...

9 views

மாதவிடாய்

© நாவல்

[#மாதவிடாய்# part 1

தன்னுடைய நண்பர்கள் உடன் விளையாடிக் கொண்டிருந்தாள் கேத்திரின்
அப்போதுதான் வலியும், வேதனையும் நிறைந்த பெண் என்ற வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள் கேத்திரின்
ஆம் அவள் வயதுக்கு வந்து விட்டாள்

கேத்திரின் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கான சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா என்று அவள் வீடே கலகலப்பாக இருந்தது

எல்லா சடங்குகளும் முடிந்து பள்ளிக்கு சென்றாள் கேத்திரின் அப்போதுதான் பள்ளியில் அவளுக்கு அடி வயிற்றில் ஊசியை வைத்து குத்துவது போல் இருந்தது தன்னுடைய காலில் இரண்டு தொடைகளும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது
அதுதான் கேத்திரின்க்கு முதல் மாதம் மாதவிடாய்
பள்ளியில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள் கேத்திரின்
பின் தன் அம்மாவிடம் வயிறு ரொம்ப வலிக்கிறது என்று சொன்னாள்
இதுதான் மா மாதவிடாய் இனிமேல் நீ வாழ போகும் ஒவ்வொரு மாதமும் இந்த வலியை தாண்டி தான் நீ செல்ல வேண்டும் என்று கேத்திரின்க்கு அவள் அம்மா ஆறுதல் கூறி
(நாப்கின்) எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி குடுத்தாள்.

மறுநாள் காலை கேத்திரின் வீட்டில் அனைவரும் பூஜை அறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்
அப்போது கேத்திரினும் பூஜை அறைக்குள் நுழைய வந்தாள்

அவள் அம்மா கேத்திரின்னை தடுத்து நிறுத்தி இப்பொழுது நீ பூஜை அறைக்குள் வர கூடாது என்று கூறினாள்

நான் ஏன் வர கூடாது என்று கேத்திரின் திரும்ப கேள்வி கேட்டாள்

மாதவிடாய் நாட்கள் முடியாமல் நீ கோவிலுக்கோ, பூஜை அறைக்கோ செல்ல கூடாது என்று கேத்திரின்க்கு அவள் அம்மா தெளிவாக எடுத்து கூறினாள்

கேத்திரின் எதுவும் பேசாமல் சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள்

பாவம் கேத்திரின் அப்போது அவளுக்கு வயது 14 தான்
அப்போதுதான் கேத்திரின் மனதில் ஒரு கேள்வி எழும்பியது
நான் வயதுக்கு வருவதற்கு முன் நினைத்ததை சாப்பிட்டேன்
நினைத்த இடத்திற்கு சென்றேன்
பல நாட்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு இருக்கிறேன்.
ஆனால் இன்று நான் வயதுக்கு வந்து எனக்கு முதல் மாதவிடாய் ஆன உடன் என் வீட்டின் பூஜை அறைக்கே செல்ல கூடாது என்கிறார்கள்.
மாதவிடாய் காலத்தில் நான் பூஜை அறைக்குள் வருவது தீட்டு, தப்பு என்றால்
அந்த தப்பை பூஜை அறையில் இருக்கும் அந்த கடவுளே எதுக்கு எங்களுக்கு வலி நிறைந்த வாழ்க்கையாக இந்த மாதவிடாயை குடுக்க வேண்டும்
என்று தன் மனதுக்குள் முதல் கேள்வியை விதையாக விதைத்தாள் கேத்திரின்.

அவளுடைய இந்த கேள்விகள் அவளின் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்று அப்போது அவளுக்கு தெரியாது.

காலங்கள் ஓடியது
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு
சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது கேத்திரின்க்கு.

தன்னுடைய குடும்பத்தை விட்டு முதல் முறையாக தனியாக தன் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைக்க
திருச்சியில் இருந்து சென்னைக்கு கிளாம்பினாள் கேத்திரின்.

பல மூட நம்பிக்கையும், ஒழுங்கற்ற மனிதனின் செயல்களையும் சமூகத்திலிருந்து புரட்டி போடப்போவது இந்த ஒற்றை பெண் கேத்திரின் தான் என்பது அப்போது அவளுக்கே தெரியாது!!!!

(ஒரு பெண்ணின் இயற்கை உபாதையை கேளி செய்து சீண்டினால் என்ன நடக்கும் என்பதை கேத்திரின் கோபத்தின் மூலம் சென்னையில் பார்ப்போம்,,,,,)

[#மாதவிடாய்# part 2

அதிக கனவுகளுடன் பஸ்ஸில் இருந்து சென்னையில் இறங்கினாள் கேத்திரின்

கேத்திரின்னை அழைத்து செல்ல அவளின் தோழி நிஷா பேருந்து நிலையத்தில் காத்திருருந்து அவள் தங்கியிருக்கும் அறைக்கு கேத்திரின்னை அழைத்து சென்றாள்

அறைக்கு வந்ததும் குளித்து தயாராகி அந்த தொலைக்காட்சி நிருவனத்திற்கு சென்று வேலையில் சேர்ந்தாள் கேத்திரின்

வாழ்க்கையில் நாட்கள் நன்றாக தான் சென்றது

கேத்திரின் வாழ்க்கையை திருப்பி போடும் அந்த சம்பம் நடக்கும் நாள் வந்தது

தன்னுடைய வேலையை முடித்துவிட்டு தன் தோழி நிஷாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் கேத்திரின்
வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கோவிலுக்கு போய்ட்டு வீட்டிற்கு போவோம் என்று நிஷா சொன்னாள்

கேத்திரின்னும் சரி என்று சொல்லி விட்டு நிஷாவுடன் கோவிலுக்கு சென்றாள்

இருவரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமியை கும்பிட்டனர்
அப்போது தான் கேத்திரின்க்கு மாதவிடாய் அந்த கோவிலுக்குள்ளயே ஏற்பட்டது

அதை அருகில் இருந்த இன்னோர் பெண் பார்த்துவிட்டு முதலில் கோவிலில் இருந்து வெளியே போ மா என்று கேத்திரின்னிடம் சொன்னாள்
அப்போது தான் கேத்திரின்க்கு மாதவிடாய் ஏற்பட்டு இரத்தம் வெளியேறி அவளுடைய பேண்ட்டில் ஒட்டி இருப்பதை பார்க்கிறாள் நிஷா
சீக்கிரம் வெளியே போங்கள் என்று அந்த கோவிலின் பூசாரியும் கத்தினான்
இதையெல்லாம் கேட்டு நிஷாவிற்கு கோபம் வரவே பதிலுக்கு பதில் பேசி அது பெரிய வாக்குவாதமாக மாறிவிட்டது
அப்புறம் அருகில் உள்ள ஒரு பெண் தன்னுடைய வீட்டிற்கு கேத்திரின்னை அழைத்து சென்று (நாப்கின்) குடுத்து மாற்று துணியும் குடுத்து அனுப்பி வைத்தாள்

வெளியே வந்த கேத்திரின் கோவில் வாசலில் நின்று அந்த சாமியை பார்த்து தன்னுடைய மனதுக்குள்ளே பேசினாள்

பெண்களுக்கு மாதவிடாய் என்று ஒன்றை உடலில் ஏற்படுத்தியதே நீ தான் என்பதையே மறந்து என்னை வெளியே விரட்டுகிறார்கள் இந்த மனிதர்கள் என்று சாமியை பார்த்து கேட்டவாரு அங்கிருந்து நிஷாவுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள் கேத்திரின்
மறுநாள் தன்னுடைய வேலைக்கு சென்றாள் கேத்திரின்
ஆபிஸில் இருக்கும் அனைவரும் கேத்திரின்னை ஒரு மாதிரியாக பார்த்து தங்களுக்குள்ளயே பேசி கொண்டார்கள்.

கேத்திரின்க்கு ஒன்றும் புரியவில்லை பிறகு அருகில் இருப்பவரிடம் என்னா விஷயம் எதற்கு என்னை பார்த்து பார்த்து எல்லோரும் பேசுறிங்க என்று கேட்டாள்

அப்போது தான் அந்த நபர் தன்னுடைய போன்னில் கேத்திரின்க்கு கோவிலில் ஏற்பட்ட மாதவிடாயும் அவளை கோவிலை விட்டு வெளியே போக சொல்வதும் youtube ல் பதிவு செய்ய பட்டு இருப்பதை கேத்திரின்னிடம் காட்டினார்

அங்கு வேலை பார்க்கும் மற்ற பெண்கள் கேத்திரின்னை திட்டினார்கள் மாதவிடாய் வருதற்கு முன் தேதியை பார்த்து (நாப்கின்) கொண்டு வர தெரியாதா உனக்கு என்று சொல்லி திட்டினார்கள்
எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து அழுதாள் கேத்திரின்
அதன் பிறகு அவளால் அங்கு இருக்க முடியவில்லை ஆபிஸ்க்கு லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றாள் கேத்திரின்
கொஞ்ச தூரம் சென்றதும் வண்டியில் பெட்ரோல் காலியாகவும் இறங்கி வண்டியை உருட்டி கொண்டு பெட்ரோல் பங்கிற்கு சென்றாள் கேத்திரின்
பெட்ரோல் பங்கிற்கு நான்கு இளைஞர்கள் வந்தனர் அவர்கள் கேத்திரின்னை பார்த்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்

பெட்ரோல் போட்டுட்டு அங்கிருந்து கேத்திரின் கிளம்பி செல்ல அந்த இளைஞர்கள் பின்னாடியே துரத்தி வந்து
மேடம் பேண்ட் பின்னாடி ஈராமா இருக்குனு
பொது இடத்தில் வைத்து சத்தமாக சொல்லி கேலி செய்து விட்டு சென்றனர்
நடு ரோட்டில் நின்றே கேத்திரின் அழுது விட்டாள்.

[#மாதவிடாய்# part 3

நடு ரோட்டில் அழுத கேத்திரின்க்கு என்னா செய்வது என்றே புரியவில்லை
பிறகு தன்னுடைய துப்பட்டாவை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்

வீட்டிற்கு வந்ததும் முகத்தை கழுவி விட்டு TVஐ, போட்டாள் கேத்திரின்

கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த பெண்ணிற்கு திடீரென்று மாதவிடாய் ஏற்பட்டது
அதை பார்த்ததும் கோவிலில் உள்ள அனைவரும் அந்த பெண்ணை கோவிலில் இருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்கள்
அந்த சம்பவம் தொடர்பான வீடியோ youtubeல் வைரலாக பரவி வருகிறது
என்று TVயில் செய்தியாக வருவதை பார்த்து அதிர்ந்து போனாள் கேத்திரின்.

TVயை அனைத்து விட்டு அமைதியாக படுக்க சென்றாள் கேத்திரின் அப்போது அவள் அம்மா போன் செய்து கேத்திரின்க்கு ஆறுதல் கூறினாள்

உன்மேல் எந்த தப்பும் இல்லை திடீரென்று மாதவிடாய் ஏற்பட்டதுக்கு நீ என்னா செய்ய முடியும் எதை பற்றியும் கவலை படாமல் நிம்மதியாக இரு அம்மா இருக்கிறேன் உனக்கு என்று சொல்லி பேசி விட்டு போன்னை வைத்தாள்.

கேத்திரின் போட்டோவை வைத்து அனைவரும் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பார்த்து விட்டு கேத்திரின் தவறான முடிவை எடுத்தாள்

தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள துணிந்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் வேலை முடிந்து அறைக்கு வந்தாள் நிஷா.

கேத்திரின் கையை அறுத்துக்கொண்டு இரத்தம் வடிய மயங்கி கிடந்தாள்
இதை பார்த்ததும் பதறி போன நிஷா அருகில் உள்வர்களை உதவிக்கு அழைத்து கேத்திரின்னை மருத்துவமனையில் சேர்த்தாள்.

அதிக இரத்தம் வெளியேறியதால் மயக்கமாகவே இருந்தாள் கேத்திரின்.
ஒருவழியாக கேத்திரின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினார்கள்.

கேத்திரின்னை பார்க்க நிஷா உள்ளே வந்தாள்

பைத்தியாமா டி நீ 10 நிமிஷம் நான் லேட்டா நீ செத்துப்போய்யிருப்ப என்று நிஷா கோபமாக திட்டினாள்.

உன் அம்மாவை வர சொல்லுறேன் நீ கொஞ்ச நாள் ஊருக்கு போய் உன் வீட்டில் இருந்துட்டு வா என்று நிஷா சொன்னாள்.

அம்மாவிற்கு போன் செய்து நடந்த எதையும் சொல்ல வேண்டாம் நான் ஊருக்கு போனாலும் இந்த சமுதாயத்தில் எனக்கு ஏற்பட்ட அசிங்கம் என்னை விட்டு போகாது என்று கேத்திரின் கூறினாள்.

உன் வேதனை எனக்கு புரியுது டி
இன்னைக்கு உன்ன வச்சு மீம்ஸ் போட்டு கிண்டல் பேசுறாங்க நாளைக்கு வேற ஒரு விஷயம் கிடைத்ததும் அது பின்னால் ஓடிட்டு உன்ன மறந்துருவாங்க இதுதான் டி இன்றைய சமுதாயம் என்று நிஷா, கேத்திரின்க்கு ஆறுதல் கூறினாள்.

அப்பொழுதுதான் கேத்திரின் ஒரு விஷயத்தை நிஷாவிற்கு சொன்னாள்.
நான் கையை அறுத்துக்கிட்ட போது ஒன்று மட்டும் தான் மனதில் நினைத்தேன்
இப்படியே நான் இறந்து விட வேண்டும்
ஒரு வேலை நான் உயிர் பிழைத்தாள் என்னை இந்த சமுதாயத்தில் ஒருவன் கூட மறக்க கூடாது என்று நினைத்தேன்.

ஆனால் நீ இப்போ என்னை காப்பாற்றிட்ட நிஷா என்று கேத்திரின் சொல்லி முடித்தாள்.

எல்லாம் சரி டி தனியொரு பொண்ணா இருந்து உன்னால் என்னா டி பன்ன முடியும் என்று நிஷா கேட்டாள்.

எனக்கு ஒரு நல்ல வக்கீல் வேண்டும் என்று கேத்திரின் நிஷாவிடம் கேட்டாள்.

ஏன் எதற்கு என்று நிஷா கேட்டாள்.

தான் செய்ய போகும் வேலையை கேத்திரின் சொன்னவுடன் நிஷா அதிர்ந்து போனாள்.

(கேத்திரின் எடுக்க போகும் முடிவில் ஒட்டு மொத்த அரசாங்கமும், இந்த சமுதாயமும் அதிர்ச்சியில் உறையை போகிறது)

(இனி கேத்திரின் கேட்க போகும் ஒவ்வொரு கேள்விகளையும் இந்த கதையை படிக்கும் பெண்கள் நீங்கள் கேட்பதாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்)

(இயற்கையை சீண்டுவதும்,பெண்ணின் கோபத்தை சீண்டுவதும் ஆபத்து)

[#மாதவிடாய்# part 4

உடல் நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தாள் கேத்திரின்.
தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை கேத்திரின்க்கு அறிமுகம் செய்து வைத்தாள் நிஷா

தனக்கு நடந்த அனைத்தையும் கேத்திரின் வக்கீல் கிட்ட சொன்னாள்

நான் இப்போ உங்களுக்கு என்னா செய்ய வேண்டும் என்று வக்கீல் ஜீவா கேட்டார்

தன்னுடைய இயற்கை உபாதையை வைத்து கிண்டலும்,கேலியும் செய்து அதை விளம்பர படுத்தி பணம் சம்பாதிக்கும் இந்த கேடு கெட்ட சமுதாயத்தின் மீது வழக்கு போட வேண்டும் என்று கேத்திரின் வக்கீல்யிடம் சொன்னாள்

இதை கேட்டதும் வக்கீல் சிரித்து விட்டார்
உங்களுக்கு நடந்தது மனசு கஷ்டமான விஷயம் தான் நான் ஒத்துக்கிறேன்
ஆனால் இதுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் மேலேயும் வழக்கு போட சொல்லுறது சிரிப்பு தான் வருது என்று வக்கீல் கேத்திரின் கிட்ட சொன்னார்

எதுக்கு சார் சிரிப்பு வருது நான் யாருனு உங்களுக்கு தெரியாது எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அதனால்தான் எனக்கு நடந்த அசிங்கம் உங்களுக்கு வெறும் செய்தியா மட்டும் போச்சு
இதுவே உங்க குடும்பத்துல இருக்க ஒரு பொண்ணுக்கு இப்படி நடந்து அந்த பொண்ணு வெளியே போகும்போது எல்லாம் உன் பேண்ட் ஈராமா இருக்கு, தக்காளி சட்னி தொடையில் ஒட்டி இருக்கு இப்படியெல்லாம் அடுத்தவங்க பேசுறதா உங்க வீட்டு பொண்ணு உங்ககிட்ட சொன்னா இப்படி தான் சிரிப்பிங்களா சார்
என்று கேத்திரின் ஆக்ரோஷமாக கேட்டாள்.

வக்கீல் அமைதியாக இருந்தார்.

ஏற்கெனவே பொண்ணுங்க நாங்க மாதவிடாய்னு ஒரு விஷயத்துல மாதம் மாதம் வலியில் செத்து பிழைக்கிறோம்
அந்த வலி பத்தாதுனு வார்த்தை எனும் கொடுமையான விஷத்தை எங்க மேல துப்பி மேலும் மேலும் வலியை குடுக்கிறாங்க சார் இந்த சமுதாயத்தில் உள்ள மனுசங்க
இதற்கு நியாயம் கேட்டு வழக்கு போட வந்தால் கூட நீங்களும் சிரிச்சு தானே சார் எங்கள அசிங்க படுத்தி காயபடுத்துறிங்க என்று வக்கீல்யிடம் சொல்லி அழுது கொண்டே கேத்திரின் எழுந்து வெளியே சென்று விட்டாள்.

மறுநாள் காலை கேத்திரின்னை பார்க்க அவள் வீட்டிற்கு வந்தார் வக்கீல் ஜீவா

என்னை மன்னித்து விடு மா நீ சொல்லுகிற மாதிரி நான் சமுதாயத்தின் மீது வழக்கு போட்டால் நீ ஒரு பொண்ணாக இருந்து கோர்ட்டில் எதிர்த்து வாதாட முடியாது அது ரொம்ப கஷ்டம் உன்ன கேள்வி கேட்டே கொன்றுவாங்க மா என்று வக்கீல் கேத்திரின்யிடம் சொன்னார்

ஆனால் கேத்திரின் விடுவதாக இல்லை ஏற்கெனவே இந்த சமுதாயம் என்னை கொன்று விட்டது சார்
என்னைப்போல் இன்னோர் பெண்ணிற்க்கு இப்படி ஒரு விஷயத்தை யாரும் செய்ய கூடாது அப்படி செய்தால் தண்டனை எப்படி இருக்கும் என்று இந்த உலகிற்கு காட்ட வேண்டும் அதற்காக இந்த வழக்கை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் போட சொல்கிறேன் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சேர்த்து தான் போராட போகிறேன் இன்னைக்கு நான் தனியாக தான் கோர்ட்டுக்குள் நுழைவேன்
ஆனால் வழக்கு முடிந்து வெளியே வரும் போது ஒட்டு மொத்த பெண்களும் என்னோடு சேர்ந்து வெளியே வருவார்கள்
தயவுசெய்து இந்த வழக்கை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று கேத்திரின் சொல்லி முடித்தாள்.

தனியொரு பெண்ணாக இந்த சமுதாயத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் நீ போராட போற உன்னுடைய எண்ணத்திற்காக இந்த வழக்கை நான் பதிவு செய்யுரேன் என்று சொல்லி விட்டு வக்கீல் அங்கிருந்து கிளம்பினார்.

(கேத்திரின் நீதிமன்றத்தில் கேட்க போகும் கேள்விகளும்,சொல்ல போகும் விஷயங்களும் வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் பூட்டி வைத்து தினம் தினம் கண்ணீர் சிந்தும் பெண்கள் உங்களுடைய வலியும், வேதனையும் தான்.)
கோர்ட்டில் சந்திப்போம்.)

[#மாதவிடாய்# part 5

கேத்திரின் போட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசாங்க வழக்கறிஞர் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் அவர் பெயர் அருண்.

அருண்; மிஸ்.கேத்திரின் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் நீங்கள் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் எதற்கு என்று கொஞ்சம் அனைவருக்கும் சொல்ல முடியுமா??

கேத்திரின்; 10 நாட்களுக்கு முன்பு எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது அப்போது நான் கோவிலுக்குள் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்ட பெண் கோவிலுக்குள் இருந்தால் தீட்டு என்று என்னை வெளியே போக சொன்னார்கள். இந்த நிலையில் எப்படி வெளியே போக முடியும் என்று எனக்காக என் தோழி நிஷா கோவிலில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்தாள்
அதன் பின் அங்குள்ள இன்னோர் பெண் எனக்கு (நாப்கின்) குடுத்து மாற்று துணியும் குடுத்து அனுப்பி வைத்தார் என்று தனக்கு நடந்ததை கேத்திரின் நீதிமன்றத்தில் கூறினாள்.

அருண்; மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாகவே உடலில் ஏற்பட கூடிய விஷயம் தானே மாதவிடாய் ஆக போகிறது என்று தெரிந்தவுடனே நீங்கள் கழிப்பறைக்கு சென்றிருக்கலாமே எதற்காக உங்கள் உடையில் இரத்த கறை படியும் வரை நின்றீர்கள் மிஸ்.கேத்திரின்

கேத்திரின்; பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது ஆண்களுக்கு அவசரமாக வரும் urine (சிறுநீர்) போல இல்ல சார் வந்ததும் வேகமாக கழிப்பறையை தேடி ஓடவோ இல்லை மரத்திற்கு பின்னால் ஒழியவோ
அடி வயிற்றில் ஒரு வித வலியை ஏற்படுத்தி அந்த வலி தலைக்கு ஏறி தன் நிலை கூட தெரியாமல் ஒரு வினாடி மயக்கத்தை குடுத்து நாங்களே கட்டுப்படுத்த நினைத்தாலும்அதை தடுக்க முடியாமல் வயிற்றில் உள்ள கற்ப பையை சுண்டி இழுத்தவாறு வெளியே வரும் சார் அந்த இரத்தம் அது தான் நீங்கள் சொன்னிங்கிளே கழிப்பறையை தேடி ஓடி இருக்கலாம் என்று அந்த மாதவிடாய் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் மாதவிடாய் இப்படி தான் இருக்கும்
இப்போ நீங்க சொல்லுங்க சார் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் எந்த ஆணாவது இருந்திருக்கிறீர்களா???

அருண்; சரி உங்கள் வலி பெரியது தான் ஒத்துக்கொள்கிறேன் அதற்க்காக எதுக்கு இப்படி சமுதாயத்தின் மீது ஒரு வழக்கை தொடர்ந்துள்ளீர்கள்

கேத்திரின்; எனக்கு ஏற்பட்ட இந்த இயற்கை உபாதையை வீடியோவாக எடுத்து சமூக வளைதளங்கில் விட்டு
மாதவிடாய் ஏற்படும் போது ஒரு பெண் கோவிலில் இருப்பது சரியா?தவறா? என்று பல செய்தி சேனல்கள் வாக்குவாத மேடை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அத உலகத்தில் இருக்கிற மக்கள் எல்லோரும் என் முகத்தோட அந்த வீடியோவையும் பார்த்து இருக்காங்க
இதுனால அவமானம் தாங்க முடியாம தற்கொலை முயற்சியும் செய்து அதிலிருந்து உயிர் பிழைத்து ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் ஒரு வழக்கை தொடர்ந்து விட்டு இன்னைக்கு இங்க வந்து நிக்கிறேன் எதற்காக தெரியுமா என்னை கேலியும்,கிண்டலும் செய்தது போல் வேறு பெண்ணிற்கு நடந்தால் அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்வதற்காக தான் இந்த வழக்கை நான் தாக்கல் செய்தேன்.

அருண்; வெளியே செல்லும் போது மாதவிடாய் ஏற்பட்டால் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்கிறீர்கள் வேறு எந்தவொரு பெண்ணும் இதுபோன்ற வழக்கை புகாராக எங்கேயும் அளிக்க வில்லை மிஸ்.கேத்திரின்

கேத்திரின்; எந்த பெண்ணும் துணிந்து தன்னுடைய வலியை சொல்ல இப்படி ஒரு புகாரை குடுக்க வர மாட்டாள் சார்
ஏன் தெரியுமா வீட்டு படியை தாண்டினால் குடும்ப மானம் போய்விடும்
கோர்ட்டின் படியை மிதித்தாள் குடும்பத்திற்கு உயிரே போய்விடும் இப்படி சொல்லி தான் சார் எல்லா பெண்களையும்
சிறகு முறிந்த பறவையா அடக்கியே வச்சுருக்கிங்க

(அடுத்த கேள்வி??)

(கதையின் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் பகுதியில் பதிவு செய்துள்ளேன் தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே நன்றி)