...

3 views

மெல்லிய முனகல் !!
ஒரு தொந்தரவும் தராத ,

நல்லதொரு

கிராமத்தினருகில் ,


அடர்த்தியான ஒரு மாந்தோப்பிலுள்ள ,

ஒரு மாமரத்தின் கிளையில்

அழகான ,

ஒரு பறவை , சுமாரான ஒரு கூடுகட்டி சுகமாக வாழ்ந்து வந்தது !

அந்தப் பறவைக் கூட்டில் தினம் ,

ஒரு மின்மினிப் பூச்சி வெளிச்சம் தந்து கொண்டிருந்தது !

எனவே,

அந்த பறவையின் கூடு,
ஒரு இரவு கூட ,
இருளாய் இருந்ததில்லை !

இப்படியே நாட்கள் நகர்ந்தன !

பறவைக்கு வயதாகி விட்டது !

முன்பு போல ,

வெளியில் போவதும் கிடையாது !

கூட்டுக்குள் வெளிச்சமும் கிடையாது !

இருளும் தனிமையும் அதை சூழ்ந்திருந்தன !

கூட்டுக்கு அருகில் கிடைக்கும் , சிறுசிறு

பூச்சிகள் போதிய வலிமையைத் தரவில்லை !

ஆகவே,
வலுவிழந்து ,

உடல் மெலிந்து,

படுத்தப்படுக்கையாகக் கிடந்தது - !

ஆபத்துக்கு உதவ அக்கம் பக்கம் யாருமில்லை !

வறண்ட தொண்டையில் சத்தம் அடங்கி விட்டிருந்த நிலையில் ,

காலை வேளையில் ,
மாங்கிளையின் இலையில் ,
சொட்டும் பனித்துளி ,

ஆறுதலை தந்து, உயிராய் ஓடிக்கொண்டிருந்தது !

காலம் வந்தால் போய்ச் சேரலாம் - எனக் காத்துக்கொண்டிருந்த ,

நேரம் ,

பூ வைத்தது மாமரம் !
அதைத் தொடர்ந்து ,


தேனீக்கள் வந்தன !
கிளிகளும் வந்தன !

அதனால், ஒரு மெல்லிய ரிதம் , மாமரத்தைச் சுற்றி ஒலிக்கத் தொடங்கியது !

ஒரு பேரழகு புயல் வசந்தமாய்
வீசியது !

அந்த வசந்த புயலில் - அந்தப் பறவைப் பரவசமாகி -மிதந்து -மிதந்து -

ஆனந்த மோட்ச பதவி அடைந்தது !

முற்றும் .

நீதி:

மின்மினி பூச்சி பட்ட கஷ்டத்தைப் போல,

வாழ்வு கஷ்டபடுத்தும் - என்றாலும் ,

இளமை உள்ளபோதே , கடவுளுக்கு அஞ்சி ,
பணிவோடு வாழ் !


© s lucas