கண்ணாட்டியின் காதலன்
தனது கையிலிருந்த அலைப்பேசியை ஆட்டிய படியே, காதொலிப்பானில் கேட்டுக்கும் குரலுக்கு பதில் சொல்லி கட்டளையிட்டபடி தன் நண்பர்களுடன் இணைய வழியில் இணைந்(த்)து தான் ' ஃபிரீ ஃபயர்' கேம்மை விளையாடிக் கொண்டிருந்தான் வினித். நிசப்தமாக இந்த கூடத்தில் அவனது அரவத்தைத் தவிர வேற சப்தம் இல்லை.
தலையை அலைப்பேசிக்குள் திணித்து விட்டுத் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தான். அழைப்பு மணியோசையை கூட காதில் வாங்காதவாறு அலைப்பேசியில் அதிக சத்தத்துடன் விளையாடினான்.
இரண்டு மூணு முறை அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. அதை அடித்தடித்து ஓய்ந்து போனான் கிரி. கதவு திறந்து தானிருந்தது. ஆனாலும் உள்ளே போக சங்கட்டமாக இருந்தது. தன் நண்பனுக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிருக்கும் பட்சத்தில் சற்று உரிமையுடன் செல்ல முடியவில்லை. கதவை தட்டிப் பார்த்தான்." வினித் "என்று மூன்று முறை அழைத்தும் பார்த்தான்.அவனை உள்ளே அழைக்க யாருமில்லை.
அது மாலை ஏழு மணி, வேலை விஷயமாக அந்தப் பக்கம் வந்தவன் இவனை பார்த்துவிட்டு போலாம் என்று எண்ணி தான் வந்தான். அதுவும் அவனிடம் ஐந்து மணிக்கெல்லாம் பெர்மிஷன் கேட்டு விட்டான். முதலில் வெளியே பார்க்கலாம் என்று கிரி சொன்னான். வினித் தான் தடுத்து வீட்டுக்கு வர சொன்னான். ஆனால் அதையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
'ஒருவேளை இந்த டைத்துலே ரொமான்ஸ்ஸ ஆரம்பிச்சிருப்பானோ ! கதவை பூட்டாமலா? ஒருவேள அவன் இல்லையோ !' என்று வாசலைப் பார்க்க, அங்கே நின்ற வண்டி அவன் இருப்பைக் காட்டியது.
"சரி மாப்பிள ரொமான்ஸ்ல இருப்பான் போல. நாம இன்னொரு நாள் வருவோம்" செல்ல இருந்தவனின் காதில் வினித்தின் கத்தல் கேட்டது."மச்சான், அவனை சுடு டா !" உணர்ச்சி வசத்தில் அவன் கத்த, கிரி தான், "எதே சுடணுமா?" என்று உள்ளே நுழைய, அங்கே நீள்விருக்கையில் தீவிரமா விளையாடி கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்தவன், கொலைவெறியானான்.
"இந்நேரம் சிஸ்டர் கூட பேசி, சிரிச்சி ரொமான்ஸ் பண்ணி குழந்தைக்கு ட்ரை பண்ணாம, குழந்தை மாதிரி விளையாட்டிட்டு இருக்கான்" என்று தலையில் அடித்து கொண்டவன். அவன் அருகே சென்று "மச்சான்" என்று தோளைத் தொட, பக்கென்று பதறி அமர்ந்தான் வினித்.
"டேய் நான் தான்டா ! "என்றான்.
"ஏய் மச்சான் ! வா டா ! "என்று அவனை அருகே அமர வைத்து, செல்போனைத் தூர வைத்தான். "என்ன மச்சி, வீட்டுக்கு ஆள் வந்ததுக் கூட தெரியாம, அப்படி என்ன விளையாட்டு உனக்கு?"
"இல்லடா கிரி ! நம்ம ஃபிரண்ட்ஸ் தான் ஆன்லைன்ல விளையாடலாம் 'வாடா' கூப்பிட்டானுங்க சரி நாமலும் விளையாடலாம் தான் ' ஃபிரீ ஃபயர்' கேம் விளையாட்டிட்டு இருந்தேன். இன்டெர்ஸ்ட் போயிட்டு இருந்துச்சி மச்சான், அதான் டா உன்னை கவனிக்கல !" என்று காரணத்தை சொன்னான்."ஏன் மச்சி வீட்ல சிஸ்டர் இல்லையோ?" வீட்டை விழியால் அலசிப்பார்த்து விட்டுக் கேட்டான்.
"ம்ம்ம்... உள்ள இருக்கா டா ! " என்றான். அவனை ஒரு மாதிரி பார்த்தவன், "உனக்கு மேரேஜ் ஆகிடுச்சி டா, சிஸ்டரோட டைம் ஸ்பென்ட் பண்ணாம,
இன்னமும் குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்க !"
இது போல் பலர் சொல்லி கேட்டு அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. கல்யாணமான ஆண்கள் பெண்களிடம் சொல்லும் அதிக அறிவுரைகளில் இதுவும் ஒன்று. கணவன் மனைவியுடனும் மனைவி கணவுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பது. எவ்வளவு நேரத்தை தான் அவர்களுக்கு செலவிட 'எப்போது தான் தங்களுக்காக செலவிட ?'என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கார்கள்.
'கணவன் மனைவி என்று வந்தபின் தனியாக நேரத்தை செலவழிக்க என்ன இருக்கறதென்று?'கேள்வி வேறு. இவர்களை கண்டாலே ஆத்திரம் தான் வரும்.
"வா மச்சி ! காஃபி சாப்பிட்டு கிட்டே...