...

5 views

மாயை பேசுதடா 2
கிச்சன் கேமராவை பார்த்து மயங்கி விழுந்த பூபதி சிறிது நேரம் கழித்து எழுந்தான் .

மயக்கம் தெளிந்து மீண்டும்  கேமராவை ஆன் செய்து பார்த்தால்  "பாத்திரங்கள் தானாய் நகர்கின்றது. குடத்தில் இருக்கும் தண்ணீர்  பெரியப்  பானையில்  தானாகவே ஊற்றப் படுகிறது. வெங்காயம், தக்காளி இங்குமங்கும் பறக்கின்றன. "

௧டவுளே, இந்த வீட்டில் என்ன தான்  நடக்குது. ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை இதற்கு முன் இந்த வீட்டில் இருந்தவர்கள் இறந்து அவர்களின் ஆவி சுற்றுதோ..." என்று  புலம்பிக் கொண்டே  அன்று நாள் முழுவதும் பயத்துடனும், குழப்பத்துடனும் கடத்தினான்  பூபதி.

இன்று ராத்திரி கொஞ்சம் நேரம் கழித்து வீட்டிற்கு போகலாம். அப்போது தான் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும் என்று முடிவு எடுத்தான்
பூபதி.

நேரம் கழித்து வந்த பூபதி வீட்டு கதவை திறந்து பார்த்தான். வீட்டில் யாரும் இல்லை. ஆனால், பொருட்கள் கலைந்து இருந்தது. கிச்சனில் சாப்பாடு வேலை முடிவு பெறாமல் இருந்தது. வீட்டிற்குள் ரூம் ஸ்ப்ரே நறுமணத்தை உணர்ந்தான். உடனே, அவன் புதிதாக வீட்டிற்கு வாங்கிய ரூம் ஸ்ப்ரேவை தேடினான். அது கீழே உடைந்து கிடந்தது.

"என்ன நடக்குது. ஸ்ப்ரே ஓபன் பண்ணாமல் இருந்தது. ஆனால், இப்படி உடைந்து இருக்கிறது.சாி, கிச்சன் கேமராவை ஆன் பண்ணலாம்... " என்று  கேமராவை ஆன் செய்து பார்த்தான்.

அதில்,

கிச்சனிற்குள் ஏதோ கருப்பு உருவம் வேலை பாா்ப்பதை பார்த்தான். அங்கே இரண்டு சிறுவர்கள் ஸ்ப்ரே வைத்து விளையாடுகிறார்கள்.   சிறுவர்களின் உருவமும் சரியாக தெரியவில்லை. சில நொடிகளில்  அங்கிருந்த கருப்பு உருவம், சிறுவர்கள் அனைவரும் மறைந்து போனார்கள்.

இதை பார்த்த பூபதி, " அய்யோ, இதை பார்த்ததுமே வயிற்றில் புளிய கரைக்குதே." என்று தலை முடியை பிய்த்து கொண்டான்.

சரி, நாளை இரவு சீக்கிரமாக வரலாம்.
அப்போது தான் என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்து மறு நாள் மதியமே வந்து விட்டான்.

ராத்திரி வந்து விட்டது....

இவன் தூங்கவில்லை... திடீரென வீடு புகை மண்டலமாக சூழ்ந்தது. கடவுளே... கடவுளே..... தெய்வமே.... பயமாக இருக்கிறது. வெறும் புகையா தெரியுது...  இப்படியே ஓடி போயிடலாமா.... என்று கதவை திறக்க சென்றான்...

திடீரென்று ஒரு இனிமையான குரல்...

"நில்லுங்கள்.... "

அய்யோ... எனக்கு பயமாக இருக்கிறது... என்னை விட்டு விடுங்கள்... நான் ஓடிவிடுகிறன் என்று பூபதி கண்களை மூடிக் கொண்டு கதறினான்.

எங்களை பாருங்கள்.  நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று  மீண்டும் அதே இனிமையான குரல்.

அவன் கண்களை திறந்து பார்த்தால் புகை மண்டலத்திற்கு நடுவில்  "ஹஹஹஹா...."  என்ற சத்தத்துடன்  கேமராவில் பாா்த்த அதே கருப்பு உருவங்கள் தான் தெரிந்தது.  உடனே, மயங்கி விழுந்து விட்டான்.

மறுநாள் காலை,

கண் விழித்தவன் " என்ன ஒரு அதிசயம்,  எப்பவும் கிச்சன் மட்டும் சுத்தமா இருக்கும். இன்று பெட்ரூம் தவிர  கிச்சன் மற்றும் ஹால் இவ்வளவு சுத்தமா இருக்கு. அட, இங்குள்ள பொருட்களும் புதுசு போல இருக்குது... " என ஆச்சரியத்துடன்  தனக்குள்ளே பேசிக் கொண்டான்.

சரி,  இன்னைக்கு என்ன சாப்பாடு ரெடியா இருக்கும்... என ஆர்வத்துடன் கிச்சனிற்குள் சென்றான்.

அங்கே, எதுவும் சமைக்கவில்லை.
அனைத்துப் பாத்திரங்கள் இப்போது வாங்கியது போல் புதியதாக இருந்தது.

இதை பாா்த்தவனுக்கு ஒரே குழப்பம்.
"ஒரு நாள் வீடு அலங்கோலமா இருக்கு இன்னொரு நாள் வீடு புதுசு போல இருக்குது.  ஆனால், நேற்று நான் பேசும் சத்தம் கேட்டேனே.. வீடெல்லாம் புகையா  மாறியதை பார்த்தோமே. அட, உடைந்த ரூம் ஸ்ப்ரே கூட புதுசு மாதிரி இருக்குதே...." என்று  மண்டையை  குடைந்து கொண்டிருந்தான் பூபதி.

திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவை திறந்தவனுக்கு ஓா்  இன்ப அதிர்ச்சி....

அவனது மனைவி மற்றும் குழந்தை ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள்.
"அய்யய்யோ, இவர்கள் ஏன் வந்தார்கள். நம்மிடம் சொல்லவும் இல்லை. இனி எப்படி சமாளிக்க போகிறோம். இப்ப  நான் சந்தோஷப்படுவதா  இல்லை வருத்தப்படுவதா?...இங்கு நடப்பதை சொல்லிடலாமா வேண்டாமா?..."  என்று
எந்தவொரு உற்சாகம் இல்லாமல் அப்படியே நிற்கிறான் பூபதி..

மாயை தொடரும் ✍✍


© Ramyakathiravan