்கே
நீ இல்லமா செத்துக்கிடக்கேன்
உன் அப்பன் இங்கே

வாக்கப்பட்டுப் போன மவ
வர மாட்டாளா எனை பார்க்க
ஏக்கத்தோடு காத்திருக்கும்
வயதாகிப்போன பாச அப்பா....

© ஆறாம் விரல் ​✍🏾


#tamil #tamilstories #aaram_viral #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள்