...

43 views

சூழும் மர்மங்கள்
மை இருட்டு வேலையில் ...காற்று கூட வெளியே வர அஞ்சும் மையான அமைதி....நாய்கள் எதனையோ எச்சரிப்பது போல் சத்தமிட்டன....அங்கே உள்ள ஒரு வீட்டில் கண்களில் நீர்தழும்ப முகம் வியர்த்து உடல் நடுங்கியவாறு கட்டிலுக்கு அடியில் ஒரு பெண்.அந்த அறையின் கதவு மெதுவாக திறந்தது . அவளின் இதயம் வேகமாக துடிக்க ஓர் காலடி சத்தம் அவள் இருக்கும் இடத்தை நோக்கி வருவதை உணர்ந்தாள்.... கண்களை மூடி கொண்டு வாயை கைகளால் மூடி பயத்தை கட்டுபடுத்திக் கொண்டாள்.அந்த காலடி சத்தம் திடீரென்று நின்றது . மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் . அங்கே ஒரு பெண்ணின் உருவம் தரைவரை நீண்ட முடி கருப்பு நிற உடை .பாதி எரிந்த உடல் .கையில் ஒரு கத்தி.அந்த உருவம் அக்கத்தியால் தன் கழுத்தைஅறுத்துக்கொண்டது.இதனைக் கண்ட அப்பெண் அலறிக்கொண்டு எழுந்தாள் ,சுற்றிமுற்றி பார்த்தாள் .கட்டிலின் மேல் படுக்கையில் இருந்தாள்.அத்தனையும் கனவு என்று பெரும் மூச்சி விட்டு அருகில் இருந்த மேசையில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுக்க முயலும் போது கை தவறி கீழே விழுந்தது.அதனை எடுக்க கீழே குணிந்தாள்.அங்கே கட்டிலின் அடியில் அவள் கனவில் பார்த்த பெண்ணின் சடலம் கிடந்தது.பயத்தில் உடல் முழுவதும் நடுங்கியது .கட்டிலிருந்து கீழே இறங்கி மெதுவாக சடலத்தை தொட கையை கொண்டு சென்றாள்.அவளின் இதயம் வேகமாக துடிக்க கண்களை மூடி கொண்டாள்.திடீறென்று அச்சடலம் பெண்ணின் கழுத்தை நெறித்தது.மூச்சு விடமுடியாமல் கைகளை விழக்க முயன்று அவள் தினறினாள் .அப்போது ஒரு குரல்,"மாயா ....மாயா.....ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்...மெதுவாகண்ண திறந்து பார்"
_மர்மங்கள் தொடரும்