...

15 views

காதலோவியம்
வெள்ளை காகிதம் அவன் விரல் தீண்ட தவம் கிடக்க, அவன் விரல்களோ அவளை தீண்ட,  துறுதுறுவென எறும்பை போல அவள் மேனியில்  அலைய , அளந்த அங்கங்களை  மீண்டும் மீண்டும் அளக்க, வண்ணம் தீட்டி முடித்த  ஓவியத்தை  மேலும்  மேலும் மெருகேற்ற  இருப்பவனின் விரலுக்கு தடா சட்டம்  போட்டது போல, அவன் தீண்ட வரும் விரலை தட்டிவிட்டு,  அவன் கைக்குள் அகப்படாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறாள்.

அவளாடையைப் போல் அவளது இந்தப் போக்கும் சற்று கடுப்பை தர, கோபமெனும் வர்(ண்)ணத்தை முகத்தில் குழைத்து கொண்டு அமர்ந்து விட்டான்.

அவனது  செக்கரை வதனமும் காதல் நிறத்தை  நினைவூட்ட,  ரசித்த மடந்தைக்குள் அத்தனை அழுத்தம். தினமும் இரவில் ராகம் பாடும் அவள் கொலுசு, தன்னை நோக்கி ராகம் பாடிக் கொண்டு வர, வெள்ளை கொடிக் காட்ட வருகிறாள் என்று இதழ்கடையோரம் எட்டிப் பார்த்தது சிறு மூரல்.

ஆனால் அந்த அழுத்தகாரியோ, அவனெதிரே மரக்கிளையில் அமர்ந்து  காலாட்டி, கொலுசால் இசையை மீட்டிய படி அவனது செங்குருதியை சூடேற்றிக் கொண்டிருந்தாள். அவளை முறைத்து விட்டு, முகத்தை திருப்பிக்  கொண்டான்.

"ஓவியரே ! என்ன கோபமா?  என்னை பார்க்காம முகத்தை திருப்பிக்கிறீங்க ?" சிரிப்பை  அடக்கிய படி, அவனை...