...

0 views

கீதாவின் மர்மம்
அத்தியாயம் 7

வர்மா கூறுவதை கேட்ட கதிர் கண்டிப்பா நீ போகத் தான் போறியா என மனம் தாங்காமல் கேட்க, ஆமாம் கதிர் இதுல இன்னும் சிலர் நமக்குத் தேவை படுவாங்க அவங்களை எப்படி கண்டு பிடிக்கப் போற எனக் கேட்கக் கதிர் நீ கவலை படாத  எனக் கூறி விட்டு நான் எல்லாமே எடுத்து வச்சி இருக்கேன் நீ ஒரு தடவை பார்த்து விட்டுச் சொல்லு எனக் கேக்க சரியென வர்மா கூற சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் ரம்யா பேசத் தொடங்கினால், வர்மா நானும் எங்க தாத்தா வீட்டுக்குப் போகணும் எனக் கூற கதிர் இல்ல வேணாம் ரம்யா உன்னைப் பார்க்க உங்க மாமா இங்க வாரங்க அவர் என்ன சொல்லப் போகிறாரெனச் சற்று குழப்பம் கொண்டு வர்மா வைப்பார்க்க நான் தான் பார்க்க வரச் சொன்னேன் என வர்மா கூறினான் உள்ளே இருந்த ஜூலி வர்மா பாஸ் என அழைத்துக் கொண்டு வர அவன் என்ன என்று கேட்கவில்லை பாஸ் நீங்கச் சொன்ன மாதிரி நான் தேடி பார்த்தேன் அதுல இன்னும் சிலர் இருக்காங்க அதுல உங்க அப்பா க்கு சிலர் ஸ்கெட்ச் போட்டு இருக்காங்க எனக் கூற சற்று திகைத்துப் பார்த்து விட்டுச் சரி அதை எங்க அப்பா பாத்துபாங்கா சரியா நீ எனக்கு இன்னொரு உதவி செய்யணும் என வர்மா கேட்க என்ன பாஸ் நீங்க சொல்லுங்க ரம்யா க்கு உன்னோட சப்போர்ட் வேணும் அதுக்கு நீ உன்னோட இன்னொரு தங்கச்சி ஜெனி இருக்கா இல்ல அவ கிட்ட நீ தான் பேசணும் நீ தான் ரம்யா வுக்காகப் பேசணும் நீயே ஜெனி க்கு எல்லாமே புரோகிராம் பண்ணு முக்கியமா அவளுக்கு defence mode சேர்த்து விடு சரியா, ரம்யா உங்க மாமா இங்க வந்த அப்றம் நீ பேசிட்டு எப்பவவும் போல நீ சதீஷ் சுரேஷ் மூணு பேரும் காலேஜ் போங்க நான் பிரின்சிபால் கிட்ட பேசிவிட்டேன் நான் எக்ஸாம் அப்போ வந்துட்டு எழுதிட்டு வருவேன் சரியா கதிர் உனக்குச் சிவா ஜூலி ஜாக் எல்லோருக்கும்  என்ன என்ன வேலையென நல்லா தெரியும், சிவா உனக்கு இன்னொரு வேலை இங்க வா எனக் கூற நம்ம சுரேஷ கூட்டிட்டு அந்தச் சிஸ்டம் கிட்ட போய்க் கீதா பாத்திய எல்லாமே காட்டு  எனக் கூற சுரேஷ் ஒன்றும் புரியாமல் பார்க்க, சுரேஷ் கொஞ்ச பொறுமையா நீ அதைப் பாரு என வர்மா கூற சிவா வா நண்பா உனக்கு ஒரு குட்டி ஸ்டோரியெனக் காட்ட அதில் இருக்கும் கீதா வின் புகைப்படம் பார்த்து விட்டுத் திகைத்து விட்டான், அதில் கீதா இப்போது இருப்பது போல் இல்லாமல் இருக்க சற்று குழப்பம் கொண்டு அது எதுனா எடிட்டிங் ஆக இருக்குமோ எனக் கேட்க அப்படி எதும் இல்லை அவளும் பெரிய உளவாளி தான் அவா அந்தக் கும்பல் சேர்ந்தவ தானென வர்மா பின்னாடி இருந்து கூறினான் அவளுக்கும் தற்காப்பு கலை தெரியும் அன்னைக்கு உனக்கு முன்னாடி அவளை அடிக்க என்ன காரணம் தெரியுமா எனக் கேட்கச் சுரேஷ் தெரிய வில்லையெனத் தலை அசைக்க அன்னைக்கு அவ ஏதோ ஒரு காரணமாக ரம்யா வை அங்க கூட்டிட்டு வந்து அவளுக்கும் போதை மருந்தைக் கொடுக்கத் தான் ஏதாவது பிரச்சனை என்றால் அந்தக் கடை தான் மாட்டும் அப்படி போலீஸ் யிடம் அந்தக் கடை மற்றும் அந்தக் கடை உரிமையாளர் மாட்டி விட்டால் அவளுக்குத் தோது வான ஒரு நபர் அங்க கடை வைக்க முடியும் அதனால் தான் எனக்கு அன்னைக்கு மாலை நேரம் தெரிய வர நான் மட்டும் தனியா வந்த பிரச்சனை ஆகும் நான் போட்ட பிளான் படி சுரேஷ் வந்து நீ என்னைத் தேடுற எனக் கூறற நானும் வர மாதிரி வந்தேன் அன்னைக்கு ரம்யா மட்டும் அந்தப் போதை மருந்தா சாப்பிட்டு இருந்தா இந்நேரம் அவளோட லைப் ஹாஸ்பிடல் அப்றம் போலீஸ் என மாறி மாறி நடந்து இருக்கும் முக்கியமா இதுல ரம்யா சிக்கணும் அதுக்காகத் தான் கீதா இவ்ளோ நாள் அவளுக்கு நல்ல தோழி மாதிரி இருந்து இருக்க எனக் கூற ரம்யா சுரேஷ் சதீஷ் எல்லோரும் பயந்து போய்ப் பார்க்க அப்போ சுரேஷ் அவ என்னை லவ் பண்றேன் எனச் சொன்னது எனக் கேட்க வர்மா அதற்க்கு என்னைப் போட்டுத் தள்ளத் தானெனக் கூறினான் ஆனா ஒண்ணு சுரேஷ் நீ எங்க கூட அன்னைக்கு சண்டை மட்டும் போடாம போய் இருந்தா என்னால இதைக் கண்டு புடிச்சு இருக்க முடியாது நல்ல யோசிச்சு பாரு எனக் கேட்க, சதீஷ் சுரேஷ் என்ன நடந்தது என யோசித்து பார்த்தனர், அன்னைக்கு எல்லோரும் கல்லூரி முடித்து விட்டு வெளியில் செல்லும்போது சுரேஷ் நீ அவ கூடப் போறேன் எனச் சொன்ன ஆனா சதீஷ் நமக்காகக் காத்து கொண்டு இருக்கான் நாம அங்க போகணும் எனக் கூறினேன் ஆனா நீ இல்லை டா கீதா கூட வெளியில் போறேன் எனச் சொல்லிட்டு நீ போய் விட்ட ஆனா எனக்கும் சதீஷ் க்கும் நேரம் போகவில்லையென நானும் அந்தப் பார்க் பக்கம் நடந்து வந்தோம் நீ அந்த வி வோச்சி மைதானம் பக்கம் இருந்த ஸ்ட்ரீட் ஃபுட் லைன் ல நின்னு சாப்பிட்டு இருந்த நீ எங்க போற என எனக்கும் தெரியாது நாங்க எங்க போறோம் என உனக்கும் தெரியாது ஆனா நீ நாங்க உண்ண தான் பாலோ பண்றோம் என அந்தக் கீதா சொல்றதை கேட்டு எங்க கிட்ட சண்டை போட்ட ஆனா நாங்க சொல்ல வரதை கூடக் கேட்க உனக்கு நேரம் இல்ல அப்போ தான் அவா வச்சி இருந்த பேக் யைப்பார்த்தேன் அதுல ஏதோ வித்தியாசமா இருந்துச்சு அப்போ சதீஷ் க்கு தெரியாம அதைப் போட்டோ எடுத்தேன் நீ ஒரு ஓரமா நின்னு லூசு மாதிரி அவ கையில் இருந்த எல்லாத்தையும் தின்னுட்டு இருந்த, அப்போ உங்களை ஒருதன் ஓரசிட்டு போனான் அப்போ கூட நீ கண்டுக்காம இருந்த அவன் போன அப்றம் கீதா பையில இருந்த அந்த வெள்ளை கலர் பைகயைக்  காணோம் சதீஷ் ஆர்டர் பண்ணிட்டு இருந்தான் நான் கொஞ்ச இரு எனச் சொல்லிட்டு அவனைத் தேடி போனேன் அவன் பின்னாடி யேப்போய் என்ன தான் பண்றானெனப் பார்க்க அதைக் கையில கொஞ்சமா தட்டித்து மூக்கு கிட்ட வச்சுட்டு சுருண்டு விழுந்துட்டான் அப்பறம் கிட்ட போய் அவன் கிட்ட இருந்த ஒரு வாசனை எனக்குத் தெளிவா தெரிஞ்சுது அது டத்துரா என அது ஒரு போதை மருந்து அது எல்லோருக்கும் சீக்கிரம் கிடைக்காது ஆனா கீதா கையில எப்படியென என்ன யோசிக்க வச்சுது அன்னைக்கு ஆரமிச்சது அந்த வேட்டை இன்னைக்கு இங்க வந்து இருக்கு என வர்மா கூறி முடிக்கச் சுற்றி இருந்த எல்லோரும் வாய் மூடி அமைதியாக இருந்தனர். அன்னைக்கு அந்தக் கீதா கொடுத்த அந்த மருந்த எப்படி யூஸ் பண்ண தெரியாம அந்தப் பையன் மூக்கு கிட்ட வச்சு இழுக்க அவன் அப்புறம் கோமா க்கே  போய் விட்டானெனக் கூட ரம்யா திகைத்து நின்று கொண்டு இருந்தால் வர்மா கூறுவதை கேட்கத் தான் இத்தனை நாட்கள் தோழியென நினைத்தவள் ஒரு போதை மருந்து விற்பனை செய்பவள் ஆக இருந்து இருக்கிறாளெனத் தெரிய வரச் சற்று மனம் உடைந்து அழுக தொடங்கினால், ரம்யா அழுவதை பார்த்த ஜூலி அண்ணி கண்ணீர் சிந்தகாதீங்க எனக் கூறி அவள் கண்களைத் தான் ரோபோ கரங்களால் துடைத்து விட்டால்,  வர்மா ரம்யா வைப்பார்த்து ரம்யா நீ எப்பவவும் போலக் காலேஜ்  போகணும் எந்தச் சந்தேகமும் வரக் கூடாது நாளைக்கு காலேஜ் ல என்னைக் காலேஜ் விட்டு நிப்பாட்டி விட்டதாகத் தான் செய்தி வரும் எக்ஸாம் மட்டும் எழுத அனுமதி மட்டும் செய்தி வரும் நான் எல்லாமே பார்த்துக் கொள்கிறேன் நீ கொஞ்ச நடிக்கக் கத்துக்க எனக் கூறி விட்டுச் சுரேஷ் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு டா என்ன பத்தி உன் கிட்ட தான் அந்தக் கீதா கேட்பா நீ அதுக்கு என்ன சொல்ற தெரியுமா அவன் அவங்க ஆசிரமம் ல இருந்த ஒரு பாதர் கூட இருக்க போறேன் எனக் கூறிவிட்டு ராம்நாடு சென்று விட்டானென மட்டும் சொல்லிடு டா என வர்மா கூற சுரேஷ் சம்மதித்தான், கீதா கிட்ட நீ ஜாக்கிரதை யா இருடா சரியா என வர்மா கூறினான், அதற்க்கு சுரேஷ் அப்போ என்னோட இத்தனை நாள் காதல் எல்லாமே ஒரு நாடகாமா எனச் சுரேஷ் கலங்கிய வாறே கேட்டான், சதீஷ் அவன் அருகில் வந்து ஆறுதல் கூறி விட்டு டேய் நீ ஒரு விஷயம் மறந்துட்ட டா அதை எப்படி நீ மறந்த எனச் சதீஷ் கூற என்ன எனத் தெரியாமல் சுரேஷ் முழித்தான் அதற்க்கு சதீஷ் டேய் லூசு அன்னைக்கு அவா கையில ஒரு ஆப்பிள் மொபைல் பாத்த எனச் சொன்ன ஆனா நீ மெசேஜ் பண்ணா அவ கிட்ட இருக்கிற இன்னொரு மொபைல் ல இருந்து தானே மெசேஜ் செஞ்சா எனச் சொன்ன அதுக்கு என்ன டா எனச் சுரேஷ் கேட்க நல்லா யோசிச்சு பாரு அந்த ஆப்பிள் மொபைல் யாரோடாது எனக் கேட்க அவள் சொன்ன பதில் என்ன என நியாபகம் இருக்கா எனச் சதீஷ் கேட்டான் அதற்க்கு தலையைத் தேய்த்த வாறே ஆமா டா ரம்யா ரூம் மேட் காவ்யா மொபைல் எனக் கூற ரம்யா பின்னாடி இருந்து காவ்யா வா அப்படி யாரும் எங்க ஹாஸ்டல் ல இல்லையேயெனக் கூற எல்லோரும் திகைத்து ரம்யா வைப்பார்த்தனர். அடுத்து என்ன நடக்கும் 
© அருள்மொழி வேந்தன்