...

13 views

காதல் பயணம்-1
நம் கதாநாயகன் அஸ்வினுக்கு ராம்,தினேஷ் என்று இரு நண்பர்கள் உள்ளனர்.இவர்கள் மூவரும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் என்றும் பிரிந்ததே இல்லை. இதில்,தினேஷ் கனிஷ்கா என்ற பெண்ணை காதலித்து வந்தான்.இந்த அஸ்வின், ராம் இருவருக்கும் தெரியாது. ஏனென்றால்,அஸ்வினுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லாததால் இருவரிடத்திலும் மறைத்து விட்டான்.கல்லூரியிலும்,பேருந்திலும் அஸ்வின் அழகில் மயங்காத பெண்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அஸ்வினுக்கு கல்லூரியில் இறுதியாண்டு முதல் நாள் என்பதால் அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு எப்போதும் செல்லும் பேருந்திற்காகவும்,தன் நண்பர்களுக்காகவும் பேருந்து நிலையம் சென்று காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் இருவரும் வந்தனர். மூவரும் பேசி கொண்டிருக்கும் போது எப்போதும் செல்லும் பேருந்து வந்தது. மூவரும் ஏறினர். அஸ்வின் மற்றும் ராம் சேர்ந்து இருக்கையில் அமர்ந்தனர். கனிஷ்காவும்(தினேஷின் காதலி) அதே பேருந்தில் தான் வருவாள். எனவே,தினேஷ் கனிஷ்கா அமர்ந்திருக்கும் இருக்கையில் நின்று கொண்டு இருவரும் கண்களிலே பேசி கொண்டிருந்தனர்.

சந்தியாவுக்கு கல்லூரியில் முதலாமாண்டு முதல் நாள். எனவே,தன்னை அழகாக அலங்கரித்து கொண்டு அப்பாவிடம் சொல்லி விட்டு பேருந்து நிலையம் சென்றாள்.அங்கு கல்லூரியில் எப்படி நண்பர்கள் கிடைப்பார்கள்? கல்லூரி படிப்பு எப்படி செல்லுமோ?என நினைத்து கொண்டு நின்றாள்.அப்போது,அஸ்வின் எப்போதும் செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி பேருந்தின் நடுவில் சென்று நின்றாள்.

அஸ்வினும்,சந்தியாவும் பார்த்தார்களா?

அடுத்த பகுதியில் காண்போம்..........


_மனதின் காதலி