...

1 views

மாலை நேரத்து மயக்கம்



அத்தியாயம் 1

மாலை நேரத்து மயக்கம்




அந்த மாலை வேளையில் நடைபாதை எல்லாம் ஆட்கள் கூட்டம் சூழ அந்தப் பகுதி மக்கள் வெள்ளம் போல் காட்சி அளிக்க. திருநெல்வேலியின் அடையாளம் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதி எப்பொழுதும் யாரும் இல்லா இருக்க விரும்பா இடம் அங்கே தனியே நின்று கொண்டு இருந்தான் கதையின் நாயகன் வர்மா. கல்லூரி படித்து வரும் அவன் மாலை வேலையில் ஃபுட் டெலிவரி பையன் ஆக ஏழை செய்து கொண்டு இருக்கிறான்,




திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் ஆற்றின் கரையில் தான் நண்பன் சதீஷ் வரக் கூறியதால் காத்து கொண்டு இருக்கிறான், இந்த இடம் தான் இருவருக்கும் மிகவும் பிடித்த இடம், பள்ளி காலம் முதல் இப்பொழுது வரை இவர்கள் இங்கே தான் சந்திப்பார்கள் காரணம் இருவர் வீடும் இந்த ஆற்றின் இரு பக்கமும் இருக்கிறது. வெவ்வேறு கல்லூரியில் படித்தாலும் பள்ளிக்கூடத்து நட்பு அல்லவா அதனால் இருவரும் இன்றுவரை ஒன்றாகச் சுற்றி வருகிறார்கள்.




நேரம் கடந்து செல்லச் செல்லச் சதீஷ் வரத் தாமதம் ஆகி கொண்டே இருக்க அவனிற்கு கால் செய்து பார்க்க நினைதான் அப்பொழுது அங்கே குரல் கேட்கத் திரும்பிப் பார்க்கச் சதீஷ் நடந்து வந்து கொண்டு இருந்தான் அவனும் வர்மா போல் டெலிவரி உடை அணிந்து வந்தான் இருவரும் அங்கே நின்று பேசிக் கொண்டு இருக்க அப்பொழுது




சதீஷ் மொபைல் அடிக்கத் தொடங்கியது அதில் சுரேஷ் என்னும் பெயர் வர அதைக் கட் செய்து விட்டுப் பேசத் தொடங்கினான் நாளைக் காலையில் கேம்பஸ் இன்டர்வியூ இருப்பதாகவும் வெளி கல்லூரி மாணவர்கள் வர அனுமதி இருப்பதாகவும் சதீஷ் கூற வர்மா நானும் வரவா எனக் கேட்டான் அப்பொழுது பதில் சொல்லும் முன் சதீஷ் கக்கு சுரேஷின்அழைப்பு வரக் கோவம் கொண்டு எடுத்து அவனிடம் கத்தினான் அதான் இத்தனை வருஷம் நட்பு இல்லை இனிமேல் பார்க்காத சொல்லிட்டு போன இப்போ எதுக்கு இத்தனை முறை கால் பண்ற




சதீஷ் நீ அந்த ஆற்றங்கரை பக்கமா இருக்க உனக்குப் பின்னாடி வர்மா இருக்கானா எனக் கேட்க அதற்க்கு ஆமாம் ஐபிஓ எதுக்கு நே இதைக் கேட்க ஆமா நாங்க இங்க தான் இருக்கோம் நு உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்க நானும் அங்க தான் இருக்கேன் உங்களைத் தேடி தான் வந்தேன் நு சொல்லிட்டு




ரெண்டு பெரும் இருக்கிற இடம் நோக்கிச் சுரேஷ் வந்தான்




சுரேஷ் வருவதை பார்த்து வர்மா மிகவும் கோவம் கொண்டான். வர்மா அருகில் வந்த சுரேஷ் சாரி டா ரெண்டு பேருக்கும் அன்னைக்கு நடந்ததுக்கு நான் மட்டும் காரணம் இல்லை டா எனக் கூறும் முன் கை நீதி வர்மா போதும் சுரேஷ் நீ ஏதும் பேசவேணாம் அந்தக் கீதா சொல்லித் தான் எங்கட்ட நீ பேசல இதுக்கு மேல நீ எங்கத்த எதும் பேச வேணாம் வாச்சதீஷ் கிளம்பலாமெனக் கூறி விட்டு இருவரும் நடந்து செல்ல நினைக்கையில் அவர்களுக்கு முன்னே வந்து பேச முயன்றான். அவர்கள் அதைக் கண்டுகொல்லாமல் கடந்து செல்ல ரம்யா உண்ண பாக்கணும் நு வந்து கேட்டா டா அதுக்கு கீதா உண்ண பார்க்க விடமாட்டேன் என்று சொல்லி இருக்கா நீ உடனே ரம்யாவ போய்ப் பாரு டா அதை நான் ஃபோன் லச்சொல்லத் தான் உனக்குப் போன் செஞ்சேன் நீ எடுக்கலை. ரம்யா என்ற பெயர் கேட்டவுடன் வர்மா அப்படியே நின்று விட்டான், அது மட்டும் இல்லை உனக்கும் கீதாக்கும் என்ன பிரச்சனை கீதா உனக்கு எதிரா ஏதாவது செஞ்சிட்டே இருக்கா எனக் கூற நடுவில் வந்த சதீஷ் ஓங்கி அடித்தான் சுரேஷ் எதற்க்கு அடிச்சானெனப் புரியாமல் சதீஷ் யைப்பார்க்க இது அந்தக் கீதா பேச்சைக் கேட்டுப் போனதுக்கு எனக்குக் கூறி மீண்டும் அடிக்கத் தொடங்கினான்




இவர்கள் சந்தை போட்டுக் கொண்டு இருக்க வர்மா மனதில் பல கேள்விகள் நகர்ந்து கொண்டு இருக்க விரு விரு எனத் தான் இரு சக்கர வாகனம் நோக்கிச் செல்ல அவன்பின் இருவரும் ஓடினர்.




வர்மா மனதில் 3 வருடம் முன் நடந்த சில நிகழ்வுகள் தோன்றி மறைந்தன. வர்மா முன்னே செல்ல இருவரும் வேறொரு இருசக்கர வாகனதில் சென்று கொண்டு இருந்தனர்




ரம்யா தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி கொண்டு இருந்தால் எல்லோரும் பாளையம் கோட்டை யில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் தான் படித்து வருகின்றனர்




இதில் ரம்யா கீதா பிஏ ஆங்கிலம் படித்து வர வர்மா சுரேஷ் பிபிஇடி உடற்கல்வி படிப்பு படித்து வருகின்றனர் சதீஷ் மட்டும் வேறொரு கல்லூரியில் படித்து வருகிறான்




எல்லோரும் அந்தக் கல்லூரியில் நடக்கும் நிகழச்சியில் தான் ஓவருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டனர்




இப்பொழுது ரம்யா அங்கே தான் இருப்பாளென நினைத்து அங்கே சென்று கொண்டு இருந்தான் வர்மா




வர்மா நினைத்தது போல ரம்யா கீதா அந்த விடுதி அருகில் இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து தேநீர் குடித்து கொண்டு இருந்தனர்




ரம்யா கீதவிடம் எதற்க்கு வர்மா வப்பாக்க போக வேணாமெனச் சொல்ற எதுனா காரணம் இருக்க எனக் கேட்க அது எல்லாம் ஒன்றும் இல்லையெனக் கீதா கூறி சமாளித்தல்




அனால் ரம்யா மனதில் ஏதோ ஒரு நெருடல் இருக்க அதைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தால் அதற்க்குள் வர்மா அந்தக் கடை அருகே வந்து ரம்யா எங்கே இருக்கிறாளெனத் தேட அவன் கண்களுக்குக் கீதா தென் பட அதைக் கண்டவுடன் அங்கே தான் ரம்யா இருப்பாளென அறிந்து அங்கே சென்றான்




அங்கே வர்மா வருவதை பார்த்த கீதா திடுகிட்டாள் ரம்யா இரு விழிகளில் வர்மா வருவதை கண்ட உடன் மனதில் ஏதோ புரியாத எண்ணம் அருகில் வர வரக் கீதா தடுத்தால் எதற்க்கு வர்மா இங்கே வந்த ரம்யா உன்னைப் பார்க்க விரும்பல நீ கிளம்பலாமெனக் கூற கோவத்தில் இருந்த வர்மா கீதாவை அறைந்தான் அதைக் கண்ட அந்தக் கடை உரிமையாளர் திடுக்கிட்டுப் போக அருகில் இருந்த ரம்யா பயந்து போனால் அருகில் வந்த வர்மா ரம்யா வைக்கண்டு பயப்பட வேணாம் கீதாகக்கும் எனக்கும் பழைய கணக்கு ஒண்ணு இருக்கு எனக் கூறி விட்டு ரம்யா விடம் பேச அங்கே அமர்ந்தான் கீதா அடிவாங்குவதை பார்த்த சுரேஷ் வர்மா மீது கோவம் கொண்டு வர்மா விடம் என்ன என்று கேட்க வந்தான் அதற்க்குள் சதீஷ் அவனைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைக்க ரம்யா விடம் வர்மா பேசத் தொடங்க அப்பொழுது கீதா அருகில் வர ஒரு பார்வை பார்த்தபோது அமைதியாக நின்றாள்




வர்மா ரம்யா வின் கண்களை நேராகப் பார்த்து ரம்யா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கொஞ்ச நாள் தான் இந்தக் காலேஜ் முடிஞ்சுரும் சீக்கிரம் எங்கயாவது வேலை கிடைக்கும் அதுவரை நான் என்னோட காதலை உன்கிட்ட சொல்லப் போறது இல்லை எனக்குச் சரியான பிடிமானாம் இல்லாம உனக்கு நான் நம்பிக்கை கொடுக்க முடியாது எனக்கும் தெரியும் நீ என்ன விரும்புற ஆனாலும் ரெண்டு பேரும் காதலை சொல்லுற நிலமையில இல்ல ரம்யா எனக்கு எனக்கு உன்னை அவளோ பிடிக்கும் உன்னைப் பார்க்கும்பொழுது எல்லாம் என்னோட காதலை சொல்லத் தோணும் ஆனா எனக் கூறி முடித்தான்




எல்லோரும் வர்மா கூறுவதை கேட்டுத் திகைத்துப் போய் நிற்க ரம்யா அவனை வந்து அனைத்து கொண்டால்




கீதா அருகில் பொறாமை யுடன் வர்மா ரம்யாவை பார்த்துக் கொண்டு இருந்தால். ரம்யா வர்மா வை இறுகி அனைத்து தன் காதலை வெளிபடுத்த வர்மா என்ன கூற எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான். அந்த மாலை பொழுது எப்படியோ ஆரமித்து இருவரின் அணைப்பிள் முழுமை பெற்றது




மறுநாள் காலை ரம்யா கீதாவுடன் கல்லூரி செல்ல எல்லோரும் ரம்யாவை பார்த்துச் சிரித்து கொண்டு போனார்கள்




எல்லோரும் எதற்க்கு சிரிக்கிறார்கள் எனத் தெரியாமல் ரம்யா குழப்பதில் அவளின் வகுப்பறை சென்று அமைதியாக அமர்ந்து இருந்தால் அவள் அங்கே தனியாக இருப்பதை கண்ட அவள் வகுப்பின் மாணவ மாணவி கூட்டம் ஒன்று அவள் அருகில் வந்து என்ன ரம்யா வர்மா மேல ஆம்பூட்டு காதலா நேத்து அவனை அப்டி கட்டி புடிச்சுட்டு நிண்நியாமே வர்மா உனக்கு வித்தியாசமா காதலை சொன்னான் நு கேள்வி பட்டேன் எனச் சிரித்து கொண்டே கூற அதில் ஒருவன் உணக்கு வேற யாரும் கிடைக்க வில்லையா அவனைப் போய்க் காதலிக்கிற சாய்ங்காலம் டெலிவரி வேலை பார்த்துட்டு இருக்கிற அவனைப் போய்க் காதலிக்கிற எனக் கூறி எல்லோரும் சிரிக்க யார் இதை எல்லாம் கூறி இருப்பார்கள் என ரம்யா யோசித்து கொண்டு இருந்தால் அங்கே எல்லோரும் ரம்யா வைக்கேலி செய்து கொண்டு இருக்க அப்பொழுது அவளின் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வர அதைத் திறந்து பார்த்தால் அதில் சுரேஷ் கீதா அனுப்பி இருந்த வீடியோவை எல்லோருக்கும் அனுப்பும்பொழுது ரம்யா விற்கும் அனுப்பி இருக்கிறான் அப்பொழுது தான் தெரிய வரக் கீதா தான் கூடவே இருந்து இதைச் செய்து இருக்கிறாள்.




ரம்யா வர்மா காதல் கீதா மூலம் கல்லூரி முழுவதும் தெரிய வர அதனால் ரம்யா மிகவும் மன உளைச்சல் ஆளாக்கப் பட்டால்.




இங்கே நடப்பது எதும் அறியாமல் வர்மா சதீஷ் சதீஷ் கல்லூரியில் நடக்கும் கேம்பஸ் இன்டர்வியூ செல்ல அங்கே மதியம் மூன்று மணிமேல் ஆகி விட்டது




வர்மா வீட்டிற்கு வந்தபிறகு தான் ரம்யா தனக்கு பல முறை கால் செய்து இருக்கிறாளெனத் தெரிய அவன் அவளுக்கு அழைக்க முயன்றான் அப்பொழுது ரம்யா விடமிருந்து கால் வர அதை எடுக்கிறான் அப்பொழுது அவள் கூறுவதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைகிறான்…

வர்மா காதில் கைபேசி வைத்துக் கொண்டு அவளின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனான். 
© அருள்மொழி வேந்தன்