...

6 views

பயணம்
நீண்டதொரு பஸ் பயணம். மனம் பலவாறாக சிந்திக்க தொடங்கியது. ஆழ்ந்த சிந்தனையின் முடிவில், நீண்ட தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தேன். திருவில்லிபுத்தூர் சர்ச் சுற்றுச் சுவரில் “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்". என்றது வாசகம். ஏதோ நம்பிக்கையில் இதை வாசித்து கடக்கிறார்கள் பயணிகள். எனக்கான நிறுத்தம் இன்னும் வரவில்லை. மீண்டும் ஆழ்ந்த சிந்தனை, நீண்ட தூக்கம். ஆனால் பயணம் மட்டும் தொடர்கிறது.