...

7 views

காரணம் - வயது 🦋
❌யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. இக்கதை முழுவதும் கற்பனையே. ❌



என்னுடைய நண்பன் பெயர்
லோகேஷ். அவன் அவனை விட இரண்டு வயது அதிகமுடைய பெண்னை காதலித்தான்.அதை பலமுறை என்னிடம் கூறியுள்ளான்.
நானும் அதை ஊக்குவித்து வந்தேன். பெண்கள் அவர்களை விட அதிக வயதுடைய ஆண்களை திருமணம் செய்யும் போது, ஆண்கள் அதிக வயதுடைய பெண்னை காதலிக்க கூடாதா?
இதுவும் இயற்கையே🥀

ஒரு நாள் காலை லோகேஷ் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் காதலை சொல்லியே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான். அந்த இரண்டு வயது அதிகமுடைய பெண் தன் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள். லோகேஷும் அவளிடம் போனான். தன் காதலை அவளிடம் கூறினான். அந்த அதிக வயது பெண் அவனிடம் தம்பி என மூன்று எழுத்துகளால் முழுவதையும் முடித்து விட்டாள்.
காதலில் வெற்றி தோல்வி சக்ஜாம் தான்🦋

அந்த சம்பவம் நடந்த தினத்தன்று இரவு லோகேஷ் காதலையும், காதல் செய்யும் மனிதர்களையும் நன்கு வசைபாடி கொண்டிருந்தான் 😅

ஆனால் லோகேஷ் காதல் முறிந்ததற்கு வயதும் ஒரு காரணம் என்பதில் தான் எனக்கு வருத்தம். ஏனென்றால் நானும் என்னைவிட அதிக வயதுடைய பெண்னை காதலிக்கிறேன் 🙂😂
-மனோ


நன்றி மனமிருந்தால் பகிர்வும்❗


© ManoMutant