ஸ்நான ப்ராப்தி(சிறுகதை)கவிஞர்,எழுத்தாளர்:மாசிலாமணி.
1985களில் காசியின் அகன்ற வீதி கங்கைக் கரையுடன் இணைந்து நீண்டு சென்றுகொண்டிருந்த காலம்.வரிசை மாறாத பழங்கால கோயில் மாடம் போன்ற வீடுகள்.எதிரேதான் அனைத்து ஜீவன்களின் பாபம் போக்கும் புண்ணியநதி கங்கை அமைதியாக தவழந்துகொண்டிருக்கிறாள்.இடையிடையே கோயிலுடன் கூடிய மயானப் படித்துறைகள் சடலங்களை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறது.
மென்மையான ஒரு குரல் மாடவீட்டிலிருந்து புண்ணியம் நாடி வந்த விருந்தினர்களின் காதில் விழாமல் இல்லை.அந்த வீதியில் அலமேலு பாட்டியை தெரியாத ஆளே இல்லை எனச் சொல்லலாம்.வருபவர்களுக்கு எல்லாம் இதிகாசப் புராணக் கதைகளைக்கூறி காசி பெருமை பேசியே வாழ்ந்து வருபவள்.பேரனை
அப்பா மஹாதேவா,இங்க சித்த வாப்பா என்றாள்.மஹாதேவன் புலம்பியபடியே வார்த்தை கொஞ்சம் அழுத்தமாக என்ன பாட்டி,சொல்றதை சொல்லு என்றான்.
இப்ப என்ன செய்யப் போற.
குளிக்கப்போறேன்.சித்த பொறுஎன்றாள்.
சிறிய வீடுதான் என்றாலும் வீட்டின் நடுவில் முற்றம்.அதன் ஈசான மூலையில் கிணறு ஒன்று உண்டு.இது காசியில் சாத்தியம்தான்.
பாட்டி பேச்சைத் தொடர்ந்தாள்.
அகத்துக்குள்ளேயே எத்தனை நாளைக்குத்தான்குளிச்சிண்டிருப்பே.
வருஷம் முப்பது கடந்தாச்சு.சின்ன வயசுல ஐஞ்சாறு முறை கங்கையில குளிக்க வச்சிருக்கேன்.அதுக்கப்பறம் கங்கையில ஸ்நானம்
செஞ்சிருப்பியா.உங்கம்மாவாவது சொல்லப்படாது.
அடுப்பங்கரையிலிருந்து ஒரு குரல்.
நான் சொன்னா எங்க அவன் கேக்கறான்.உங்க செல்லப் பேரானாச்சே என்றாள் மென்மையான குரலில் மங்களம்.
சரி.நான் பாத்துக்கரேன்.உன் வேலையப் பாரு என்றாள் மருமகளிடம் பாட்டி.
யப்பா,குழந்தை மஹாதேவா ஊர்லேர்ந்து பெரியப்பாவும் பெரியம்மாவும் கங்கை ஸ்நானம் செய்ய வந்துருக்கா.என் பையனோ காசி மடத்துல குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க போயிருக்கான்.உங்க அக்கா தையல் வேலையா இருக்கா.தங்கை பரீட்சைன்னு படிச்சிண்டிருக்கா.உன் தம்பியோ அப்பாகூடவே படிக்கப் போயிருக்கான்.நீ சித்த இவாள அழைச்சிண்டு இன்னைக்காவது கங்கையில நீயும் குளிச்சி வந்தவாளையும் ஸ்நானம் செஞ்சிவச்சி அழைச்சுண்டு வரப்படாதா என்றாள் பாட்டி.
என்ன பாட்டி உனக்கு தெரியாத மாதிரி பேசற.இறந்தவா சடலத்தை எரிச்சி சாம்பலையும் எலும்பையும் கங்கையில கரைக்கிறா.
வியாதியஸ்தரும் குளிக்கறா.
தூய்மை இல்லைங்கறதுனாலதானே நான் கங்கையில குளிக்கப் போறதே இல்லை என்றான்.
பாட்டி பேரனுக்கு புரியவைக்கத் தலைப்பட்டாள்.ஏம்பா குழந்தை மஹாதேவா எத்தனையோ பேர் உலகத்துல எங்கெங்கிருந்
தெல்லாமோ புண்ணியத்தைத்தேடி வந்து ஸ்நானம் செய்யறா.
கங்கை பக்கத்துல இருந்தும் உனக்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லைன்னு சொல்லமாட்டா.நீ சின்ன வயசில இருக்கும்போது எல்லா பசங்களோட சேர்ந்து கதை கேட்ப.நான்கூட சொல்லிருக்கேன்,நம்பிக்கையோட கங்கையில ஸ்நானம் செஞ்சா பாவம் மட்டுமல்ல நோயும் போகும்னு.நீயும் தலையாட்டிண்டு என்னோட வந்து ஸ்நானம் செஞ்ச.இப்ப என்ன வந்தது உனக்கு.இததான் வெளிநாட்டுக்
காரன் வந்து கங்கைத் தண்ணிய ஆய்வு செஞ்சி இத்தனை அழுக்குகளையும் சுமக்கிற கங்கை இப்பவும் தூய்மையா இருக்கு.
அதுக்குக் காரணம் கங்கைத்
தண்ணில இருக்கிற பாக்டீரியாதான் காரணம்னு சொன்னான் என்றாள்.
சரி,பாட்டி,இப்ப என்னபெரியப்பா,பெரியம்மாவை ஸ்நானம் செஞ்சிவச்சி அழைச்சுண்டு வரணும் அவ்வளவுதானே.இதோ கிளம்பிட்டேன்.அங்கேயே நானும் குளிச்சிக்கிறேன் என்றான். போறதுதான் போற இதையும் கேட்டுண்டு போயிட்டுவா.கால பைரவர் காட் அழைச்சிண்டு போ.அங்கதான் சித்தர்களும் மஹான்களும் சாதுக்களும் ஸ்நானம் செஞ்சி தியானம் பண்ணிண்டிருப்பா
உங்கள அவா. கண்டுக்கமாட்டா,நீ அவாள தொந்தரவு பண்ணாம போயிட்டு வா என்றாள்.
அப்படியே செய்யறேன் எனக் கூறியபடியே இருவரையும் அழைத்துக்கொண்டு பைரவரின் சிறு கோயிலை அடுத்த படித்துறையை நெருங்கினான்.இருபதுக்கும் மேற்பட்ட படிகளோடு இருபக்கமும் குவி மாடங்களைக்கொண்டு நெடிய படித்துறையுடன் அமைதியான சாதுக்களோடு கங்கை தூய்மையாகக் காட்சியளிக்க மஹாதேவனுக்கு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்தது.பாட்டி சொன்னது போல் இவர்களை மஹான்கள் கண்டுகொள்ளவே இல்லை.மாடங்களில் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருந்தனர்.ஒரு மாடத்தில் உள்ள சிறு குடில் போன்ற கோயிலில் சிவன் அரூபரூபமாக லிங்க வடிவில் காட்சி தருகிறான்.
இன்னொரு மாடக் கோயிலில் முதலும் கடைசியுமாக கைலாசமலை
ஏறிய மிலரேப்பா என்ற சித்தஞானி பல நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் இங்கே தவம் செய்துகொண்டிருப்பதாகவும் மூடிய கதவின் மேற்புறத்தில் பண்டைய எழுத்தில் "எவர் ஒருவர் பாபம் அற்றவரோ"அவரே சித்தரை தரிசிக்க முடியும் என எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டபொழுது பாட்டியின் குரல் திரும்பவும் காதை வருடியது போலிருந்தது.இதைக் கண்டதும் ஒரு முடிவுடன் கங்கையில் மூழ்கினான்.கங்கையின் ஆழத்தில் ஒரு சித்தர் தியானித்திருப்பதைக் கண்டு ஆச்சர்யம்.தண்ணீரிலிருந்து தலையை மேலெழுப்பியவன் பெரியப்பா,பெரியம்மாவிடம் மெதுவாக விவரித்து வினவினான்.அவர்கள் தங்களுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றனர்.இருப்பினும் இப்பொழுது நாங்களும் கவனத்துடன் மூழ்குகிறோம் என்று மூவரும் கங்கையில் மூழ்க்கி எழுந்தனர்.ஆனால் மூன்று நிமிடம் கழித்து மஹாதேவன் தலை கங்கையிலிருந்து மேலெழுந்தது.இப்பொழுதும் அவர்களுக்கு தென்படவில்லை.மஹாதேவன் இம்முறை பேசவில்லை கரை ஏறியவன் பல்லாண்டுகளாய் மூடியிருந்த மாடக் கோயிலின் வாசற்படியில் தலை வைத்து வணங்கினான்.என்ன ஆச்சர்யம் கதவு மெல்ல திறக்க உள்ளிருந்து உள்ளே வா மஹாதேவா என்றதும் உள்ளே சென்றவன்தான்.கதவு தானாக மூடிக்கொண்டது.
அங்கிருந்த ஞானிகளுக்கும் யோகிகளுக்கு மட்டுமல்ல பெரியப்பா
மற்றும் பெரியம்மாவுடன் நின்றிருந்த சிலரும் இமை மூடாமல் பார்த்த
வண்ணம் இருந்தனர்.இதை கேள்வியுற்ற இன்னும் சிலருடன் மஹாதேவனின் குடும்பமும் அம்மாடக் கோயிலின் படியில் தலை வைத்து வணங்கினர்.மூடிய கதவு திறக்கவே இல்லை.சில சாதுக்கள் கதவை தள்ளிப் பார்த்தனர்.முயன்றும் முடியவில்லை.அனைவரும் படித்துறையில் அமர்ந்து கதவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க பாட்டி உருத்திராட்ச மாலையில் ஜெபம் செய்து கொண்டிருந்தாள்.
அதற்குள் ஐந்து மணி நேரம் கடந்துவிட்டிருந்தது.இப்பொழுது கதவு மெல்ல திறக்க விபூதி மணத்துடன் மஹாதேவன் வெளியில் வர மீண்டும் கதவு மூடிக்கொண்டது.
நடந்து வந்தவனை அனைவரும் வினவ ஆரம்பித்தனர்.ஆனால் ஏதும் பேசாமல் மெல்ல நடை பயின்றான்.பாட்டி மட்டும் அவன் கையைப் பிடித்து எப்படிப்பா இது நடந்தது என்றாள்.மஹாதேவன் புன்னகைத்தபடியே மெல்லிய குரலில் நீதானே பாட்டி கங்கையில் மூழ்கினால் பாபம் தொலைந்து புண்ணியனாகிவிடலாம்னு சொன்ன.அது ஞாபகத்துக்கு வந்து குளிக்கப் போனேன்.கங்கைக்குள்ள மஹாபுருஷர் மிலரேப்பாவைப் பார்த்தேன்.ஆனா அவரேதான் இந்த மாடக் கோயிலுக்குள்ளேயும் இருந்து எனக்கு ஞானோபதேசம் செஞ்சார்.அவர் கைலாச மலையின் பள்ளத்தாக்கிலும் வருடங்கள் பல கடந்து இன்னும் தியானத்துல இருப்பார்னு சொன்னியே அவரேதான் என்றான்.
பாட்டிக்கு கண்ணீர் வடிந்து
கொண்டிருக்க ஓர் உண்மை பேரொளியைத் தந்து சென்றது.அதை அங்குள்ளோரிடம் பகிர்ந்து
கொண்டாள்.எவர் ஒருவர் பாபம் அற்றவரோ அவருக்கு இந்த கோயில் வாயில் திறக்கும் என்று நாமல்லாம் அங்க எழுதுப்போட்டிருக்கிறதை படிச்சோமே தவிர,இப்புண்ணிய கங்கையில மூழ்கினாலே பாபம் போயிடும்கிற நம்பிக்கைய சிதைச்சிட்டு இன்னமும் பாபம் போகலைன்னு நம்பிக்கையற்றத் திராணியாகிட்டோம் என புலம்படியே கரையேற ஆரம்பித்தாள் பாட்டி.இப்பொழுதெல்லாம் மஹாதேவன் காலபைரவர் காட் படித்துறையே கதியென ஆகிவிட்டான்.பாட்டியோ பேரனையே துதிக்க ஆரம்பித்துவிட்டாள் கோயில் என ஒன்று இருப்பதையே மறந்து.
----------------சுபம்-----------------
© MASILAMANI(Mass)(yamee)