...

14 views

அதே குரல்
ஒரு அழகான குடும்பம் அந்த குடும்பத்துல 3 பெண் குழந்தை 2 ஆண் குழந்தை பிறந்தது..அப்பா பெயர் ராமன் அம்மா பெயர் ராமாயி இந்த குடும்பம் ரொம்ப வறுமைல இருந்தாலும் இவுங்க கிட்ட இருக்கிறத வச்சு சந்தோசமா இருந்தார்கள் ..இவுங்க வேலை விவசாயம் .. அந்த ஊருல தண்ணி பஞ்சம் அதுனால விவசாயம் கூட ஒழுங்கா பாக்க முடில இவுங்க ஊரு பேரு தஞ்சம் பட்டி .. இந்த ஊருக்கு ஏத்த மாறி தான் இவுங்க வாழ்க்கையும் தஞ்சமா இருக்கு.. இந்த ஊருல எதும் கிடைக்காது தெரிஞ்சதும் நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஊருல குடி போரங்க .. அந்த ஊற பத்தி தெரியமா தப்பு செஞ்சுடங்க அந்த ஊரே மயான அமைதி ஆ இருந்துச்சு அங்க இருகவுங்க கிட்ட பேச போறாங்க ஆனால் யாருமே வீட்ட விட்டு வெளிய வரல ..வெளிய வர ரொம்ப பயந்து போறாங்க ..இவுங்க அங்க இருக்க ஒரு வீட்ல குடி ஏறிட்டாங்க ..பெரிய பொண்ணுகு 23 வயசு ரெண்டாவது பொண்ணுக்கு 21 வயசு மூணாவது பொண்ணுக்கு 19 வயசு நாலாவது பையனுக்கு 16 வயசு அஞ்சாவது பையனுக்கு 12 வயசு ஆகுது .. ராணி , சுமதி,சுகந்தி, நந்தா ,வேலன்.. இந்த ஊரு பேரு சக்கரபட்டி ..ஊரு பேரு நல்லா இருக்கு இங்க இருக்கிற மக்களும் நல்லா இருப்பாங்கன்னு நெனச்சா அது தான் பெரிய தப்பு ..இந்த ஊரு மக்கள் இரவு நேரத்துல ரொம்ப விசித்திரமாக நடந்துகறாங்க ஒரு எடத்துல மொத்தமா ஒன்னு கூடி ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லிட்டு இருந்தாங்க .. அந்த கூட்டத்துல யாரும் யார பக்கவே கூடாது அப்படி பார்த்த அவன் வந்து அடிப்பான் அப்டின்னு அந்த கூட்டத்துல ஒருத்தர் மொணங்கிகிடு இருந்தாரு இத பாத்த ராமன் குடும்பத்துக்கு ஒண்ணுமே புரியல ..இவுங்களும் அந்த கூட்டத்துக்கு போக தயாரா இல்ல .. மறுநாள் காலைல மக்கள் பலய நிலமைக்கு திரும்புறாங்க .ஆனாலும் அந்த மக்கள் யாருகுடயும் பேசவே இல்ல… இந்த வீட்ல இருக்க கடைசி பையன் வேலன் ரொம்ப சுட்டி தனம் பண்ணுவான் அதுனால அவன் ஒரு காட்டுக்குள்ள போய் விளையாடிட்டு இருந்தான் அங்க ஒரு சின்ன பொண்ணு நானும் உன்கூட சேந்துகிறே சொல்லுச்சு அந்த பொண்ணு பேரு சுகிதா ...அந்த பையன் கொஞ்சம் நேரம் கழிச்சு வீட்டுக்கு போறேன் அம்மா நான் இன்னைக்கு ஒரு பொண்ணு கூட விளையாடிட்டு இருந்தேன் அந்த பொண்ணு பேரு சுகிதா .. எந்த இடத்தில அப்டின்னு அம்மா கேட்டாங்க அதுக்கு அந்த பையன் நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கிற காட்டுல அப்டின்னு சொன்னான் ...இத கேட்ட அம்மாக்கு கை கால் ஒதர ஆரம்பிச்சுருச்சு …நம்ம வீட்டுக்கு பின்னாடி எந்த காடும் இல்லடா வெறும் தரிசு நிலம் மட்டும் தான் இருக்குனு சொன்னாங்க .. ஆன அந்த சின்ன பையன் இத கொஞ்சம் கூட பெருசா எடுகுதவே இல்ல ...அதே மாறி அடுத்த நாள் விளையாட போரான் அங்க போய் அந்த பொண்ணு கிட்ட நீ எங்க வீட்டுக்கு வா அப்டின்னு கூப்டுரன் … ஆன அந்த பொண்ணு வேண்ட எங்க அம்மா திட்டுவாங்க நா வர மாட்டேன் அப்டின்னு அந்த பொண்ணு சொல்லுது இந்த பையன் அத கேட்காம அந்த சுகிதாவ வீட்டுக்கு கூட்டிட்டு போரான் அந்த பொண்ணும் அவன் கூட போரா… அம்மா கிட்ட அம்மா. நா சொல்லும் போது நீ நம்பல இப்ப பாரு இந்த பொன்ன நா கூட்டிட்டு வந்திடெனு சொல்றான் … ஆன அவன் பக்கத்துல எந்த பொண்ணும் இருக்கிற மாறி அவுங்க அம்மாவுக்கு தெரில ...இருந்தாலும் அவுங்க அம்மா எங்க இருக்கா அந்த பொண்ணு அப்டின்னு கேட்டாங்க … அந்த பையன் அவ உன் முன்னாடி தான் நிக்கிரானு சொல்றான் ...அவுங்க அம்மாக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அதுனால அவ வீட்டுக்காரர் ராமன் கூப்டு சொல்ற … அவுங்க அப்பா வேலன் கிட்ட அந்த பொண்ணு பேரு என்னனு கேக்குறாங்க அவனும் சுகித்தனு சொல்றான்.... ( அடுத்து என்ன ஆகிருக்கும் நு நீங்க சொல்லுங்க) ... தொடரும்...